Saturday, December 19, 2015

சத்துணவு அமைப்பாளர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


வேலூர் மாவட்ட சத்துணவு மையங்களில் அமைப்பாளர் பணிக்கு தகுதியானவர்கள் வியாழக்கிழமை (டிச.17) முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 370 சத்துணவு அமைப்பாளர் பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பொதுப் பிரிவினர், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் 21 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பழங்குடியினத்தவர்கள் எட்டாம் வகுப்பு படித்திருப்பதுடன், 18 முதல் 40 வயதுக்குள்ளும், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். நியமன பணியிடத்திலிருந்து விண்ணப்பிப்பவர்கள் 3 கி.மீ. தொலைவுக்குள் இருத்தல் அவசியம். விண்ணப்பத்துடன் வயது, கல்வித்தகுதி, ஜாதி, இருப்பிடத்துக்கான நகலை இணைக்க வேண்டும். ஏற்கெனவே விண்ணப்பித்திருந்தாலும் அனைத்துச் சான்றிதழ்களுடன் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு வரும் போது அசல் சான்றிதழ் எடுத்து வர வேண்டும்.
விண்ணப்பத்தை வியாழக்கிழமை (டிச.17) முதல் வருகிற 31-ஆம் தேதி மாலைக்குள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Friday, October 2, 2015

TNPSC - GROUP IV NOTIFICATION


நில அளவர், தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 4963 பணியிடங்களுக்கு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப்-4 தேர்வுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இளநிலை உதவியாளர் (பிணையம்) (39),
இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) (2133),
வரித் தண்டலர் (22),
தட்டச்சர் (1683),
சுருக்கெழுத்து தட்டச்சர் (331),
மற்றும் நில அளவர் (702),
வரைவாளர் (53)
என மொத்தத்தில் 4,963 காலிப்பணியிடங்கள் ஆகும்.
இந்த தேர்விற்கு குறைந்தப்பட்சக் கல்வித் தகுதி எஸ்.எஸ்.எல்.சி. ஆகும். குறைந்தபட்ச வயது 18ஆக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட வேண்டிய
கடைசித் தேதி நவம்பர் 12 ஆகும்.
கட்டணம் செலுத்தக் கடைசி நாள் நவம்பர் 14 ஆகும்.
தேர்வு டிசம்பர் 12ஆம் தேதி காலை நடைபெற உள்ளது.
மாவட்டத் தலைமையிடங்கள் மற்றும் தாலுகாக்கள் உள்ளிட்ட 244 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.netஎன்ற தேர்வாணைய இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
நிரந்தரப் பதிவில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து,
இப்பதவிகளுக்குரிய இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
நிரந்தரப் பதிவு செய்யாத
விண்ணப்பதாரர்கள் நேரடியாக முழு விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
நிரந்தர பதிவில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து மட்டுமே விலக்களிக்கப்படத் தகுதியானவர்கள் ஆவர்.
மற்றவர்கள் அந்தந்த வகுப்பிற்கு வழங்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணங்களை இந்தியன் வங்கி கிளைகள் மற்றும் அஞ்சலகங்களில் செலுத்த வேண்டும்.
பணம் செலுத்திய ரசீதை விண்ணப்பித்த இரண்டு நாட்களுக்குள் செலுத்திவிட வேண்டும்.
இணையத்தின் மூலமாகவும் செலுத்தலாம்.
இதுகுறித்த சந்தேகங்களை 044 - 25332855, 044 - 25332833
மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002 இல்
தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

Thursday, April 2, 2015

பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய, மாநில அரசுத் துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் அதிகமான பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அந்த பணியிடங்களை நிரப்ப மத்திய, மாநில அரசுகள் தேர்வாணையங்கள் மூலம் போட்டித் தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகின்றன.  என்று அழைக்கப்படும் (யு.பி.எஸ்.சி) மருத்துவப் பணி மற்றும் பொறியாளர் பணிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை அறிவித்துள்ளது. 
மருத்துவப் பணி:
மத்திய அரசுப் பணியில் சேர வேண்டுமானால் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகள் தேர்வெழுதி (Combined Medical Services Exmn) நேரடியாக ரயில்வே துறையில் உதவிக் கோட்ட மருத்துவ அதிகாரி, இந்திய ஆர்டினன்ஸ் ஃபேக்டரி சர்வீசஸ் சுகாதாரப் பணியில் உதவி மருத்துவ அதிகாரி, மத்திய அரசின் சுகாதாரப் பணிகளில் மருத்துவ அதிகாரி, தில்லி மாநகராட்சி மருத்துவ அதிகாரி போன்ற பணிகளில் சேரலாம்.
தமிழக அரசுப் பணியில் சேர வேண்டுமானால் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக அசிஸ்டென்ட் சிவில் சர்ஜன் பணியில் சேரலாம். பொது மருத்துவம், மருத்துவக் கல்வி, கிராமப்புற சுகாதாரப் பணி எனக் குறிப்பிட்ட துறைக்குப் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தகுதி: ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகளுக்கான தேர்வை எழுத குறைந்தபட்ச கல்வித்தகுதியாக எம்.பி.பி.எஸ். படிப்பு. இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கு 32. ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி அடிப்படையில் நடைபெறும் தேர்வில் மருத்துவப் பாடங்கள் சம்பந்தப்பட்ட 2 தாள்கள் இருக்கும். ஒவ்வொரு தாளுக்கும் தலா 250 மதிப்பெண் வீதம் மொத்தம் 500 மதிப்பெண்கள். முதல் தாளில் பொது அறிவு தொடர்பான 30 வினாக்களும், பொது மருத்துவம் தொடர்பான 70 வினாக்களும், குழந்தை மருத்துவத்தில் 20 வினாக்களும் இடம்பெறும். நேர்முகத் தேர்வுக்கு 100 மதிப்பெண். இரண்டாம் தாளில் அறுவை சிகிச்சைக்கு 40 வினாக்களும், மகப்பேறு மருத்துவத்தில் 40 வினாக்களும், வரும்முன் காப்பது மற்றும் சமூகநல மருத்துவம் தொடர்பாக 40 வினாக்களும் இடம்பெறும்.
ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகள் தேர்வுக்கு மருத்துவம் படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரை தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகளுக்கான போட்டித் தேர்வை யு.பி.எஸ்.சி. ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் ரயில்வே உதவி கோட்ட மருத்துவ அதிகாரி பணியில் 600 காலியிடங்களும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தளவாடத் தொழிற்சாலை மருத்துவ சேவை மையத்துக்கு 39 இடங்களும், ஜூனியர் ஸ்கேல் போஸ்ட் இன் சென்ட்ரல் ஹெல்த் சர்வீஸில் 391 இடங்களும், டெல்லியின் கிழக்கு, வடக்கு, தெற்கு மாநகராட்சிகளுக்கு கிரேடு 2 மருத்துவ அதிகாரி பணிக்கு 372 இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2015

பொறியாளர் பணி:
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் அண்ட் டெலிகம்யூனிகேஷன் ஆகிய பணியிடங்களுக்கு மொத்தம் 475 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்திய ரயில்வே, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் வரும் தளவாடத் தொழிற்சாலை மற்றும் தில்லி மாநகராட்சிக்கு பணிக்கு இவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.021.2015 ஆம் தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2015
மேலும் தேர்வுக் கட்டணம், தேர்வு செய்யப்படும் முறை, தேர்வுக்கான பாடத்திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Saturday, March 7, 2015

இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

டேராடூனிலுள்ள ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் 2016-ம் கல்வியாண்டுக்கான 8-ம் வகுப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2003 ஜன.2 மற்றும் 2004 ஜூலை 1-ம் தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் பிறந்தவராகவும், 2016 ஜன.1-ம் தேதி அன்று 7-ம் வகுப்பு படித்து கொண்டிருப்பவராக அல்லது முடித்தவராக உள்ள மாணவர்கள் இக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்.
தகுதித் தேர்வு விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பை பொதுப் பிரிவினர் பதிவஞ்சலில் பெற ரூ.430, துரித தபாலில் பெற ரூ 480, பட்டியல் மற்றும் அட்டவணை இனத்தவர் பதிவஞ்சலில் பெற ரூ.385, துரித தபாலில் பெற ரூ. 435, THE COMMANDANT DEHRUN என்ற பெயரில் டேராடூன் பாரத ஸ்டேட் வங்கியில் மாற்றத் தக்க வகையில் காசோ லை (டிராப்ட்) எடுத்து அதனை கமாண்டன்ட், ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூ ரி, டேராடூன் - 248 003 உத்திரகாண்ட் என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பம் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் தமிழ்நாடு அரசு பணியாளார் தேர்வாணையம், சென்னை-3 என்ற முகவரிக்கு மார்ச் 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு ஜூன். 1,2, ஆகியத் தேதிகளிலும், வாய்மொழித் தேர்வு அக்.6-ம் தேதி நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு THE COMMANDANT DEHRUN இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

Saturday, February 14, 2015

காந்திநகரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் 2015ம் கல்வியாண்டுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்:
எம்.டெக்., (சிவில், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மெட்டிரியல் சயின்ஸ்)
தகுதி:
இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பி.டெக்/பி.இ ஆகிய படிப்பில் ஏதாவதொன்றில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கேட் நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண், நேர்முகத்தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
உதவித்தொகை:
முழுநேர எம்.டெக்., படிப்புக்கு மாதம்தோறும் ரூ.8 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
இதுமட்டுமன்று, தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகளில் பங்கேற்கவும், ஆராய்ச்சிகளில் ஈடுபடவும் ரூ.60 ஆயிரம் வரை வழங்க உள்ளது இந்நிறுவனம்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முக்கிய தேதி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஏப்ரல் 3 கடைசி நாளாகும். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மே 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு ஐஐடி-காந்திபூர் இணையதளத்தை பார்க்கலாம்.

Sunday, January 11, 2015

ராணுவ மருத்துவ அறிவியல் கல்லூரியில் மருத்துவ படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2015-16ம் கல்வியாண்டில் பிடிஎஸ், எம்டிஎஸ் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வி தகுதியாக பிடிஎஸ் படிப்புக்கு பிளஸ் 2வில் (இயற்பியல், வேதியியல், உயிரியல்)பாடப்பிரிவை எடுத்து படித்திருக்க வேண்டும்.
முதுகலை படிப்புக்கு அங்கீகாரம் பெற்ற பல்கலையில் பிடிஎஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவங்களை கல்லூரி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்ரவரி 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு கல்வி நிறுவன இணையதளத்தை பார்க்கலாம்.

Saturday, December 6, 2014

கோயம்பத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் அண்ணா நூற்றாண்டு ஐஏஎஸ் பயிற்சி மையம் தமிழக அரசின் நிதி உதவிடன் செயல்பட்டு வருகிறது.
ஐஏஎஸ், ஐபிஎஸ உள்ளிட்ட சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு எழுத விரும்பும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி மையத்தில் மாதாந்திர உதவித்தொகையுடன் 6 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது.
2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி நடைபெற உள்ள சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சியில் சேர விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்புவோர் டிசம்பர் 30ம் தேதியன்று நடத்தப்படும் நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுப்படுவர்.
நுழைவுத்தேர்வு டிசம்பர் 30ம் தேதியன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை பாரதியார் பல்கலைக்கழக டாக்டர்.உஷா மேத்தா அரங்கில் நடைபெறும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் டிசம்பர் 15ம் தேதிக்குள் சென்றடையுமாறு அனுப்ப வேண்டும்.
மேலும் விரிவான தகவல்களுக்கு www.b-u.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பி.எச்டி.,(மேலாண்மை) படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பி.எச்டி.,மேலாண்மை படிப்புக்கு அங்கீகாரம் பெற்ற பல்கலை மற்றும் கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ.,வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.950 வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்.
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்துத் தேர்வு டிசம்பர் 20ம் தேதி நடைபெறுகிறது. கூடுதல் தகவல்களுக்கு www.vit.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

Sunday, July 27, 2014

தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஓடி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் உள்ள இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

தமிழ்நாட்டில் உள்ள 19  அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம்., பி.பி.டி., பி.ஏ.எஸ்.எல்.பி. (செவித்திறன், பேச்சு மற்றும் மொழிநோ குறியியல்), பி.எஸ்சி., ரேடியாலஜி மற்றும் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.ஓ.டி. ஆகிய படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில் சேர விரும்பும் உயிரியல் பாடத்தை எடுத்து பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ் டூ வகுப்பில் தொழிற்கல்வியை பாடமாக எடுத்துப் படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பக் கட்டணம் ரூ.350. ‘செயலாளர், தேர்வுக் குழு, கீழ்ப்பாக்கம், சென்னை- 10’ என்ற பெயரில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் டிமாண்ட் டிராப்ட் எடுக்க வேண்டும். அதனுடன் விண்ணப்பக் கேட்புக் கடிதத்தையும் டிமாண்ட் டிராப்ட்டையும் இணைத்து, 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கொடுத்து விண்ணப்பத்தை நேரில் பெற்றுக்கொள்ளலாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. கெஜட்டட் அலுவலர்களிடம் சான்றொப்பம் பெற்ற இரண்டு சாதிச் சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பக் கேட்புக் கடிதத்தை இணைத்துக் கொடுத்து, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல், மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

சென்னையில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி.), ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, மதுரையிலுள்ள அரசு இராஜாஜி மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, சேலத்திலுள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, திருச்சியிலுள்ள கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, வேலூர் மருத்துவக் கல்லூரி, தேனி மருத்துவக் கல்லூரி, தர்மபுரி மருத்துவக் கல்லூரி,  விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, திருவாரூர் மருத்துவக் கல்லூரி, சிவகங்கை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி ஆகிய 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கும். கீழ்ப்பாக்கத்திலுள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் தேர்வுக் குழு அலுவலகத்தில் விண்ணப்பங்கள் கிடைக்காது.

சம்பந்தப்பட்ட இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், இந்த அனைத்துப் பட்டப் படிப்புகளிலும் சேருவதற்கு ஒரே விண்ணப்பம் அனுப்பினால் போதுமானது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

செயலாளர், தேர்வுக் குழு,
162, ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
கீழ்ப்பாக்கம், சென்னை - 600010.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 19.07.2014
விவரங்களுக்கு: www.tnhealth.org, www.tn.gov.in
பயோ டெக் வேலை பெற உதவித்தொகையுடன் படிப்பு!பயோ டெக்னாலஜி படித்த மாணவர்கள் பயோ டெக் தொழில் நிறுவனங்களில் பணிபுரிவதற்கு ஏற்ற வகையில் மத்திய அரசின் தொழில்நுட்பத் துறை உதவியுடன் ஓராண்டு முதுநிலை டிப்ளமோ படிப்பு நடத்தப்படுகிறது. இந்தப் படிப்பில் சேர தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

பயோ டெக்னாலஜி வளர்ந்து வரும் முக்கியத்துறை. பயோ டெக்னாலஜி தொடர்பான படிப்புகளைப் படித்த மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு ஏற்ற வகையில் திறன்களைப் பெறுவதற்காக முதுநிலை டிப்ளமோ படிப்பு நடத்தப்படுகிறது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் உதவியுடன் பயோ டெக்னலாஜி ஃபினிஷிங் ஸ்கூல்ஸ் திட்டத்தின்கீழ் கர்நாடக அரசு இந்தப் படிப்பை நடத்துகிறது.

பயோ இன்பர்மேட்டிக்ஸ் அண்ட் ரேஷனல் டிரக் டிசைன், செல்லுலர் அண்ட் மாலிக்கியூலர் டயக்னாஸ்டிக்ஸ், ஃபெர்மெண்டேஷன் அண்ட் பயோபுராசசிங், நியூட்ராசூட்டிக்கல்ஸ் அண்ட் ஃபுட் புராசசிங், பிளாண்ட் டிஸ்யூ கல்ச்சர் அண்ட் மைக்ரோபுராபகேஷன், பிளாண்ட் ஜெனிட்டிக் டிரான்ஸ்பர்மேஷன், ஜீனோம், சீட் அண்ட் மார்க்கர் அனாலிசிஸ், பிரி-கிளினிக்கல், கிளினிக்கல் ரிசர்ச், பயோ ஸ்டாட்டிஸ்ட்டிக்ஸ் அண்ட் டேட்டா மேனேஜ்மெண்ட், புரோட்டீன் எக்ஸ்பிரஷன் அண்ட் ஸ்கேல் அப் ஆகிய பாடப்பிரிவுகளில் இந்தப் படிப்பு நடத்தப்படுகிறது. கர்நாடகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த 12 கல்வி நிறுவனங்களில் இந்த முதுநிலை டிப்ளமோ படிப்பைப் படிக்கலாம்.

இந்தப் படிப்பில் சேர மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.50 ஆயிரம். இப்படிப்பில் சேர தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும். இந்த ஓராண்டு டிப்ளமோ படிப்பில் சேரும் மாணவர்கள் பயோ டெக்னலாஜி நிறுவனத்தில் ஆறு மாதங்கள் இன்டர்ன்ஷிப் பெற வேண்டியதிருக்கும். தொழில் நிறுவனங்களில் பணிபுரிவதற்கேற்ற வகையில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதால், படிப்பை முடித்த மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்களில் பணிபுரிய வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதற்கான உதவிகளும் செய்யப்படும்.

இந்தப் படிப்பில் யார் சேரலாம்?

உயிர் அறிவியல், பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, பயோ இன்பர்மேட்டிக்ஸ் அல்லது இது தொடர்பான படிப்புகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டப் படிப்பு படித்த மாணவர்கள் இந்த முதுநிலை டிப்ளமோ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். பயோ டெக்னாலஜி, பயோ இன்பர்மேட்டிக்ஸ் ஆகிய பாடப் பிரிவுகளில் பிஇ, பிடெக் படித்தவர்களும் இப்படிப்பில் சேரலாம். பிபார்ம், பிஎஸ்சி (அக்ரி), பிவிஎஸ்சி, எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்சி (பிளாண்ட் டிஸ்யூகல்ச்சர் அண்ட் மைக்ரோபுராபகேஷன்) படிப்புகளைப் படித்தவர்களும் இப்படிப்பில் சேரலாம். இறுதி ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களும் இந்த டிப்ளமோ படிப்பில் சேர விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த முதுநிலை டிப்ளமோ படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு கர்நாடகா பயோ டெக்னாலஜி ஆப்டிட்யூட் டெஸ்ட்  (ரிஙிகிஜி) என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதிகள் நடைபெறுகிறது. ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த ஆன்லைன் தேர்வில் அப்ஜெக்ட்டிவ் முறையில் 100 கேள்விகள் கேட்கப்படும். உயிரியல் பாடத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் குறித்து கேள்விகள் கேட்கப்படும். செல் அண்ட் மாலிக்கியூலர் பயாலஜி, பொது பயாலஜி, ஜெனரல் ஆப்டிட்யூட், ஆங்கிலம் ஆகியவற்றிலிருந்தும் கேள்விகள் இருக்கும். இத்தேர்வில் தகுதி பெறும் மாணவர்கள் ஆகஸ்ட் 25, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதிலிருந்து தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதுகுறித்த அறிவிப்பு செப்டம்பர்  3-ஆம் தேதி வெளியிடப்படும். இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஜூலை 25-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு: www.btfskarnataka.org

Sunday, July 6, 2014

பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விற்பனை திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்குகிறது.
இது குறித்து மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில், பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பி.எஸ்சி ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஓடி உள்ளிட்ட மருத்துவம் சார் பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்குகிறது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் வரும் 18-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் கிடைக்கும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 19-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் ரூ.350 யை விண்ணப்பதாரர்கள், செயலாளர், தேர்வுக் குழு என்ற பெயரில் எடுக்கப்பட்ட காசோலையாக செலுத்த வேண்டும். எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
மேலும் விபரங்களை www.tnhealth.org என்ற இணையதளத்தில் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, June 16, 2014

அரசு பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் 748 விரிவுரையாளர், பேராசிரியர்கள் நியமனம்: போட்டித் தேர்வு ஜூலையில் அறிவிப்பு

அரசு பாலிடெக்னிக், அரசு பொறி யியல் கல்லூரிகளில் விரைவில் 748 விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகிறது.

தமிழகத்தில் 10 அரசு பொறி யியல் கல்லூரிகள், 40 அரசு பாலி டெக்னிக் கல்லூரிகள் உள்ளன. பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களும், பாலிடெக்னிக்கில் விரிவுரையா ளர் பணியிடங்களும் நேரடியாக நிரப்பப்படுகின்றன. இதற்கான போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.

இந்த ஆண்டு அரசு பாலிடெக் னிக்கில் 605 விரிவுரையாளர்கள், அரசு பொறியியல் கல்லூரிகளில் 143 உதவி பேராசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள் ளது. இதையடுத்து, இப்பணியி டங்களில் பாடப்பிரிவு வாரியான காலியிடங்கள் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 748 விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படு வார்கள். இதற்கான அறிவிப்பை ஜூலையில் வெளியிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித் தார்.

பொறியியல் அல்லாத 220 பணியிடம்

பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் பாட ஆசிரியர்கள் மட்டுமின்றி ஆங்கிலம், கணிதம், இயற்பி யல், வேதியியல் உள்ளிட்ட பொறியி யல் அல்லாத பாட ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர். அந்த வகையில், பொறியியல் அல்லாத பாடப்பிரிவு இடங்கள் பாலி டெக்னிக்கில் 200-ம், பொறியியல் கல்லூரிகளில் 20-ம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வித் தகுதி, வயது வரம்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியைப் பொருத்தவரையில், பொறியியல் பாடப்பிரிவுக்கு முதல் வகுப்பு பி.இ. அல்லது பி.டெக். பட்டம் வேண்டும். பொறி யியல் அல்லாத பிரிவுகளுக்கு முதல் வகுப்பு முதுநிலை பட்டம் தேவை.

பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பதவிக்கு பொறியியல் பிரிவுக்கு பி.இ. அல்லது எம்.இ. படிப்பில் ஏதே னும் ஒன்றில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் அல்லாத பாடப்பிரிவு களுக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் 55 சதவீத மதிப்பெண்ணுடன் முதுநிலை பட்டம் அவசியம்.

அதோடு, யுஜிசி ‘நெட்’ அல்லது ‘ஸ்லெட்’ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விரிவு ரையாளர், உதவி பேராசிரியர் பணிகளுக்கு வயது வரம்பு கட்டுப்பாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Saturday, June 14, 2014

முக்கிய தினங்கள்

சென்னை மற்றும் கும்பகோணத்திலுள்ள அரசு கவின் கலைக் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 15.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 20.

தமிழகத்திலுள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த பி.ஏ., பி.எல். பட்டப் படிப்பிற்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் தேதி: ஜூன் 23.

யூஜிசி நடத்தும் கல்லூரி ஆசிரியர் தகுதித் தேர்வு (UGC-NET) மற்றும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் தேர்வு நடைபெறும் தேதி: ஜூன் 29.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் (நேர்காணல் இல்லாத பணி) குரூப் 2அ தேர்வு நடைபெறும் தேதி : ஜூன் 29

கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், டிப்ளமோ படிப்புகளைப் படிக்க விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 30.

மத்திய ஹிந்தி இயக்ககம் நடத்தும் ஹிந்தி மொழிச் சான்றிதழ் படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 30.

மாமல்லபுரத்தில் உள்ள அரசு கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 30.

Monday, June 9, 2014

தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கு தனித்தேர்வர்கள் ஜூன் 9, 10 தேதிகளில் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ தேர்வுகள் ஜூன் 26 முதல் ஜூலை 14 வரை நடைபெறுகின்றன. முதலாமாண்டு, இரண்டாமாண்டு தேர்வுகளுக்கு ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் இப்போது தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்த பிறகு, அருகிலுள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வுக்கட்டணத்துடன் சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலேயே நேரடியாகச் செலுத்த வேண்டும்.
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்புக்கான(B.f.sc) விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 15 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் எஸ்.ஏ.சண்முகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2014-2015-ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மீனவள அறிவியல் பட்டப்படிப்பில் சேர கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை www.tnfu.org.in என்ற இணையதள முகவரியில் ஜூன் 10-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தற்போது இந்த கால அவகாசம் ஜூன் 15 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் தகவல்கள் பெற 04365-240449, 0461-2340554 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Thursday, May 29, 2014

எம்பிஏ, எம்சிஏ சேர 2ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்
தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், கல்லூரிக் கல்வி இயக்ககம் ஆகியவற்றின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அண்ணா பல்கலைக் கழக வட்டார வள மையங்கள், சென்னை பல்கலைக் கழகம், பெரியார் பல்கலைக் கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம், தனியார் பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ ஆகியவற்றில் முதுநிலை பட்டப் படிப்பில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடக்க இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 2ம் தேதி முதல் 30ம் தேதிவரை வழங்கப்பட உள்ளன. விண்ணப்பங்களை நேரடியாக பெற விரும்புவோர் 300க்கு, செயலாளர், தமிழ்நாடு எம்பிஏ, எம்சிஏ சேர்க்கை 2014, அரசு தொழில்நுட்ப கல்லூரி, கோவை&641013 என்ற பெயரில் டிடி எடுத்து கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மேற்கண்ட முகவரிக்கு ஜூன் 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். எம்பிஏ, எம்சிஏ முதுநிலை பட்டப் படிப்புக்கான கவுன்சலிங் ஜூலை 3வது வாரத்தில் கோவையில் நடக்கும். இதற்கான அழைப்புக் கடிதங்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
"நெட்' தேர்வில் மாற்றம் கொண்டு வரும் யுஜிசி
பல்கலைக்கழக, கல்லூரி பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வில் (நெட்) மாற்றம் கொண்டுவர பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) முடிவு செய்துள்ளது.
உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக தகுதித் தேர்வில் மாற்றம் கொண்டுவர யுஜிசி திட்டமிட்டிருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதற்காக ஜ்ஜ்ஜ்.ன்ஞ்ஸ்ரீ.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் 10 கேள்விகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. அதாவது, உயர் கல்வி ஆசிரியரை அடையாளம் காண "நெட்' தேர்வு போதுமானதாக உள்ளதா, தேர்வில் பங்கேற்க வயது வரம்பு கொண்டுவர வேண்டுமா, இந்தத் தகுதித் தேர்வில் ஒருவர் இத்தனை முறைதான் பங்கேற்க வேண்டும் என கட்டுப்பாடு கொண்டுவர வேண்டுமா, தவறான பதில்களுக்கு "நெகட்டிவ்' மதிப்பெண் கொடுக்கப்பட வேண்டுமா என்பன உள்ளிட்ட 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
மாணவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், கல்வி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இந்த கேள்விகளுக்கு தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்குமாறு யுஜிசி கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு கேள்விக்கு அருகிலும் ஆம், இல்லை என்ற இரண்டு பதில்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பதிலில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, சமர்ப்பிப்பு பட்டனை அழுத்தினால் போதும்; கருத்து பதிவு செய்யப்பட்டு விடும்.
இது குறித்து யுஜிசி துணைத் தலைவர் தேவராஜ் கூறியது:
உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், "நெட்' தகுதித் தேர்வில் சில மாற்றங்களைக் கொண்டுவர யுஜிசி முடிவு செய்துள்ளது. இதற்காக தனி குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, தகுதித் தேர்வில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரலாம் என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பல்வேறு தரப்பினரின் கருத்துகளை அறிவதற்காக 10 கேள்விகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தக் கருத்துகள் மற்றும் குழு முடிவுகளின் அடிப்படையில், "நெட்' தகுதித் தேர்வில் மாற்றம் கொண்டுவரப்படும்.
இப்போது ஜூன் மாதம் நடைபெற உள்ள "நெட்' தேர்வில் எந்தவித மாற்றமும் இருக்காது. ஆனால், டிசம்பரில் நடத்தப்படும் தேர்வில் மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
இப்போது "நெட்' தகுதித் தேர்வில் "நெகட்டிவ்' மதிப்பெண், வயது வரம்பு ஆகியவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Wednesday, May 28, 2014

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான முழு உதவித்தொகை
எபிலிட்டி பவுண்டேஷன் மற்றும் சத்யபாமா பல்கலை ஆகியவை இணைந்து, தகுதியுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டங்களை வழங்குகின்றன.
அந்த தகுதிவாய்ந்த மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, பொறியியல், விஸ்காம், பி.எட்., மற்றும் வணிகவியல் உள்ளிட்ட பிரிவுகளில், 10 இடங்கள் ஒதுக்கப்படும். இந்த 10 இடங்களைப் பெறும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, படிப்பு காலம் முழுவதும் முழு உதவித்தொகை வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசித் தேதி மே 31. விரிவான அனைத்து விபரங்களுக்கும்www.abilityfoundation.org.
5 ஆண்டு சட்டப் படிப்புகளில் சேர விருப்பமா?
NMIMS கல்வி நிறுவனம், 2014ம் கல்வியாண்டில், தான் வழங்கும் ஒருங்கிணைந்த B.A., LL.B (Hons) மற்றும் B.B.A., LL.B (Hons) ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பலவிதமான தேவைகளை நிறைவு... See More

Saturday, May 24, 2014

செப்டம்பரில் கிராம வங்கித் தேர்வு

ஒவ்வொரு ஆண்டும் கிராம வங்கி ஊழியர்களின் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைபெறுகிறது. தற்போது ஐ.பி.பி.எஸ் (IPPS) என்ற அமைப்பிடம் தேர்வு நடத்துவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிராம வங்கிகளைப் பொறுத்தவரை, நேர்முகத் தேர்வினை அந்தந்த கிராம வங்கிகளே நடத்திக் கொள்கின்றன.நடப்பாண்டில் எழுத்துத் தேர்வு நடக்கும் உத்தேச தேதிகளை ஐ.பி.பி.எஸ் வெளியிட்டிருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் 6,7, 13, 14, 20, 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இந்தத் தேர்வு நடக்கும். தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இது அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்யும்.மற்ற மாநிலங்களில், ஆட்களை நிரப்பும் பணி துரிதமாக நடைபெறுகிறது.

தமிழகத்தில் இரண்டு கிராம வங்கிகள் உள்ளன. வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பல்லவன் கிராம வங்கியின் கிளைகள் உள்ளன. தெற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் பாண்டியன் கிராம வங்கியின் கிளைகள் உள்ளன.கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி, அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணியிடங்களை பல்லவன் கிராம வங்கி நிரப்பியுள்ளது. ஆனால், பாண்டியன் கிராம வங்கியைப் பொறுத்தவரை, தற்போதுதான் அதிகாரிகளின் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வை நிறைவு செய்துள்ளது.தெற்கு மாவட்டங்களிலிருந்து ஏராளமானவர்கள் ஊழியர்களுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று, பாண்டியன் கிராம வங்கி விரைவில் பணியிட நிரப்புதலுக்கான அறிவிக்கையை வெளியிடும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குள் அடுத்த எழுத்துத் தேர்வே வந்துவிட்டது.

ரயில்வே தேர்வுக்குவிண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு...

சில மாதங்களுக்கு முன்பாக ரயில்வே துறையில் 26 ஆயிரத்து 570 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியானது. லட்சக்கணக்கானவர்கள் அதற்கு விண்ணப்பமும் செய்திருக்கிறார்கள். இந்நிலையில் இதற்கான எழுத்துத் தேர்வு ஜூன் மாதம் 15 ஆம் தேதியன்று நடக்கவிருக்கிறது.பொது அறிவுத்தாளில் அறிவியல் கேள்விகள் அதிகமாகக் கேட்கப்பட்டு வருகிறது. அதனால், இந்தத் தேர்வை எழுதப் போகிறவர்கள் பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களிலிருந்து அறிவியல் கேள்விகளைப் படித்துக் கொள்ள உதவும்.சொல்லப்போனால், வி.ஏ.ஓ. தேர்வு 14 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. பொது அறிவுத்தாளுக்கான தயாரிப்பு, இதற்கும் பெரிய அளவில் உதவியாகவே அமையும்.

தபால்துறைத் தேர்வு

தபால்துறையில் Multi tasking staffபணிக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் ஹால் டிக்கெட் வந்துவிட்டதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஜூன் 1 ஆம் தேதியன்று தேர்வு நடைபெறவுள்ளது. பத்தாம் வகுப்புக்கு உள்ள பாடங்களில் இருந்துதான் பொது அறிவுக்கேள்விகள் வரும். குறிப்பாக, அறிவியல் பாடங்களை ஒரு முறை நன்றாக வாசித்துக் கொள்வது நல்லது.

Friday, May 16, 2014

எஸ்.ஆர்.எம் பல்கலை: முதுகலை பல் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பம்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில், 2014ம் ஆண்டில் முதுகலை பல் மருத்துவப் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எம்.டி.எஸ் படிப்பில்
* Conservative Dentistry and Endodontics
* Oral and Maxilofacial Surgery
* Orthodontcs and Dento Facial Orthopedics
* Periodontology, Prosthodontics and Crown & Bridge
கல்வித்தகுதி:
இளங்கலை  பல் மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவர்கள் இன்டன்ஷிப் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை; விண்ணப்பப் படிவங்களை பல்கலைக்கழக இணையதளத்தின் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ரூ.1000. டிடி எடுத்து விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க மே 24 கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 26ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

அம்பானி கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப படிப்பு

குஜராத்தில் உள்ள Dhirubhai Ambani Institute of Information and Communication Technology -யில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைநடைபெற்று வருகிறது.
வழங்கப்படும் படிப்புகள்: பி.டெக்., (ICT), (Honours) with minor in Computational Science (இது தவிர எம்.டெக்., இன்பர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி, எம்.எஸ்சி, எம்.டிசைன் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பக் கட்டணம் ரூ.1200. மேலும் விவரங்களுக்கு www.daiict.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

சட்டப் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு

பெங்களூரில் உள்ள நேஷனல் லா ஸ்கூல் ஆப் இந்தியா யூனிவர்சிட்டி.,யில் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் சட்டப்படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்:
Master of Business Law (2 years)-distance
Post Graduate Diploma (PGD) in Human Rights Law (1 year)-distance
PGD in Medical Law & Ethics
PGD in intellectual Property Rights Law
PGD in Child Rights Law
PGD in Consumer Law & Practice
PGD in Cyber Law & Cyber Forensics
கல்வித்தகுதி; அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணபிப்பவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ரூ.1500 விண்ணப்பக் கட்டணமாக வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு www.nls.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Wednesday, May 14, 2014

கவின்கலைகள் கற்க விருப்பமா? அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரியில் சேரலாம்

மாமல்லபுரம்: அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் மாணவ சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழக கலை, பண்பாட்டு துறையின் கீழ் மாமல்லபுரத்தில் அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு மரபு கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை ஆகிய பிரிவுகளில், நான்கு ஆண்டுகள் இளையர் பட்டக்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோர் சேர்க்கப்படுவர். தற்போது, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான நிலையில், நடப்பு கல்வியாண்டு (2014-15) சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
பாடப்பிரிவுகள்
* தொழில்நுட்பவியல் இளையர் மரபு கட்டடக்கலை பட்டம் (பிடெக்.)
தகுதி: கணித பாடத்துடன், பிளஸ் 2 தேர்ச்சி அல்லது இணையான பாடப்பிரிவில் தேர்ச்சி.
* கவின்கலை இளையர் மரபு சிற்பக் கலை பட்டம் (பி.எப்.ஏ.)
(கற்சிற்பம், சுதைச்சிற்பம், மரச்சிற்பம், உலோகச்சிற்பம் ஆகிய பிரிவுகள்)
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது இணையான பாடப்பிரிவில் தேர்ச்சி.
* கவின்கலை இளையர் மரபு ஓவியம், வண்ணம் பட்டம் (பி.எப்.ஏ.)
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது இணையான பாடப்பிரிவில் தேர்ச்சி.
விண்ணப்பதாரர்கள், வரும் ஜூலை மாதம் 1ம் தேதி 21 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும்; ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு, வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்ப கட்டணம்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆகியோருக்கு 50 ரூபாய்; பிற வகுப்பினருக்கு 100 ரூபாய்; முதல்வர் பெயரில், திருக்கழுக்குன்றம், பாரத ஸ்டேட் வங்கியில் மாற்றத்தக்க வரைவோலையை, கல்லூரி அலுவலகத்தில் நேரில் செலுத்தியோ, 10 ரூபாய் மதிப்பிற்கு அஞ்சல்தலை ஒட்டி, சுய முகவரியிட்ட அஞ்சல் உறையை அனுப்பியோ, விண்ணப்பம் பெறலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பம் பெற இறுதிநாள்: 30.06.14
தொடர்புக்கு: முதல்வர், அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி, மாமல்லபுரம். தொலைபேசி: 044 - 2744 2261. இணையதளம்: http://artandculture.tn.gov.in
தூத்துக்குடி: "தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் பட்டப்படிப்புக்கு "ஆன் லைன்" மூலம் விண்ணப்பிக்கலாம்" என மீன்வளப் பல்கலை துணைவேந்தர் பாஸ்கரன் மணிமாறன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இதுவரை, கால்நடை பல்கலை மூலம் தான் மீன்வளப் படிப்புக்கு விண்ணப்பம் பெறப்பட்டது. மீன்வளப் பல்கலை அமைந்த பின், முதன் முறையாக மீன்வளப் படிப்பு (பி.எப்.எஸ்சி.) பட்டத்திற்கு விண்ணப்பம் பெறப்பட உள்ளது. மீன் வளக்கல்லூரி: தென்கிழக்கு ஆசியாவில் இரண்டாவதாக துவக்கப்பட்டது, தூத்துக்குடி மீன் வளக்கல்லூரி. கடந்த 1977 முதல் இயங்கிவருகிறது.
இந்தியாவில் உள்ள 21 கல்லூரிகளில் "முதல் தர" கல்லூரி. மீன்வளப் பட்டதாரிகள் அனைவரும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் 15 சதவீதம் பேர் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். "ஆன் லைன்" மட்டும்: மீன்வளப் பட்டப்படிப்புக்கு "ஆன் லைன்" மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். www.tnfu.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதில் 40 மாணவர் சேர்க்கப்படுவர்.
இன்று முதல் (மே 14) ஜூன் 10 வரை விண்ணப்பிக்கலாம்; விண்ணப்பக் கட்டணம் 600, ஆதிதிராவிடர்களுக்கு 300 ரூபாய். வரைவோலை (டி.டி.,) எடுத்து "ஆன் லைன்" விண்ணப்பத்தில் அதன் எண்ணை குறிப்பிட வேண்டும்.
தகுதிகள்
பிளஸ் 2 தேர்ச்சி. அதற்கு இணையான அங்கீகரிக்கப்பட்ட தேர்வில் உயிரியல் அல்லது விலங்கியல், தாவரவியலுடன் இயற்பியல், வேதியியல் படித்திருக்க வேண்டும். உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் பாடங்களில் பிற்பட்டோர் 60 சதவீதம், மிகவும் பிற்பட்டோர் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்; ஆதிதிராவிடர், தேர்ச்சி பெற்றால் போதும். வேதியியல், இயற்பியல் இரண்டிலும் சேர்த்து பிற்பட்டோர், இதரவகுப்பினர் 60 சதவீதம், மிகவும் பிற்பட்டோர் 55 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முகவரி: மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி- 628 008. போன்: 0461- 234 0554.
காலண்டர் – மே 2014
மே மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுகள், நுழைவுத்தேர்வுகள், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதிகள் ஆகியவற்றைக் காட்டும் காலண்டர் இது. தனியே எடுத்து பத்திரப்படுத்துங்கள்.
புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விரும்புவோர் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 2.
புனே திரைப்படக் கல்லூரியில் திரைப்படத் தொழில்நுட்பம் தொடர்பான முதுநிலை சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 3.
அகில இந்திய ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிக்க அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு (AIPMT) நடைபெறும் தேதி: மே 4.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பி.எட். படிக்க விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 9.
தமிழகத்தில் மார்ச் மாதம் நிறைவடைந்த பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி: மே 9.
மேனேஜ்மெண்ட் படிப்புகளுக்காக அகில இந்திய மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் நடத்தும் MAT நுழைவுத் தேர்வு (காகிதத்தில்) நடைபெறும் தேதி: மே 4. கம்ப்யூட்டர் மூலம் நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 10.
அகில இந்திய கால்நடை மருத்துவப் படிப்பு (AIPVT) நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 10.
டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்சஸில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சமூக அறிவியல் படிப்புகளைப் படிக்க பிளஸ் டூ மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 10.
இந்தியன் ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்ஸ்டிட்யூட்டில் புள்ளியியல் இளநிலை பட்டப் படிப்பு படிக்க எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: மே 11.
தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து இளநிலை சட்டப் படிப்பைப் படிக்க அகில இந்திய அளவில் CLAT நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 11.
பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் கல்வி நிலையத்தில் பல்வேறு பொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோருக்கு பிட்சாட் ஆன்லைன் நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 14 முதல் ஜூன் 1 வரை.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 15.
சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃப்ஷரிஸ் (சிப்நெட்) நடத்தும் பேச்சலர் ஆஃப் ஃப்ஷரி சயின்ஸ் படிப்பில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 16.
புனேயிலுள்ள ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 17.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பி.எட். படிக்க நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 17.
திருவாரூர் உள்ளிட்ட 7 மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டப் படிப்பு மற்றும் ஆய்வுப் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 17 மற்றும் மே 18.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்- 2ஏ எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: மே 18.
பயோ-டெக்னாலஜி முதுநிலை பட்டப் படிப்பில் சேர ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நடத்தும் ஒருங்கிணைந்த பயோ டெக்னாலஜி நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 19.
ஃபுட்வேர் டிசைன் அண்ட் டெவலப்மெண்ட் இன்ஸ்டிட்யூட்டில் பி.டெஸ். உள்ளிட்ட பல்வேறு படிப்புகளைப் படிக்க விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 19.
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் பி.டெக்., மெரைன் என்ஜினீயரிங், பி.எஸ்சி. நாட்டிக்கல் சயின்ஸ், எம்.பி.ஏ. போன்ற பல்வேறு படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 20.
வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் (சி.எம்.சி.) எம்.பி.பி.எஸ்., பி.எஸ்சி. (நர்சிங்) உள்ளிட்ட படிப்புகளில் சேர எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: மே 23.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு சேர விரும்புவோர் விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 23.
திருச்சி உள்ளிட்ட நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் (என்.ஐ.டி.) எம்.சி.ஏ. படிக்க நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 25.
மத்திய அரசுப் பணியில் ஜூனியர் என்ஜினீயரிங் பணிகளில் டிப்ளமோ மாணவர்களைச் சேர்க்க ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: மே 25.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.பில். படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 30.
புவனேஸ்வரத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச், மும்பையில் உள்ள சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் பேசிக் சயின்சஸ் கல்வி நிறுவனங்களில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி படிப்பில் சேர நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி : மே 31.
ரீஜினல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எஜுக்கேஷனில் நான்காண்டுகளுக்கான ஒருங்கிணைந்த பி.எஸ்சி.எட். படிப்பில் சேர நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 31.
-புதிய தலைமுறை

Tuesday, May 13, 2014

ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம் நாளை முதல் வினியோகம்

ஆசிரியர் பயிற்சி படிப்பு விண்ணப்பம், நாளை முதல், ஜூன் 2ம் தேதி வரை, மாநிலம் முழுவதும் வழங்கப்படுகிறது.

நடப்பு கல்வி ஆண்டில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றை நிரப்ப, நாளை முதல், விண்ணப்பம் வினியோகிக்கப்பட உள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். எஸ்.சி., - எஸ்.டி., - எஸ்.சி.ஏ., ஆகிய பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான சான்றிதழை காட்டி, 250 ரூபாய் கொடுத்து, விண்ணப்பம் பெறலாம். இதர பிரிவு மாணவர், 500 ரூபாய் கொடுத்து, விண்ணப்பம் பெறலாம். விண்ணப்பம் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், ஜூன், 2ம் தேதி கடைசி நாள்.

Friday, May 9, 2014

புதிய தலைமுறை வார இதழ்
பொருளாதாரத்தில் பின்தங்கிய, தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு புதிய தலைமுறை வழங்கும் இலவச உயர் கல்வித் திட்டம்
நீங்கள் பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் பொருளாதாரக் காரணங்களால் மேற்படிப்பைத் தொடர இயலாத மாணவரா?
தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தரம் வாய்ந்த கல்லூரிகளோடு இணைந்து உங்களுக்கு இந்த ஆண்டும் உதவ முன் வந்திருக்கிறது ‘புதிய தலைமுறை’.
எந்தெந்தப் படிப்புகள்?
B.E / B.Tech (ECE, CSE, EEE, IT, Mech, Civil) B.Pharm
Bachelor of Physiotherapy B.Sc. Micro Biology
B.Sc., Bio tech B.Sc. IT
B.Sc. Bio Chemistry B.Sc. Nursing
B.Sc.Computer Science B.A. Journalism
B.O.T. MBA
B.Ed (பட்டதாரிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்) MCA
போன்ற படிப்புகளில் ஏழை மாணவர்களுக்கு தரமான கல்லூரிகளில் இலவசமாக இடம் பெற்றுத் தர ‘புதிய தலைமுறை’ முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.
யார் விண்ணப்பிக்கலாம்?
பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற, பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்கள் (ஆண், பெண் இருபாலரும்) இந்த உதவியைப் பெற தகுதி உடையவர்கள்.
மிகக்குறைந்த அளவில் Lateral Entry மூலம் சேர விரும்பும் மாணவர்களுக்கும் இடம் அளிக்க முயற்சிக்கிறோம். எனவே, பொறியியல் டிப்ளமோ பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
உங்களது மதிப்பெண் பட்டியலின் நகல், வருமானம் பற்றிய சான்று மற்றும் தகவல்கள், உங்கள் பொருளாதார நிலை மற்றும் உங்களுக்குக் கல்வியின் மீதுள்ள ஆர்வம் இவற்றைக் குறிப்பிட்டு உங்கள் பள்ளித் தலைமையாசிரியரின் பரிந்துரைக் கடிதத்தோடு புதிய தலைமுறை இதழில் வெளியாகியுள்ள விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து அனுப்புங்கள்.
இத்திட்டத்தில் பங்குபெறும் கல்லூரிகளின் நிர்வாகங்கள் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும். இயன்ற வரை உங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள கல்லூரிகளில் இடம் பெற்றுத் தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரம் ‘புதிய தலைமுறை’ இதழில் வெளியாகும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 15 ஜூன் 2014
இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் கல்வி நிலையங்கள்
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் (S.R.M. University Kattankulathur)
ஈஸ்வரி பொறியியல் கல்லூரி, சென்னை (Easwari Engineering college, Chennai)
வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, சென்னை (Valliammai Engineering College, Chennai)
தானிஷ் அஹமது பொறியியல் கல்லூரி, சென்னை (Dhaanish Ahmed College of Engineering, Chennai)
வருவான் வடிவேலன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, தர்மபுரி (Varuvan Vadivelan Institute of Technology, Dharmapuri)
ஜெய்ராம்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரூர் (Jairams Arts and Science College, Karur)
செண்டு பொறியியல் கல்லூரி, மதுராந்தகம் (Chendu College of Engineering & Technology, Madurantakam)
ஜெயம் பொறியியல் மற்றும் தொழிநுட்பக் கல்லூரி, தர்மபுரி (Jayam College of Engineering & Technology, Dharmapuri)
தமிழ்நாடு பொறியியல் கல்லூரி, கோவை (Tamilnadu College of Engineering, Coimbatore)
பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, (University College of Engineering,
Panruti)
பெட் பொறியியல் கல்லூரி, வள்ளியூர் (Pet Engineering College, Vallioor)
இந்தத் திட்டத்தில் பங்கேற்க விரும்பும் கல்லூரிகள் ‘புதிய தலைமுறை’ ஆசிரியரைத் தொடர்புகொள்ளக் கேட்டுக்கொள்கிறோம்
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
24, ஜி.என். செட்டி ரோடு, சென்னை - 600 017. தொலைபேசி எண். 044-45428803

Thursday, May 8, 2014

சட்ட படிப்புகளுக்கு 12ம் தேதி முதல் விண்ணப்பம்
அம்பேத்கர் சட்ட பல்கலை மற்றும் சட்டக் கல்லுாரிகளில், 2014 15ம் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்காக,
ஐந்தாண்டு படிப்பிற்கு வரும், 12ம் தேதியும், மூன்றாண்டு பட்டப் படிப்பிற்கு, 26ம் தேதியும் விண்ணப்பங்கள் வழங்கப் படுகின்றன. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ், தமிழத்தில், ஏழு சட்ட கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இதில், சட்ட பல்கலையில், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு, மூன்றாண்டு பட்டப்படிப்பு மற்றும் பி.காம்., பி.எல்., படிப்புகளும் நடத்தப்படுகின்றன. இப்படிப்புகளுக்கான, 2014 15ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு, நேற்று வெளியானது. பல்கலை துணைவேந்தர், வணங்காமுடி கூறியதாவது: இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு, ஐந்தாண்டு படிப்புகளுக்கு, இம்மாதம், 12ம் தேதி, மூன்றாண்டு படிப்புக்கு, 26ம் தேதி முதல், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள், சென்னை, அம்பேத்கர் சட்டப்பல்கலை மற்றும் சட்டக் கல்லுாரிகளில் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, ஐந்தாண்டு படிப்புகளுக்கு, ஜூன் 6ம் தேதி; மூன்றாண்டு படிப்புகளுக்கு, ஜூன் 11ம் தேதி இறுதி நாள். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஐந்தாண்டு படிப்புகளுக்கு, ஜூன் 13ம் தேதியும், மூன்றாண்டு படிப்பிற்கு, ஜூன் 21ம் தேதியும், இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து, அடுத்த 10 நாட்களில், கலந்தாய்வு நடக்கும். இந்தாண்டு, ஐந்தாண்டு சட்டப்படிப்பில், 1,052 மற்றும் மூன்றாண்டு சட்டப் படிப்பில், 1,262 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள், 69 சதவீதம் இட ஒதுக்கீடு மூலமும், 31 சதவீதம், திறந்த நிலை போட்டியின் மூலமும் நிரப்பப்படுகின்றன.
இந்தாண்டு, ஐந்து புதிய முதுகலை பட்டய படிப்புகள் துவக்கப்படுகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.
>Bhararathiyar University M.Ed degree programme in Distance Education is a two year master degree course offered through open and distance learning(ODL) system

>Duration-
Minimum period to complete the programme- 2 years
Maximum period -4 years

>Eligibility-
B.Ed with 55%
Two years teaching/professional experience after completion of B.Ed programme in a govt/govt recognized school

Only teachers working in TN are eligible for admission to M.Ed programme

>Medium of Instruction - English

>Programme Fees-
Provisionally selected candidates should pay the following fee
I year- 27,000/-
II year - 28,000/-
Fee once paid will not be refund under any circumstances

>Course of study-
Theory papers
First year -3 papers
Second year- 3 papers

>Personal Contact Programme will be conducted at the centre during weekends (saturday & sunday) and long holidays

>Entrance Test-
The entrance test will be held during the month of June/July.Exact date will be informed later. Entrance test can be written in English or Tamil. 100 multiple choice question based on B.Ed programme will be asked in the M.Ed entrance test.

>RESERVATION

OC- 31%
BC- 30% WHICH INCLUDES 3.5% FOR MUSLIMS
MBC- 20%
SC- 18%
ST- 1%

>Cost of Application -Rs.750

>Last date to submit the application - 30.6.14

>For more details contact
School of Distance Education
Bharathiyar University
Coimbatore -641046
0422- 2427742, 2422222, 2428206
Web- www.b-u.ac.in