கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உதவி வேளாண்மை அதிகாரி (Assistant Agricultural Officer) பதவியில் 206 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது
Monday, May 22, 2017
Saturday, May 20, 2017
உதவித்தொகையுடன் படிக்கலாம்: மாதம் ரூ.5000-த்துடன் எம்.எஸ்சி. படிப்பு;
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் நேரடியாக ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.எஸ்சி.
அஞ்சல் துறையில் 1193 வேலை: ஜூன் 6க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 - 40க்குள் இருக்க வேண்டும்
Wednesday, May 10, 2017
அரசு ஐ.டி.ஐ.,களில் சேர விண்ணப்பம்
அரசு ஐ.டி.ஐ., நிறுவனங்களில் சேரவும், அரசு உதவி பெறும், தனியார் மற்றும் சுயநிதி நிறுவனங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும், மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும், மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Sunday, April 9, 2017
திருச்சி பெல் நிறுவனத்தில் அப்பரண்டீஸ் பயிற்சிக்கு 20க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
அனைவராலும் பெல் என அழைக்கப்படும் மத்திய பொதுத் துறை மின்சாதப் பொருள்கள் உற்பத்தி நிறுவனமான பி.எச்.இ.எல் நிறுவனத்தின் திருச்சி கிளையில் 2017 - 2018-ஆம் ஆண்டிற்கான 770 ஃபிட்டர், வெல்டர் (ஜி & இ), டர்னர், மெஷினிஸ்ட், ஏசி மற்றும்
Thursday, March 23, 2017
திறந்தநிலை பல்கலையில் ’ஆன்லைன்’ அட்மிஷன்
திறந்தநிலை பல்கலையில், ’ஆன்லைன்’ மூலமாக, மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு உள்ளது.
Saturday, March 11, 2017
விளையாட்டு வீரர்களுக்கு விருது விண்ணப்பிக்க வாய்ப்பு
விளையாட்டுத்துறையில் தேசப்பற்று நற்பெயரையும், புகழையும் பெற்றுத் தரும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
Monday, March 6, 2017
சட்ட நுழைவுத்தேர்வு: மார்ச் 31 கடைசி நாள்
: 'தேசிய சட்டப் பள்ளி மற்றும் பல்கலைகளில் சேர விரும்புவோர், பொது சட்ட நுழைவுத் தேர்வுக்கு, வரும், 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி துணைவேந்தர் கமலா சங்கரன் தெரிவித்துள்ளார்.
Wednesday, February 22, 2017
டான்செட்' தேர்வு: பிப்., 28 வரை அவகாசம் நீட்டிப்பு
டான்செட்' தேர்வு: பிப்., 28 வரை அவகாசம் நீட்டிப்பு
இன்ஜி., கல்லுாரிகளில், எம்.இ., - எம்.பி.ஏ., படிப்புக்கான, 'டான்செட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, பிப்., 28 வரை, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., மற்றும் மேலாண் கல்லுாரிகளில், எம்.பி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., படிப்புகளில் சேர, 'டான்செட்' என்ற தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.வரும் கல்வி ஆண்டில், மாணவர்கள் சேர்க்கை, மார்ச் 25, 26ல் நடக்கும். இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம், பிப்., 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Wednesday, February 15, 2017
SBI : 2736 OFFICER VACCANCIES FOR DEGREE HOLDERS
பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி பணியில் 2,736 காலியிடங் களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப் பட்டிருக்கிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருந்தால் போதும். தற்போது இறுதி ஆண்டு படிப்பவர்களும்கூட விண்ணப்பிக்கலாம்.
Tuesday, February 7, 2017
DSE - மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2017பள்ளி மாணவர்களுக்கான தேர்வு கூட
அனுமதி சீட்டு பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக இயக்குனர் செயல்முறைகள்..
CLICK HERE-TO DOWNLOAD DSE-LETTER REG-+2 HALLTICKET
CLICK HERE-TO DOWNLOAD DSE-LETTER REG-+2 HALLTICKET
[https://drive.google.com/…/0ByAQcFNqemV0SzQ2c1p2T1VRSzg/view] is good,have a look at it!
Friday, December 30, 2016
அரசு ஐ.டி.ஐ., உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
மேட்டூர் அணை ஐ.டி.ஐ.,யில், உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
Tuesday, November 29, 2016
தபால்காரர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு
தபால்காரர் மற்றும் மெயில்கார்டு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Friday, November 18, 2016
கணினி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு.
தமிழக அரசு பணியில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வில் (Certificate in computer on office automation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது
Wednesday, November 2, 2016
போஸ்ட்மேன் வேலை நவ., 15 கடைசி
'தமிழகத்தில், காலியாக உள்ள, 310 போஸ்ட்மேன்கள், மெயில் கார்டு பணி இடங்களுக்கு, நவ., 15க்குள், விண்ணப்பிக்கலாம்' என, அஞ்சல்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
Monday, October 24, 2016
இந்திய நாடாளுமன்றத்தில் பணி இந்திய நாடாளுமன்றத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான 35 Executive, Legislative, Committee, Protocol Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு
இந்திய நாடாளுமன்றத்தில் பணி இந்திய நாடாளுமன்றத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான 35 Executive, Legislative, Committee, Protocol Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தபால் வட்டத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான 310 தபால்காரர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பத்தாம் வகுப்பு முடித்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Friday, October 7, 2016
திறந்தநிலை பல்கலையில் பி.எட்., சேர்க்கை துவக்கம்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. பட்டப்படிப்பு
Saturday, September 24, 2016
உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
செக்கானுாரணி அரசு ஐ.டி.ஐ.,யில் காலியான பணிமனை உதவியாளருக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Tuesday, September 20, 2016
வங்கி அதிகாரி ஆகலாம், கிராம வங்கிகளில் 16,615 காலிப் பணியிடங்கள்
தற்போது அரசு வங்கிகள், எழுத்தர், அதிகாரி பணியிடங்களுக்குத் தேவைப்படும் பணியாளர்களைப் போட்டிபோட்டுக்கொண்டு தேர்வுசெய்து வருகின்றன.
Wednesday, September 14, 2016
தபால் ஆய்வாளர் தகுதித்தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்பு
தபால் ஆய்வாளர் பணிக்கான பதவி உயர்வு தகுதித்தேர்விற்கு, தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Tuesday, September 13, 2016
கிராம வங்கிகளில் 16615 அதிகாரி பணி: ஐபீபிஎஸ் பொது தேர்வு அறிவிப்பு
.கிராம வங்கிகளில் 16,651 அலுவலக உதவியாளர், அதிகாரி பணிக்கான பொது எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை ஐபீபிஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
Thursday, September 8, 2016
உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் விற்பனை
அரசு பொறியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவிபேராசிரியர் பணிக்கு எழுத்து தேர்வு மூலம் நேரடி நியமனம் நடைபெற உள்ளது.
Wednesday, September 7, 2016
விரைவில் 15 ஆயிரம் காவலர்கள் தேர்வு: தயாராகும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்
காவல், சிறை, தீயணைப்பு ஆகியவற்றுக்கு 15 ஆயிரம் காவலர்களைத் தேர்வு செய்ய தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தயாராகிவருகிறது
டிப்ளமோ நர்சிங் படிப்பு விண்ணப்பம் வினியோகம்!
டிப்ளமோ நர்சிங் என்ற, இரு ஆண்டுகள் படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது.
Tuesday, August 30, 2016
மத்திய அரசில் 5550 ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சுகாதார மிஷனில் 2016-ஆம் ஆண்டிற்கான 5550 ஆய்வக உதவியாளர், வார்டு பாய், பிசியோதெரபிஸ்ட், மருத்துவ உதவி, காசாளர் போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Tuesday, August 23, 2016
பொதுத்துறை வங்கிகளில் 19 ஆயிரம் கிளார்க் வேலை!
பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் ஆக பணிபுரிய விரும்பும் பட்டதாரி இளைஞர்கள், ஐ.பி.பீ.எஸ்., எனப்படும் ‘இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பர்சனஸ் செலக்சன்’ நடத்தும் தேர்வை எழுதலாம்!
Wednesday, August 17, 2016
விண்ணப்பம் வழங்கல் உதவி பேராசிரியர் பணியிடம்;
உதவி பேராசிரியர் காலி பணியிடத்துக்கான விண்ணப்பம்,இன்று முதல் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரிகளில் கணிதம், வரலாறு போன்ற பாடப்பிரிவுகளுக்கு,
Sunday, August 14, 2016
பேராசிரியர் பணி; விண்ணப்பிக்க அழைப்பு
அரசு இன்ஜி., கல்லுாரிகளில் பேராசிரியர் பணிக்கு, செப்., 7 வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, August 6, 2016
கல்வி உதவித்தொகை; விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி அறிவிப்பு!
சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, வரும், 31ம் தேதி கடைசி நாள் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு, உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட க
Friday, July 29, 2016
இன்ஜினியர்களை அழைக்கிறது கடற்படை!
திருமணம் ஆகாத, இந்திய குடியுரிமை பெற்ற இருபாலரும், பல்கலைக்கழக நுழைவுத் திட்டத்தின் கீழ், இந்திய கடற்படையில் சேர்ந்து பயிற்சி பெற மற்றும் பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு!
Tuesday, July 26, 2016
மனோன்மணியம் பல்கலையில் பேராசிரியர் பணிக்கு ஆள்தேர்வு
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில்,காலியாக உள்ள, 34 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
Tuesday, July 12, 2016
டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு விண்ணப்பம் வினியோகம்!
பிளஸ் 2 முடித்தோர், டிப்ளமோ இன் பார்மசி படிப்புகளில் சேர முடியும். மூன்று அரசு கல்லுாரிகளில், 240 இடங்கள் உள்ளன
டிப்ளமோ இன் பார்மசி முடித்தோர், பி.பார்ம்.,படிப்பில், நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம். இதற்கு, இரண்டு அரசு கல்லுாரிகளில், 12ம்; 30 சுயநிதி கல்லுாரிகளில், 184 இடங்களும் உள்ளன.
டிப்ளமோ இன் நர்சிங் முடித்தோர், போஸ்ட் பேசிக் பி.எஸ்சி.,படிப்பில் சேரலாம். இதற்கு, இரண்டு அரசு கல்லுாரிகளில், 90ம்; 50 சுயநிதி கல்லுாரிகளில், 1,023 இடங்களும் உள்ளன.
இந்த, மூன்று படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், www.tnhealth.org என்ற இணையதளத்தில் நேற்று துவங்கியது. ஜூலை, 21 வரை பதிவிறக்கம் செய்யலாம்; பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜூலை, 22க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Wednesday, May 25, 2016
எம்.எஸ்சி., படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பம்
எம்.எஸ்சி., படிப்பில் சேர, நாளை முதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என, அண்ணா
பல்கலை அறிவித்துள்ளது.
Saturday, May 14, 2016
டான்செட்’ தேர்வு; விண்ணப்ப தேதி நீட்டிப்பு
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், முதுநிலை படிப்பில் சேர்வதற்கான, டான்செட் தேர்வுக்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
Wednesday, May 11, 2016
தொடக்க கல்வி பட்டய தேர்வு; விண்ணப்பிக்க அழைப்பு
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஆன்லைனில் GOOGLEல் சென்று ADDRESS BARல் 218.248.44.57/diet என டைப் செய்து DOWNLOAD APPLICATION FORMஎன்பதை
Monday, March 28, 2016
செவிலிய பட்டயப்படிப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 7 கடைசி நாள் .
BOARD EXAMINATION - DGNM JULY / AUGUST 2016 - ஜூலை-ஆகஸ்ட் 2016 பருவத் தேர்வுகளை எழுதும் மாணவர்களின் விண்ணப்பம், தேர்வுகளை நடத்தும் தகுதியுள்ளஆசிரியர்களின் விண்ணப்பங்கள் ஆகியவற்றை அந்த பயிற்சிப்பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும்
Saturday, March 26, 2016
செவிலிய பட்டயப்படிப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 7 கடைசி.
செவிலிய பட்டயப் படிப்புக்கான பருவத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 7-ஆம் தேதி கடைசித் தேதியாகும்
Tuesday, March 8, 2016
விண்ணப்பித்துவிட்டீர்களா...? தமிழ்நாடு மின் நிறுவனத்தில் 2175 பணி
தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்தில் 2175 தொழில்நுட்ப உதவியாளர், மின்னியல், தொழில்நுடப் உதவியாளர், இயந்தரவியல், உதவி வரைவாளர், களப்பணி உதவியாளர்(பயிற்சி), சோதகர் வேதியர், இளநிலை உதவியாளர், நிர்வாகம், இளநிலை
Saturday, March 5, 2016
தமிழ்நாடு மின் வாரியத்தில் 2,175 பணியிடம்:மார்ச் 7 முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு மின் வாரியத்தில், 2,175 ஊழியர் தேர்வுக்கு, மார்ச், 7 முதல், மின் வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு மின் வாரியம், கணக்காளர்,உதவியாளர் உட்பட, 2,175
Tuesday, March 1, 2016
Kendriya Vidyalaya Recruitment for Various Teachers Positions 2016
Kendriya Vidyalaya Recruitment for Various Teachers Positions 2016
Cick Here - Kendriya Vidyalaya Recruitment for Various Teachers Positions 2016
Tuesday, February 16, 2016
சுகாதார துறையில் 1,200 பேருக்கு வேலை
சுகாதார துறையில், மருந்தாளுனர்கள், இரண்டாம் நிலை லேப் டெக்னீஷியன் உட்பட, 1,202 இடங்கள், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான, எம்.ஆர்.பி., மூலம் நிரப்பப்பட உள்ளன.
Thursday, February 11, 2016
விளையாட்டு விடுதி சேர்க்கை; விண்ணப்பிக்க வாய்ப்பு
சென்னையில் உள்ள சிறப்பு விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற, மாணவ, மாணவியரிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Tuesday, February 2, 2016
அரசு விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
Monday, February 1, 2016
மருந்தாளுனர் வேலை விண்ணப்பம் வரவேற்பு
சுகாதார துறையில் காலியாக உள்ள, 333 மருந்தாளுனர் தற்காலிக பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இதற்கான அறிவிப்பை, மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
Wednesday, January 27, 2016
484 சத்துணவு அமைப்பாளர், 463 சமையல் உதவியாளர் பணியிடங்கள்:பிப்.5-க்குள் விண்ணப்பிக்கலாம்
மாவட்ட அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 484 சத்துணவு அமைப்பாளர், 463 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்
Monday, January 11, 2016
காமராஜ் பல்கலை தொலை தூர கல்வியில் மாணவர் சேர்க்கை
மதுரை காமராஜ் பல்கலை தொலைதூரக் கல்வி மையத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது
Saturday, January 9, 2016
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 37 பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 37 பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடத்துக்கு ஜன.25-க்குள் விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் ஜன.25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, January 2, 2016
உதவி பொறியாளர் தேர்வு 25 ஆயிரம் பேர் விண்ணப்பம்
தமிழ்நாடு மின் வாரிய உதவிப் பொறியாளர் தேர்விற்கு, மூன்று நாட்களில், 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
Saturday, December 19, 2015
சத்துணவு அமைப்பாளர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
வேலூர் மாவட்ட சத்துணவு மையங்களில் அமைப்பாளர் பணிக்கு தகுதியானவர்கள் வியாழக்கிழமை (டிச.17) முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 370 சத்துணவு அமைப்பாளர் பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பொதுப் பிரிவினர், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் 21 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பழங்குடியினத்தவர்கள் எட்டாம் வகுப்பு படித்திருப்பதுடன், 18 முதல் 40 வயதுக்குள்ளும், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். நியமன பணியிடத்திலிருந்து விண்ணப்பிப்பவர்கள் 3 கி.மீ. தொலைவுக்குள் இருத்தல் அவசியம். விண்ணப்பத்துடன் வயது, கல்வித்தகுதி, ஜாதி, இருப்பிடத்துக்கான நகலை இணைக்க வேண்டும். ஏற்கெனவே விண்ணப்பித்திருந்தாலும் அனைத்துச் சான்றிதழ்களுடன் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு வரும் போது அசல் சான்றிதழ் எடுத்து வர வேண்டும்.
விண்ணப்பத்தை வியாழக்கிழமை (டிச.17) முதல் வருகிற 31-ஆம் தேதி மாலைக்குள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தை வியாழக்கிழமை (டிச.17) முதல் வருகிற 31-ஆம் தேதி மாலைக்குள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Friday, October 2, 2015
TNPSC - GROUP IV NOTIFICATION
நில அளவர், தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 4963 பணியிடங்களுக்கு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப்-4 தேர்வுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இளநிலை உதவியாளர் (பிணையம்) (39),
இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) (2133),
வரித் தண்டலர் (22),
தட்டச்சர் (1683),
சுருக்கெழுத்து தட்டச்சர் (331),
மற்றும் நில அளவர் (702),
வரைவாளர் (53)
என மொத்தத்தில் 4,963 காலிப்பணியிடங்கள் ஆகும்.
இந்த தேர்விற்கு குறைந்தப்பட்சக் கல்வித் தகுதி எஸ்.எஸ்.எல்.சி. ஆகும். குறைந்தபட்ச வயது 18ஆக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட வேண்டிய
கடைசித் தேதி நவம்பர் 12 ஆகும்.
கட்டணம் செலுத்தக் கடைசி நாள் நவம்பர் 14 ஆகும்.
தேர்வு டிசம்பர் 12ஆம் தேதி காலை நடைபெற உள்ளது.
மாவட்டத் தலைமையிடங்கள் மற்றும் தாலுகாக்கள் உள்ளிட்ட 244 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.netஎன்ற தேர்வாணைய இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
நிரந்தரப் பதிவில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து,
இப்பதவிகளுக்குரிய இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
நிரந்தரப் பதிவு செய்யாத
நிரந்தரப் பதிவு செய்யாத
விண்ணப்பதாரர்கள் நேரடியாக முழு விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
நிரந்தர பதிவில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து மட்டுமே விலக்களிக்கப்படத் தகுதியானவர்கள் ஆவர்.
மற்றவர்கள் அந்தந்த வகுப்பிற்கு வழங்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணங்களை இந்தியன் வங்கி கிளைகள் மற்றும் அஞ்சலகங்களில் செலுத்த வேண்டும்.
பணம் செலுத்திய ரசீதை விண்ணப்பித்த இரண்டு நாட்களுக்குள் செலுத்திவிட வேண்டும்.
இணையத்தின் மூலமாகவும் செலுத்தலாம்.
இதுகுறித்த சந்தேகங்களை 044 - 25332855, 044 - 25332833
மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002 இல்
தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
Thursday, April 2, 2015
பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய, மாநில அரசுத் துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் அதிகமான பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அந்த பணியிடங்களை நிரப்ப மத்திய, மாநில அரசுகள் தேர்வாணையங்கள் மூலம் போட்டித் தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகின்றன. என்று அழைக்கப்படும் (யு.பி.எஸ்.சி) மருத்துவப் பணி மற்றும் பொறியாளர் பணிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை அறிவித்துள்ளது.
மருத்துவப் பணி:
மத்திய அரசுப் பணியில் சேர வேண்டுமானால் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகள் தேர்வெழுதி (Combined Medical Services Exmn) நேரடியாக ரயில்வே துறையில் உதவிக் கோட்ட மருத்துவ அதிகாரி, இந்திய ஆர்டினன்ஸ் ஃபேக்டரி சர்வீசஸ் சுகாதாரப் பணியில் உதவி மருத்துவ அதிகாரி, மத்திய அரசின் சுகாதாரப் பணிகளில் மருத்துவ அதிகாரி, தில்லி மாநகராட்சி மருத்துவ அதிகாரி போன்ற பணிகளில் சேரலாம்.
தமிழக அரசுப் பணியில் சேர வேண்டுமானால் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக அசிஸ்டென்ட் சிவில் சர்ஜன் பணியில் சேரலாம். பொது மருத்துவம், மருத்துவக் கல்வி, கிராமப்புற சுகாதாரப் பணி எனக் குறிப்பிட்ட துறைக்குப் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தகுதி: ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகளுக்கான தேர்வை எழுத குறைந்தபட்ச கல்வித்தகுதியாக எம்.பி.பி.எஸ். படிப்பு. இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கு 32. ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி அடிப்படையில் நடைபெறும் தேர்வில் மருத்துவப் பாடங்கள் சம்பந்தப்பட்ட 2 தாள்கள் இருக்கும். ஒவ்வொரு தாளுக்கும் தலா 250 மதிப்பெண் வீதம் மொத்தம் 500 மதிப்பெண்கள். முதல் தாளில் பொது அறிவு தொடர்பான 30 வினாக்களும், பொது மருத்துவம் தொடர்பான 70 வினாக்களும், குழந்தை மருத்துவத்தில் 20 வினாக்களும் இடம்பெறும். நேர்முகத் தேர்வுக்கு 100 மதிப்பெண். இரண்டாம் தாளில் அறுவை சிகிச்சைக்கு 40 வினாக்களும், மகப்பேறு மருத்துவத்தில் 40 வினாக்களும், வரும்முன் காப்பது மற்றும் சமூகநல மருத்துவம் தொடர்பாக 40 வினாக்களும் இடம்பெறும்.
ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகள் தேர்வுக்கு மருத்துவம் படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரை தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகளுக்கான போட்டித் தேர்வை யு.பி.எஸ்.சி. ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் ரயில்வே உதவி கோட்ட மருத்துவ அதிகாரி பணியில் 600 காலியிடங்களும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தளவாடத் தொழிற்சாலை மருத்துவ சேவை மையத்துக்கு 39 இடங்களும், ஜூனியர் ஸ்கேல் போஸ்ட் இன் சென்ட்ரல் ஹெல்த் சர்வீஸில் 391 இடங்களும், டெல்லியின் கிழக்கு, வடக்கு, தெற்கு மாநகராட்சிகளுக்கு கிரேடு 2 மருத்துவ அதிகாரி பணிக்கு 372 இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2015
பொறியாளர் பணி:
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் அண்ட் டெலிகம்யூனிகேஷன் ஆகிய பணியிடங்களுக்கு மொத்தம் 475 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்திய ரயில்வே, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் வரும் தளவாடத் தொழிற்சாலை மற்றும் தில்லி மாநகராட்சிக்கு பணிக்கு இவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.021.2015 ஆம் தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2015
மேலும் தேர்வுக் கட்டணம், தேர்வு செய்யப்படும் முறை, தேர்வுக்கான பாடத்திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Saturday, March 7, 2015
இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்
டேராடூனிலுள்ள ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் 2016-ம் கல்வியாண்டுக்கான 8-ம் வகுப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2003 ஜன.2 மற்றும் 2004 ஜூலை 1-ம் தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் பிறந்தவராகவும், 2016 ஜன.1-ம் தேதி அன்று 7-ம் வகுப்பு படித்து கொண்டிருப்பவராக அல்லது முடித்தவராக உள்ள மாணவர்கள் இக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்.
தகுதித் தேர்வு விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பை பொதுப் பிரிவினர் பதிவஞ்சலில் பெற ரூ.430, துரித தபாலில் பெற ரூ 480, பட்டியல் மற்றும் அட்டவணை இனத்தவர் பதிவஞ்சலில் பெற ரூ.385, துரித தபாலில் பெற ரூ. 435, THE COMMANDANT DEHRUN என்ற பெயரில் டேராடூன் பாரத ஸ்டேட் வங்கியில் மாற்றத் தக்க வகையில் காசோ லை (டிராப்ட்) எடுத்து அதனை கமாண்டன்ட், ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூ ரி, டேராடூன் - 248 003 உத்திரகாண்ட் என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பம் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் தமிழ்நாடு அரசு பணியாளார் தேர்வாணையம், சென்னை-3 என்ற முகவரிக்கு மார்ச் 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு ஜூன். 1,2, ஆகியத் தேதிகளிலும், வாய்மொழித் தேர்வு அக்.6-ம் தேதி நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு THE COMMANDANT DEHRUN இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
Saturday, February 14, 2015
காந்திநகரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் 2015ம் கல்வியாண்டுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்:
எம்.டெக்., (சிவில், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மெட்டிரியல் சயின்ஸ்)
தகுதி:
இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பி.டெக்/பி.இ ஆகிய படிப்பில் ஏதாவதொன்றில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கேட் நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண், நேர்முகத்தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
உதவித்தொகை:
முழுநேர எம்.டெக்., படிப்புக்கு மாதம்தோறும் ரூ.8 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
இதுமட்டுமன்று, தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகளில் பங்கேற்கவும், ஆராய்ச்சிகளில் ஈடுபடவும் ரூ.60 ஆயிரம் வரை வழங்க உள்ளது இந்நிறுவனம்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முக்கிய தேதி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஏப்ரல் 3 கடைசி நாளாகும். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மே 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு ஐஐடி-காந்திபூர் இணையதளத்தை பார்க்கலாம்.
Sunday, January 11, 2015
ராணுவ மருத்துவ அறிவியல் கல்லூரியில் மருத்துவ படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2015-16ம் கல்வியாண்டில் பிடிஎஸ், எம்டிஎஸ் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வி தகுதியாக பிடிஎஸ் படிப்புக்கு பிளஸ் 2வில் (இயற்பியல், வேதியியல், உயிரியல்)பாடப்பிரிவை எடுத்து படித்திருக்க வேண்டும்.
முதுகலை படிப்புக்கு அங்கீகாரம் பெற்ற பல்கலையில் பிடிஎஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவங்களை கல்லூரி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்ரவரி 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு கல்வி நிறுவன இணையதளத்தை பார்க்கலாம்.
Saturday, December 6, 2014
கோயம்பத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் அண்ணா நூற்றாண்டு ஐஏஎஸ் பயிற்சி மையம் தமிழக அரசின் நிதி உதவிடன் செயல்பட்டு வருகிறது.
ஐஏஎஸ், ஐபிஎஸ உள்ளிட்ட சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு எழுத விரும்பும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி மையத்தில் மாதாந்திர உதவித்தொகையுடன் 6 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது.
2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி நடைபெற உள்ள சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சியில் சேர விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்புவோர் டிசம்பர் 30ம் தேதியன்று நடத்தப்படும் நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுப்படுவர்.
நுழைவுத்தேர்வு டிசம்பர் 30ம் தேதியன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை பாரதியார் பல்கலைக்கழக டாக்டர்.உஷா மேத்தா அரங்கில் நடைபெறும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் டிசம்பர் 15ம் தேதிக்குள் சென்றடையுமாறு அனுப்ப வேண்டும்.
மேலும் விரிவான தகவல்களுக்கு www.b-u.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பி.எச்டி.,(மேலாண்மை) படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பி.எச்டி.,மேலாண்மை படிப்புக்கு அங்கீகாரம் பெற்ற பல்கலை மற்றும் கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ.,வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.950 வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்.
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்துத் தேர்வு டிசம்பர் 20ம் தேதி நடைபெறுகிறது. கூடுதல் தகவல்களுக்கு www.vit.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.
Sunday, July 27, 2014
தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஓடி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் உள்ள இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
தமிழ்நாட்டில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம்., பி.பி.டி., பி.ஏ.எஸ்.எல்.பி. (செவித்திறன், பேச்சு மற்றும் மொழிநோ குறியியல்), பி.எஸ்சி., ரேடியாலஜி மற்றும் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.ஓ.டி. ஆகிய படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில் சேர விரும்பும் உயிரியல் பாடத்தை எடுத்து பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ் டூ வகுப்பில் தொழிற்கல்வியை பாடமாக எடுத்துப் படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பக் கட்டணம் ரூ.350. ‘செயலாளர், தேர்வுக் குழு, கீழ்ப்பாக்கம், சென்னை- 10’ என்ற பெயரில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் டிமாண்ட் டிராப்ட் எடுக்க வேண்டும். அதனுடன் விண்ணப்பக் கேட்புக் கடிதத்தையும் டிமாண்ட் டிராப்ட்டையும் இணைத்து, 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கொடுத்து விண்ணப்பத்தை நேரில் பெற்றுக்கொள்ளலாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. கெஜட்டட் அலுவலர்களிடம் சான்றொப்பம் பெற்ற இரண்டு சாதிச் சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பக் கேட்புக் கடிதத்தை இணைத்துக் கொடுத்து, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல், மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.
சென்னையில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி.), ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, மதுரையிலுள்ள அரசு இராஜாஜி மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, சேலத்திலுள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, திருச்சியிலுள்ள கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, வேலூர் மருத்துவக் கல்லூரி, தேனி மருத்துவக் கல்லூரி, தர்மபுரி மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, திருவாரூர் மருத்துவக் கல்லூரி, சிவகங்கை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி ஆகிய 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கும். கீழ்ப்பாக்கத்திலுள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் தேர்வுக் குழு அலுவலகத்தில் விண்ணப்பங்கள் கிடைக்காது.
சம்பந்தப்பட்ட இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், இந்த அனைத்துப் பட்டப் படிப்புகளிலும் சேருவதற்கு ஒரே விண்ணப்பம் அனுப்பினால் போதுமானது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர், தேர்வுக் குழு,
162, ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
கீழ்ப்பாக்கம், சென்னை - 600010.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 19.07.2014
விவரங்களுக்கு: www.tnhealth.org, www.tn.gov.in
பயோ டெக் வேலை பெற உதவித்தொகையுடன் படிப்பு!பயோ டெக்னாலஜி படித்த மாணவர்கள் பயோ டெக் தொழில் நிறுவனங்களில் பணிபுரிவதற்கு ஏற்ற வகையில் மத்திய அரசின் தொழில்நுட்பத் துறை உதவியுடன் ஓராண்டு முதுநிலை டிப்ளமோ படிப்பு நடத்தப்படுகிறது. இந்தப் படிப்பில் சேர தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
பயோ டெக்னாலஜி வளர்ந்து வரும் முக்கியத்துறை. பயோ டெக்னாலஜி தொடர்பான படிப்புகளைப் படித்த மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு ஏற்ற வகையில் திறன்களைப் பெறுவதற்காக முதுநிலை டிப்ளமோ படிப்பு நடத்தப்படுகிறது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் உதவியுடன் பயோ டெக்னலாஜி ஃபினிஷிங் ஸ்கூல்ஸ் திட்டத்தின்கீழ் கர்நாடக அரசு இந்தப் படிப்பை நடத்துகிறது.
பயோ இன்பர்மேட்டிக்ஸ் அண்ட் ரேஷனல் டிரக் டிசைன், செல்லுலர் அண்ட் மாலிக்கியூலர் டயக்னாஸ்டிக்ஸ், ஃபெர்மெண்டேஷன் அண்ட் பயோபுராசசிங், நியூட்ராசூட்டிக்கல்ஸ் அண்ட் ஃபுட் புராசசிங், பிளாண்ட் டிஸ்யூ கல்ச்சர் அண்ட் மைக்ரோபுராபகேஷன், பிளாண்ட் ஜெனிட்டிக் டிரான்ஸ்பர்மேஷன், ஜீனோம், சீட் அண்ட் மார்க்கர் அனாலிசிஸ், பிரி-கிளினிக்கல், கிளினிக்கல் ரிசர்ச், பயோ ஸ்டாட்டிஸ்ட்டிக்ஸ் அண்ட் டேட்டா மேனேஜ்மெண்ட், புரோட்டீன் எக்ஸ்பிரஷன் அண்ட் ஸ்கேல் அப் ஆகிய பாடப்பிரிவுகளில் இந்தப் படிப்பு நடத்தப்படுகிறது. கர்நாடகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த 12 கல்வி நிறுவனங்களில் இந்த முதுநிலை டிப்ளமோ படிப்பைப் படிக்கலாம்.
இந்தப் படிப்பில் சேர மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.50 ஆயிரம். இப்படிப்பில் சேர தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும். இந்த ஓராண்டு டிப்ளமோ படிப்பில் சேரும் மாணவர்கள் பயோ டெக்னலாஜி நிறுவனத்தில் ஆறு மாதங்கள் இன்டர்ன்ஷிப் பெற வேண்டியதிருக்கும். தொழில் நிறுவனங்களில் பணிபுரிவதற்கேற்ற வகையில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதால், படிப்பை முடித்த மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்களில் பணிபுரிய வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதற்கான உதவிகளும் செய்யப்படும்.
இந்தப் படிப்பில் யார் சேரலாம்?
உயிர் அறிவியல், பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, பயோ இன்பர்மேட்டிக்ஸ் அல்லது இது தொடர்பான படிப்புகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டப் படிப்பு படித்த மாணவர்கள் இந்த முதுநிலை டிப்ளமோ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். பயோ டெக்னாலஜி, பயோ இன்பர்மேட்டிக்ஸ் ஆகிய பாடப் பிரிவுகளில் பிஇ, பிடெக் படித்தவர்களும் இப்படிப்பில் சேரலாம். பிபார்ம், பிஎஸ்சி (அக்ரி), பிவிஎஸ்சி, எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்சி (பிளாண்ட் டிஸ்யூகல்ச்சர் அண்ட் மைக்ரோபுராபகேஷன்) படிப்புகளைப் படித்தவர்களும் இப்படிப்பில் சேரலாம். இறுதி ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களும் இந்த டிப்ளமோ படிப்பில் சேர விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த முதுநிலை டிப்ளமோ படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு கர்நாடகா பயோ டெக்னாலஜி ஆப்டிட்யூட் டெஸ்ட் (ரிஙிகிஜி) என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதிகள் நடைபெறுகிறது. ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த ஆன்லைன் தேர்வில் அப்ஜெக்ட்டிவ் முறையில் 100 கேள்விகள் கேட்கப்படும். உயிரியல் பாடத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் குறித்து கேள்விகள் கேட்கப்படும். செல் அண்ட் மாலிக்கியூலர் பயாலஜி, பொது பயாலஜி, ஜெனரல் ஆப்டிட்யூட், ஆங்கிலம் ஆகியவற்றிலிருந்தும் கேள்விகள் இருக்கும். இத்தேர்வில் தகுதி பெறும் மாணவர்கள் ஆகஸ்ட் 25, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதிலிருந்து தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதுகுறித்த அறிவிப்பு செப்டம்பர் 3-ஆம் தேதி வெளியிடப்படும். இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஜூலை 25-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விவரங்களுக்கு: www.btfskarnataka.org

Sunday, July 6, 2014
பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விற்பனை திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்குகிறது.
இது குறித்து மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில், பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பி.எஸ்சி ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஓடி உள்ளிட்ட மருத்துவம் சார் பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்குகிறது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் வரும் 18-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் கிடைக்கும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 19-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் ரூ.350 யை விண்ணப்பதாரர்கள், செயலாளர், தேர்வுக் குழு என்ற பெயரில் எடுக்கப்பட்ட காசோலையாக செலுத்த வேண்டும். எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
மேலும் விபரங்களை www.tnhealth.org என்ற இணையதளத்தில் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Monday, June 16, 2014
அரசு பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் 748 விரிவுரையாளர், பேராசிரியர்கள் நியமனம்: போட்டித் தேர்வு ஜூலையில் அறிவிப்பு
அரசு பாலிடெக்னிக், அரசு பொறி யியல் கல்லூரிகளில் விரைவில் 748 விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகிறது.
தமிழகத்தில் 10 அரசு பொறி யியல் கல்லூரிகள், 40 அரசு பாலி டெக்னிக் கல்லூரிகள் உள்ளன. பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களும், பாலிடெக்னிக்கில் விரிவுரையா ளர் பணியிடங்களும் நேரடியாக நிரப்பப்படுகின்றன. இதற்கான போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.
இந்த ஆண்டு அரசு பாலிடெக் னிக்கில் 605 விரிவுரையாளர்கள், அரசு பொறியியல் கல்லூரிகளில் 143 உதவி பேராசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள் ளது. இதையடுத்து, இப்பணியி டங்களில் பாடப்பிரிவு வாரியான காலியிடங்கள் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 748 விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படு வார்கள். இதற்கான அறிவிப்பை ஜூலையில் வெளியிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித் தார்.
பொறியியல் அல்லாத 220 பணியிடம்
பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் பாட ஆசிரியர்கள் மட்டுமின்றி ஆங்கிலம், கணிதம், இயற்பி யல், வேதியியல் உள்ளிட்ட பொறியி யல் அல்லாத பாட ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர். அந்த வகையில், பொறியியல் அல்லாத பாடப்பிரிவு இடங்கள் பாலி டெக்னிக்கில் 200-ம், பொறியியல் கல்லூரிகளில் 20-ம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வித் தகுதி, வயது வரம்பு
பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியைப் பொருத்தவரையில், பொறியியல் பாடப்பிரிவுக்கு முதல் வகுப்பு பி.இ. அல்லது பி.டெக். பட்டம் வேண்டும். பொறி யியல் அல்லாத பிரிவுகளுக்கு முதல் வகுப்பு முதுநிலை பட்டம் தேவை.
பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பதவிக்கு பொறியியல் பிரிவுக்கு பி.இ. அல்லது எம்.இ. படிப்பில் ஏதே னும் ஒன்றில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் அல்லாத பாடப்பிரிவு களுக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் 55 சதவீத மதிப்பெண்ணுடன் முதுநிலை பட்டம் அவசியம்.
அதோடு, யுஜிசி ‘நெட்’ அல்லது ‘ஸ்லெட்’ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விரிவு ரையாளர், உதவி பேராசிரியர் பணிகளுக்கு வயது வரம்பு கட்டுப்பாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Saturday, June 14, 2014
முக்கிய தினங்கள்
சென்னை மற்றும் கும்பகோணத்திலுள்ள அரசு கவின் கலைக் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 15.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 20.
தமிழகத்திலுள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த பி.ஏ., பி.எல். பட்டப் படிப்பிற்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் தேதி: ஜூன் 23.
யூஜிசி நடத்தும் கல்லூரி ஆசிரியர் தகுதித் தேர்வு (UGC-NET) மற்றும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் தேர்வு நடைபெறும் தேதி: ஜூன் 29.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் (நேர்காணல் இல்லாத பணி) குரூப் 2அ தேர்வு நடைபெறும் தேதி : ஜூன் 29
கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், டிப்ளமோ படிப்புகளைப் படிக்க விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 30.
மத்திய ஹிந்தி இயக்ககம் நடத்தும் ஹிந்தி மொழிச் சான்றிதழ் படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 30.
மாமல்லபுரத்தில் உள்ள அரசு கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 30.

Monday, June 9, 2014
தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கு தனித்தேர்வர்கள் ஜூன் 9, 10 தேதிகளில் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ தேர்வுகள் ஜூன் 26 முதல் ஜூலை 14 வரை நடைபெறுகின்றன. முதலாமாண்டு, இரண்டாமாண்டு தேர்வுகளுக்கு ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் இப்போது தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்த பிறகு, அருகிலுள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வுக்கட்டணத்துடன் சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலேயே நேரடியாகச் செலுத்த வேண்டும்.
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்புக்கான(B.f.sc) விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 15 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் எஸ்.ஏ.சண்முகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2014-2015-ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மீனவள அறிவியல் பட்டப்படிப்பில் சேர கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை www.tnfu.org.in என்ற இணையதள முகவரியில் ஜூன் 10-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தற்போது இந்த கால அவகாசம் ஜூன் 15 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் தகவல்கள் பெற 04365-240449, 0461-2340554 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Thursday, May 29, 2014
எம்பிஏ, எம்சிஏ சேர 2ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்
தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், கல்லூரிக் கல்வி இயக்ககம் ஆகியவற்றின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அண்ணா பல்கலைக் கழக வட்டார வள மையங்கள், சென்னை பல்கலைக் கழகம், பெரியார் பல்கலைக் கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம், தனியார் பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ ஆகியவற்றில் முதுநிலை பட்டப் படிப்பில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடக்க இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 2ம் தேதி முதல் 30ம் தேதிவரை வழங்கப்பட உள்ளன. விண்ணப்பங்களை நேரடியாக பெற விரும்புவோர் 300க்கு, செயலாளர், தமிழ்நாடு எம்பிஏ, எம்சிஏ சேர்க்கை 2014, அரசு தொழில்நுட்ப கல்லூரி, கோவை&641013 என்ற பெயரில் டிடி எடுத்து கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மேற்கண்ட முகவரிக்கு ஜூன் 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். எம்பிஏ, எம்சிஏ முதுநிலை பட்டப் படிப்புக்கான கவுன்சலிங் ஜூலை 3வது வாரத்தில் கோவையில் நடக்கும். இதற்கான அழைப்புக் கடிதங்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
"நெட்' தேர்வில் மாற்றம் கொண்டு வரும் யுஜிசி
பல்கலைக்கழக, கல்லூரி பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வில் (நெட்) மாற்றம் கொண்டுவர பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) முடிவு செய்துள்ளது.
உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக தகுதித் தேர்வில் மாற்றம் கொண்டுவர யுஜிசி திட்டமிட்டிருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதற்காக ஜ்ஜ்ஜ்.ன்ஞ்ஸ்ரீ.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் 10 கேள்விகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. அதாவது, உயர் கல்வி ஆசிரியரை அடையாளம் காண "நெட்' தேர்வு போதுமானதாக உள்ளதா, தேர்வில் பங்கேற்க வயது வரம்பு கொண்டுவர வேண்டுமா, இந்தத் தகுதித் தேர்வில் ஒருவர் இத்தனை முறைதான் பங்கேற்க வேண்டும் என கட்டுப்பாடு கொண்டுவர வேண்டுமா, தவறான பதில்களுக்கு "நெகட்டிவ்' மதிப்பெண் கொடுக்கப்பட வேண்டுமா என்பன உள்ளிட்ட 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
மாணவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், கல்வி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இந்த கேள்விகளுக்கு தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்குமாறு யுஜிசி கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு கேள்விக்கு அருகிலும் ஆம், இல்லை என்ற இரண்டு பதில்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பதிலில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, சமர்ப்பிப்பு பட்டனை அழுத்தினால் போதும்; கருத்து பதிவு செய்யப்பட்டு விடும்.
இது குறித்து யுஜிசி துணைத் தலைவர் தேவராஜ் கூறியது:
உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், "நெட்' தகுதித் தேர்வில் சில மாற்றங்களைக் கொண்டுவர யுஜிசி முடிவு செய்துள்ளது. இதற்காக தனி குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, தகுதித் தேர்வில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரலாம் என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பல்வேறு தரப்பினரின் கருத்துகளை அறிவதற்காக 10 கேள்விகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தக் கருத்துகள் மற்றும் குழு முடிவுகளின் அடிப்படையில், "நெட்' தகுதித் தேர்வில் மாற்றம் கொண்டுவரப்படும்.
இப்போது ஜூன் மாதம் நடைபெற உள்ள "நெட்' தேர்வில் எந்தவித மாற்றமும் இருக்காது. ஆனால், டிசம்பரில் நடத்தப்படும் தேர்வில் மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
இப்போது "நெட்' தகுதித் தேர்வில் "நெகட்டிவ்' மதிப்பெண், வயது வரம்பு ஆகியவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
Wednesday, May 28, 2014
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான முழு உதவித்தொகை
எபிலிட்டி பவுண்டேஷன் மற்றும் சத்யபாமா பல்கலை ஆகியவை இணைந்து, தகுதியுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டங்களை வழங்குகின்றன.
அந்த தகுதிவாய்ந்த மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, பொறியியல், விஸ்காம், பி.எட்., மற்றும் வணிகவியல் உள்ளிட்ட பிரிவுகளில், 10 இடங்கள் ஒதுக்கப்படும். இந்த 10 இடங்களைப் பெறும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, படிப்பு காலம் முழுவதும் முழு உதவித்தொகை வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசித் தேதி மே 31. விரிவான அனைத்து விபரங்களுக்கும்www.abilityfoundation.org.

5 ஆண்டு சட்டப் படிப்புகளில் சேர விருப்பமா?
NMIMS கல்வி நிறுவனம், 2014ம் கல்வியாண்டில், தான் வழங்கும் ஒருங்கிணைந்த B.A., LL.B (Hons) மற்றும் B.B.A., LL.B (Hons) ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பலவிதமான தேவைகளை நிறைவு... See More

Saturday, May 24, 2014
செப்டம்பரில் கிராம வங்கித் தேர்வு
ஒவ்வொரு ஆண்டும் கிராம வங்கி ஊழியர்களின் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைபெறுகிறது. தற்போது ஐ.பி.பி.எஸ் (IPPS) என்ற அமைப்பிடம் தேர்வு நடத்துவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிராம வங்கிகளைப் பொறுத்தவரை, நேர்முகத் தேர்வினை அந்தந்த கிராம வங்கிகளே நடத்திக் கொள்கின்றன.நடப்பாண்டில் எழுத்துத் தேர்வு நடக்கும் உத்தேச தேதிகளை ஐ.பி.பி.எஸ் வெளியிட்டிருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் 6,7, 13, 14, 20, 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இந்தத் தேர்வு நடக்கும். தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இது அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்யும்.மற்ற மாநிலங்களில், ஆட்களை நிரப்பும் பணி துரிதமாக நடைபெறுகிறது.
தமிழகத்தில் இரண்டு கிராம வங்கிகள் உள்ளன. வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பல்லவன் கிராம வங்கியின் கிளைகள் உள்ளன. தெற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் பாண்டியன் கிராம வங்கியின் கிளைகள் உள்ளன.கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி, அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணியிடங்களை பல்லவன் கிராம வங்கி நிரப்பியுள்ளது. ஆனால், பாண்டியன் கிராம வங்கியைப் பொறுத்தவரை, தற்போதுதான் அதிகாரிகளின் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வை நிறைவு செய்துள்ளது.தெற்கு மாவட்டங்களிலிருந்து ஏராளமானவர்கள் ஊழியர்களுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று, பாண்டியன் கிராம வங்கி விரைவில் பணியிட நிரப்புதலுக்கான அறிவிக்கையை வெளியிடும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குள் அடுத்த எழுத்துத் தேர்வே வந்துவிட்டது.
ரயில்வே தேர்வுக்குவிண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு...
சில மாதங்களுக்கு முன்பாக ரயில்வே துறையில் 26 ஆயிரத்து 570 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியானது. லட்சக்கணக்கானவர்கள் அதற்கு விண்ணப்பமும் செய்திருக்கிறார்கள். இந்நிலையில் இதற்கான எழுத்துத் தேர்வு ஜூன் மாதம் 15 ஆம் தேதியன்று நடக்கவிருக்கிறது.பொது அறிவுத்தாளில் அறிவியல் கேள்விகள் அதிகமாகக் கேட்கப்பட்டு வருகிறது. அதனால், இந்தத் தேர்வை எழுதப் போகிறவர்கள் பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களிலிருந்து அறிவியல் கேள்விகளைப் படித்துக் கொள்ள உதவும்.சொல்லப்போனால், வி.ஏ.ஓ. தேர்வு 14 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. பொது அறிவுத்தாளுக்கான தயாரிப்பு, இதற்கும் பெரிய அளவில் உதவியாகவே அமையும்.
தபால்துறைத் தேர்வு
தபால்துறையில் Multi tasking staffபணிக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் ஹால் டிக்கெட் வந்துவிட்டதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஜூன் 1 ஆம் தேதியன்று தேர்வு நடைபெறவுள்ளது. பத்தாம் வகுப்புக்கு உள்ள பாடங்களில் இருந்துதான் பொது அறிவுக்கேள்விகள் வரும். குறிப்பாக, அறிவியல் பாடங்களை ஒரு முறை நன்றாக வாசித்துக் கொள்வது நல்லது.

Friday, May 16, 2014
எஸ்.ஆர்.எம் பல்கலை: முதுகலை பல் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பம்
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில், 2014ம் ஆண்டில் முதுகலை பல் மருத்துவப் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எம்.டி.எஸ் படிப்பில்
* Conservative Dentistry and Endodontics
* Oral and Maxilofacial Surgery
* Orthodontcs and Dento Facial Orthopedics
* Periodontology, Prosthodontics and Crown & Bridge
கல்வித்தகுதி:
இளங்கலை பல் மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவர்கள் இன்டன்ஷிப் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை; விண்ணப்பப் படிவங்களை பல்கலைக்கழக இணையதளத்தின் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ரூ.1000. டிடி எடுத்து விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க மே 24 கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 26ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
அம்பானி கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப படிப்பு
குஜராத்தில் உள்ள Dhirubhai Ambani Institute of Information and Communication Technology -யில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைநடைபெற்று வருகிறது.
வழங்கப்படும் படிப்புகள்: பி.டெக்., (ICT), (Honours) with minor in Computational Science (இது தவிர எம்.டெக்., இன்பர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி, எம்.எஸ்சி, எம்.டிசைன் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பக் கட்டணம் ரூ.1200. மேலும் விவரங்களுக்கு www.daiict.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
சட்டப் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு
பெங்களூரில் உள்ள நேஷனல் லா ஸ்கூல் ஆப் இந்தியா யூனிவர்சிட்டி.,யில் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் சட்டப்படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்:
Master of Business Law (2 years)-distance
Post Graduate Diploma (PGD) in Human Rights Law (1 year)-distance
PGD in Medical Law & Ethics
PGD in intellectual Property Rights Law
PGD in Child Rights Law
PGD in Consumer Law & Practice
PGD in Cyber Law & Cyber Forensics
கல்வித்தகுதி; அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணபிப்பவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ரூ.1500 விண்ணப்பக் கட்டணமாக வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு www.nls.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Subscribe to:
Posts (Atom)