Monday, June 16, 2014

அரசு பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் 748 விரிவுரையாளர், பேராசிரியர்கள் நியமனம்: போட்டித் தேர்வு ஜூலையில் அறிவிப்பு

அரசு பாலிடெக்னிக், அரசு பொறி யியல் கல்லூரிகளில் விரைவில் 748 விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகிறது.

தமிழகத்தில் 10 அரசு பொறி யியல் கல்லூரிகள், 40 அரசு பாலி டெக்னிக் கல்லூரிகள் உள்ளன. பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களும், பாலிடெக்னிக்கில் விரிவுரையா ளர் பணியிடங்களும் நேரடியாக நிரப்பப்படுகின்றன. இதற்கான போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.

இந்த ஆண்டு அரசு பாலிடெக் னிக்கில் 605 விரிவுரையாளர்கள், அரசு பொறியியல் கல்லூரிகளில் 143 உதவி பேராசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள் ளது. இதையடுத்து, இப்பணியி டங்களில் பாடப்பிரிவு வாரியான காலியிடங்கள் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 748 விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படு வார்கள். இதற்கான அறிவிப்பை ஜூலையில் வெளியிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித் தார்.

பொறியியல் அல்லாத 220 பணியிடம்

பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் பாட ஆசிரியர்கள் மட்டுமின்றி ஆங்கிலம், கணிதம், இயற்பி யல், வேதியியல் உள்ளிட்ட பொறியி யல் அல்லாத பாட ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர். அந்த வகையில், பொறியியல் அல்லாத பாடப்பிரிவு இடங்கள் பாலி டெக்னிக்கில் 200-ம், பொறியியல் கல்லூரிகளில் 20-ம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வித் தகுதி, வயது வரம்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியைப் பொருத்தவரையில், பொறியியல் பாடப்பிரிவுக்கு முதல் வகுப்பு பி.இ. அல்லது பி.டெக். பட்டம் வேண்டும். பொறி யியல் அல்லாத பிரிவுகளுக்கு முதல் வகுப்பு முதுநிலை பட்டம் தேவை.

பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பதவிக்கு பொறியியல் பிரிவுக்கு பி.இ. அல்லது எம்.இ. படிப்பில் ஏதே னும் ஒன்றில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் அல்லாத பாடப்பிரிவு களுக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் 55 சதவீத மதிப்பெண்ணுடன் முதுநிலை பட்டம் அவசியம்.

அதோடு, யுஜிசி ‘நெட்’ அல்லது ‘ஸ்லெட்’ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விரிவு ரையாளர், உதவி பேராசிரியர் பணிகளுக்கு வயது வரம்பு கட்டுப்பாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Saturday, June 14, 2014

முக்கிய தினங்கள்

சென்னை மற்றும் கும்பகோணத்திலுள்ள அரசு கவின் கலைக் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 15.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 20.

தமிழகத்திலுள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த பி.ஏ., பி.எல். பட்டப் படிப்பிற்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் தேதி: ஜூன் 23.

யூஜிசி நடத்தும் கல்லூரி ஆசிரியர் தகுதித் தேர்வு (UGC-NET) மற்றும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் தேர்வு நடைபெறும் தேதி: ஜூன் 29.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் (நேர்காணல் இல்லாத பணி) குரூப் 2அ தேர்வு நடைபெறும் தேதி : ஜூன் 29

கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், டிப்ளமோ படிப்புகளைப் படிக்க விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 30.

மத்திய ஹிந்தி இயக்ககம் நடத்தும் ஹிந்தி மொழிச் சான்றிதழ் படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 30.

மாமல்லபுரத்தில் உள்ள அரசு கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 30.

Monday, June 9, 2014

தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கு தனித்தேர்வர்கள் ஜூன் 9, 10 தேதிகளில் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ தேர்வுகள் ஜூன் 26 முதல் ஜூலை 14 வரை நடைபெறுகின்றன. முதலாமாண்டு, இரண்டாமாண்டு தேர்வுகளுக்கு ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் இப்போது தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்த பிறகு, அருகிலுள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வுக்கட்டணத்துடன் சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலேயே நேரடியாகச் செலுத்த வேண்டும்.
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்புக்கான(B.f.sc) விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 15 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் எஸ்.ஏ.சண்முகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2014-2015-ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மீனவள அறிவியல் பட்டப்படிப்பில் சேர கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை www.tnfu.org.in என்ற இணையதள முகவரியில் ஜூன் 10-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தற்போது இந்த கால அவகாசம் ஜூன் 15 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் தகவல்கள் பெற 04365-240449, 0461-2340554 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.