Thursday, May 29, 2014

எம்பிஏ, எம்சிஏ சேர 2ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்
தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், கல்லூரிக் கல்வி இயக்ககம் ஆகியவற்றின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அண்ணா பல்கலைக் கழக வட்டார வள மையங்கள், சென்னை பல்கலைக் கழகம், பெரியார் பல்கலைக் கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம், தனியார் பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ ஆகியவற்றில் முதுநிலை பட்டப் படிப்பில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடக்க இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 2ம் தேதி முதல் 30ம் தேதிவரை வழங்கப்பட உள்ளன. விண்ணப்பங்களை நேரடியாக பெற விரும்புவோர் 300க்கு, செயலாளர், தமிழ்நாடு எம்பிஏ, எம்சிஏ சேர்க்கை 2014, அரசு தொழில்நுட்ப கல்லூரி, கோவை&641013 என்ற பெயரில் டிடி எடுத்து கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மேற்கண்ட முகவரிக்கு ஜூன் 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். எம்பிஏ, எம்சிஏ முதுநிலை பட்டப் படிப்புக்கான கவுன்சலிங் ஜூலை 3வது வாரத்தில் கோவையில் நடக்கும். இதற்கான அழைப்புக் கடிதங்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
"நெட்' தேர்வில் மாற்றம் கொண்டு வரும் யுஜிசி
பல்கலைக்கழக, கல்லூரி பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வில் (நெட்) மாற்றம் கொண்டுவர பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) முடிவு செய்துள்ளது.
உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக தகுதித் தேர்வில் மாற்றம் கொண்டுவர யுஜிசி திட்டமிட்டிருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதற்காக ஜ்ஜ்ஜ்.ன்ஞ்ஸ்ரீ.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் 10 கேள்விகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. அதாவது, உயர் கல்வி ஆசிரியரை அடையாளம் காண "நெட்' தேர்வு போதுமானதாக உள்ளதா, தேர்வில் பங்கேற்க வயது வரம்பு கொண்டுவர வேண்டுமா, இந்தத் தகுதித் தேர்வில் ஒருவர் இத்தனை முறைதான் பங்கேற்க வேண்டும் என கட்டுப்பாடு கொண்டுவர வேண்டுமா, தவறான பதில்களுக்கு "நெகட்டிவ்' மதிப்பெண் கொடுக்கப்பட வேண்டுமா என்பன உள்ளிட்ட 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
மாணவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், கல்வி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இந்த கேள்விகளுக்கு தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்குமாறு யுஜிசி கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு கேள்விக்கு அருகிலும் ஆம், இல்லை என்ற இரண்டு பதில்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பதிலில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, சமர்ப்பிப்பு பட்டனை அழுத்தினால் போதும்; கருத்து பதிவு செய்யப்பட்டு விடும்.
இது குறித்து யுஜிசி துணைத் தலைவர் தேவராஜ் கூறியது:
உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், "நெட்' தகுதித் தேர்வில் சில மாற்றங்களைக் கொண்டுவர யுஜிசி முடிவு செய்துள்ளது. இதற்காக தனி குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, தகுதித் தேர்வில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரலாம் என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பல்வேறு தரப்பினரின் கருத்துகளை அறிவதற்காக 10 கேள்விகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தக் கருத்துகள் மற்றும் குழு முடிவுகளின் அடிப்படையில், "நெட்' தகுதித் தேர்வில் மாற்றம் கொண்டுவரப்படும்.
இப்போது ஜூன் மாதம் நடைபெற உள்ள "நெட்' தேர்வில் எந்தவித மாற்றமும் இருக்காது. ஆனால், டிசம்பரில் நடத்தப்படும் தேர்வில் மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
இப்போது "நெட்' தகுதித் தேர்வில் "நெகட்டிவ்' மதிப்பெண், வயது வரம்பு ஆகியவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Wednesday, May 28, 2014

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான முழு உதவித்தொகை
எபிலிட்டி பவுண்டேஷன் மற்றும் சத்யபாமா பல்கலை ஆகியவை இணைந்து, தகுதியுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டங்களை வழங்குகின்றன.
அந்த தகுதிவாய்ந்த மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, பொறியியல், விஸ்காம், பி.எட்., மற்றும் வணிகவியல் உள்ளிட்ட பிரிவுகளில், 10 இடங்கள் ஒதுக்கப்படும். இந்த 10 இடங்களைப் பெறும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, படிப்பு காலம் முழுவதும் முழு உதவித்தொகை வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசித் தேதி மே 31. விரிவான அனைத்து விபரங்களுக்கும்www.abilityfoundation.org.
5 ஆண்டு சட்டப் படிப்புகளில் சேர விருப்பமா?
NMIMS கல்வி நிறுவனம், 2014ம் கல்வியாண்டில், தான் வழங்கும் ஒருங்கிணைந்த B.A., LL.B (Hons) மற்றும் B.B.A., LL.B (Hons) ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பலவிதமான தேவைகளை நிறைவு... See More

Saturday, May 24, 2014

செப்டம்பரில் கிராம வங்கித் தேர்வு

ஒவ்வொரு ஆண்டும் கிராம வங்கி ஊழியர்களின் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைபெறுகிறது. தற்போது ஐ.பி.பி.எஸ் (IPPS) என்ற அமைப்பிடம் தேர்வு நடத்துவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிராம வங்கிகளைப் பொறுத்தவரை, நேர்முகத் தேர்வினை அந்தந்த கிராம வங்கிகளே நடத்திக் கொள்கின்றன.நடப்பாண்டில் எழுத்துத் தேர்வு நடக்கும் உத்தேச தேதிகளை ஐ.பி.பி.எஸ் வெளியிட்டிருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் 6,7, 13, 14, 20, 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இந்தத் தேர்வு நடக்கும். தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இது அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்யும்.மற்ற மாநிலங்களில், ஆட்களை நிரப்பும் பணி துரிதமாக நடைபெறுகிறது.

தமிழகத்தில் இரண்டு கிராம வங்கிகள் உள்ளன. வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பல்லவன் கிராம வங்கியின் கிளைகள் உள்ளன. தெற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் பாண்டியன் கிராம வங்கியின் கிளைகள் உள்ளன.கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி, அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணியிடங்களை பல்லவன் கிராம வங்கி நிரப்பியுள்ளது. ஆனால், பாண்டியன் கிராம வங்கியைப் பொறுத்தவரை, தற்போதுதான் அதிகாரிகளின் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வை நிறைவு செய்துள்ளது.தெற்கு மாவட்டங்களிலிருந்து ஏராளமானவர்கள் ஊழியர்களுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று, பாண்டியன் கிராம வங்கி விரைவில் பணியிட நிரப்புதலுக்கான அறிவிக்கையை வெளியிடும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குள் அடுத்த எழுத்துத் தேர்வே வந்துவிட்டது.

ரயில்வே தேர்வுக்குவிண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு...

சில மாதங்களுக்கு முன்பாக ரயில்வே துறையில் 26 ஆயிரத்து 570 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியானது. லட்சக்கணக்கானவர்கள் அதற்கு விண்ணப்பமும் செய்திருக்கிறார்கள். இந்நிலையில் இதற்கான எழுத்துத் தேர்வு ஜூன் மாதம் 15 ஆம் தேதியன்று நடக்கவிருக்கிறது.பொது அறிவுத்தாளில் அறிவியல் கேள்விகள் அதிகமாகக் கேட்கப்பட்டு வருகிறது. அதனால், இந்தத் தேர்வை எழுதப் போகிறவர்கள் பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களிலிருந்து அறிவியல் கேள்விகளைப் படித்துக் கொள்ள உதவும்.சொல்லப்போனால், வி.ஏ.ஓ. தேர்வு 14 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. பொது அறிவுத்தாளுக்கான தயாரிப்பு, இதற்கும் பெரிய அளவில் உதவியாகவே அமையும்.

தபால்துறைத் தேர்வு

தபால்துறையில் Multi tasking staffபணிக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் ஹால் டிக்கெட் வந்துவிட்டதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஜூன் 1 ஆம் தேதியன்று தேர்வு நடைபெறவுள்ளது. பத்தாம் வகுப்புக்கு உள்ள பாடங்களில் இருந்துதான் பொது அறிவுக்கேள்விகள் வரும். குறிப்பாக, அறிவியல் பாடங்களை ஒரு முறை நன்றாக வாசித்துக் கொள்வது நல்லது.

Friday, May 16, 2014

எஸ்.ஆர்.எம் பல்கலை: முதுகலை பல் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பம்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில், 2014ம் ஆண்டில் முதுகலை பல் மருத்துவப் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எம்.டி.எஸ் படிப்பில்
* Conservative Dentistry and Endodontics
* Oral and Maxilofacial Surgery
* Orthodontcs and Dento Facial Orthopedics
* Periodontology, Prosthodontics and Crown & Bridge
கல்வித்தகுதி:
இளங்கலை  பல் மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவர்கள் இன்டன்ஷிப் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை; விண்ணப்பப் படிவங்களை பல்கலைக்கழக இணையதளத்தின் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ரூ.1000. டிடி எடுத்து விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க மே 24 கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 26ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

அம்பானி கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப படிப்பு

குஜராத்தில் உள்ள Dhirubhai Ambani Institute of Information and Communication Technology -யில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைநடைபெற்று வருகிறது.
வழங்கப்படும் படிப்புகள்: பி.டெக்., (ICT), (Honours) with minor in Computational Science (இது தவிர எம்.டெக்., இன்பர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி, எம்.எஸ்சி, எம்.டிசைன் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பக் கட்டணம் ரூ.1200. மேலும் விவரங்களுக்கு www.daiict.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

சட்டப் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு

பெங்களூரில் உள்ள நேஷனல் லா ஸ்கூல் ஆப் இந்தியா யூனிவர்சிட்டி.,யில் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் சட்டப்படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்:
Master of Business Law (2 years)-distance
Post Graduate Diploma (PGD) in Human Rights Law (1 year)-distance
PGD in Medical Law & Ethics
PGD in intellectual Property Rights Law
PGD in Child Rights Law
PGD in Consumer Law & Practice
PGD in Cyber Law & Cyber Forensics
கல்வித்தகுதி; அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணபிப்பவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ரூ.1500 விண்ணப்பக் கட்டணமாக வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு www.nls.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Wednesday, May 14, 2014

கவின்கலைகள் கற்க விருப்பமா? அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரியில் சேரலாம்

மாமல்லபுரம்: அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் மாணவ சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழக கலை, பண்பாட்டு துறையின் கீழ் மாமல்லபுரத்தில் அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு மரபு கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை ஆகிய பிரிவுகளில், நான்கு ஆண்டுகள் இளையர் பட்டக்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோர் சேர்க்கப்படுவர். தற்போது, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான நிலையில், நடப்பு கல்வியாண்டு (2014-15) சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
பாடப்பிரிவுகள்
* தொழில்நுட்பவியல் இளையர் மரபு கட்டடக்கலை பட்டம் (பிடெக்.)
தகுதி: கணித பாடத்துடன், பிளஸ் 2 தேர்ச்சி அல்லது இணையான பாடப்பிரிவில் தேர்ச்சி.
* கவின்கலை இளையர் மரபு சிற்பக் கலை பட்டம் (பி.எப்.ஏ.)
(கற்சிற்பம், சுதைச்சிற்பம், மரச்சிற்பம், உலோகச்சிற்பம் ஆகிய பிரிவுகள்)
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது இணையான பாடப்பிரிவில் தேர்ச்சி.
* கவின்கலை இளையர் மரபு ஓவியம், வண்ணம் பட்டம் (பி.எப்.ஏ.)
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது இணையான பாடப்பிரிவில் தேர்ச்சி.
விண்ணப்பதாரர்கள், வரும் ஜூலை மாதம் 1ம் தேதி 21 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும்; ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு, வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்ப கட்டணம்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆகியோருக்கு 50 ரூபாய்; பிற வகுப்பினருக்கு 100 ரூபாய்; முதல்வர் பெயரில், திருக்கழுக்குன்றம், பாரத ஸ்டேட் வங்கியில் மாற்றத்தக்க வரைவோலையை, கல்லூரி அலுவலகத்தில் நேரில் செலுத்தியோ, 10 ரூபாய் மதிப்பிற்கு அஞ்சல்தலை ஒட்டி, சுய முகவரியிட்ட அஞ்சல் உறையை அனுப்பியோ, விண்ணப்பம் பெறலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பம் பெற இறுதிநாள்: 30.06.14
தொடர்புக்கு: முதல்வர், அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி, மாமல்லபுரம். தொலைபேசி: 044 - 2744 2261. இணையதளம்: http://artandculture.tn.gov.in
தூத்துக்குடி: "தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் பட்டப்படிப்புக்கு "ஆன் லைன்" மூலம் விண்ணப்பிக்கலாம்" என மீன்வளப் பல்கலை துணைவேந்தர் பாஸ்கரன் மணிமாறன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இதுவரை, கால்நடை பல்கலை மூலம் தான் மீன்வளப் படிப்புக்கு விண்ணப்பம் பெறப்பட்டது. மீன்வளப் பல்கலை அமைந்த பின், முதன் முறையாக மீன்வளப் படிப்பு (பி.எப்.எஸ்சி.) பட்டத்திற்கு விண்ணப்பம் பெறப்பட உள்ளது. மீன் வளக்கல்லூரி: தென்கிழக்கு ஆசியாவில் இரண்டாவதாக துவக்கப்பட்டது, தூத்துக்குடி மீன் வளக்கல்லூரி. கடந்த 1977 முதல் இயங்கிவருகிறது.
இந்தியாவில் உள்ள 21 கல்லூரிகளில் "முதல் தர" கல்லூரி. மீன்வளப் பட்டதாரிகள் அனைவரும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் 15 சதவீதம் பேர் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். "ஆன் லைன்" மட்டும்: மீன்வளப் பட்டப்படிப்புக்கு "ஆன் லைன்" மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். www.tnfu.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதில் 40 மாணவர் சேர்க்கப்படுவர்.
இன்று முதல் (மே 14) ஜூன் 10 வரை விண்ணப்பிக்கலாம்; விண்ணப்பக் கட்டணம் 600, ஆதிதிராவிடர்களுக்கு 300 ரூபாய். வரைவோலை (டி.டி.,) எடுத்து "ஆன் லைன்" விண்ணப்பத்தில் அதன் எண்ணை குறிப்பிட வேண்டும்.
தகுதிகள்
பிளஸ் 2 தேர்ச்சி. அதற்கு இணையான அங்கீகரிக்கப்பட்ட தேர்வில் உயிரியல் அல்லது விலங்கியல், தாவரவியலுடன் இயற்பியல், வேதியியல் படித்திருக்க வேண்டும். உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் பாடங்களில் பிற்பட்டோர் 60 சதவீதம், மிகவும் பிற்பட்டோர் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்; ஆதிதிராவிடர், தேர்ச்சி பெற்றால் போதும். வேதியியல், இயற்பியல் இரண்டிலும் சேர்த்து பிற்பட்டோர், இதரவகுப்பினர் 60 சதவீதம், மிகவும் பிற்பட்டோர் 55 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முகவரி: மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி- 628 008. போன்: 0461- 234 0554.
காலண்டர் – மே 2014
மே மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுகள், நுழைவுத்தேர்வுகள், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதிகள் ஆகியவற்றைக் காட்டும் காலண்டர் இது. தனியே எடுத்து பத்திரப்படுத்துங்கள்.
புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விரும்புவோர் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 2.
புனே திரைப்படக் கல்லூரியில் திரைப்படத் தொழில்நுட்பம் தொடர்பான முதுநிலை சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 3.
அகில இந்திய ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிக்க அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு (AIPMT) நடைபெறும் தேதி: மே 4.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பி.எட். படிக்க விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 9.
தமிழகத்தில் மார்ச் மாதம் நிறைவடைந்த பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி: மே 9.
மேனேஜ்மெண்ட் படிப்புகளுக்காக அகில இந்திய மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் நடத்தும் MAT நுழைவுத் தேர்வு (காகிதத்தில்) நடைபெறும் தேதி: மே 4. கம்ப்யூட்டர் மூலம் நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 10.
அகில இந்திய கால்நடை மருத்துவப் படிப்பு (AIPVT) நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 10.
டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்சஸில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சமூக அறிவியல் படிப்புகளைப் படிக்க பிளஸ் டூ மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 10.
இந்தியன் ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்ஸ்டிட்யூட்டில் புள்ளியியல் இளநிலை பட்டப் படிப்பு படிக்க எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: மே 11.
தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து இளநிலை சட்டப் படிப்பைப் படிக்க அகில இந்திய அளவில் CLAT நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 11.
பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் கல்வி நிலையத்தில் பல்வேறு பொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோருக்கு பிட்சாட் ஆன்லைன் நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 14 முதல் ஜூன் 1 வரை.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 15.
சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃப்ஷரிஸ் (சிப்நெட்) நடத்தும் பேச்சலர் ஆஃப் ஃப்ஷரி சயின்ஸ் படிப்பில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 16.
புனேயிலுள்ள ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 17.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பி.எட். படிக்க நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 17.
திருவாரூர் உள்ளிட்ட 7 மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டப் படிப்பு மற்றும் ஆய்வுப் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 17 மற்றும் மே 18.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்- 2ஏ எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: மே 18.
பயோ-டெக்னாலஜி முதுநிலை பட்டப் படிப்பில் சேர ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நடத்தும் ஒருங்கிணைந்த பயோ டெக்னாலஜி நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 19.
ஃபுட்வேர் டிசைன் அண்ட் டெவலப்மெண்ட் இன்ஸ்டிட்யூட்டில் பி.டெஸ். உள்ளிட்ட பல்வேறு படிப்புகளைப் படிக்க விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 19.
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் பி.டெக்., மெரைன் என்ஜினீயரிங், பி.எஸ்சி. நாட்டிக்கல் சயின்ஸ், எம்.பி.ஏ. போன்ற பல்வேறு படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 20.
வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் (சி.எம்.சி.) எம்.பி.பி.எஸ்., பி.எஸ்சி. (நர்சிங்) உள்ளிட்ட படிப்புகளில் சேர எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: மே 23.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு சேர விரும்புவோர் விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 23.
திருச்சி உள்ளிட்ட நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் (என்.ஐ.டி.) எம்.சி.ஏ. படிக்க நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 25.
மத்திய அரசுப் பணியில் ஜூனியர் என்ஜினீயரிங் பணிகளில் டிப்ளமோ மாணவர்களைச் சேர்க்க ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: மே 25.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.பில். படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 30.
புவனேஸ்வரத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச், மும்பையில் உள்ள சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் பேசிக் சயின்சஸ் கல்வி நிறுவனங்களில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி படிப்பில் சேர நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி : மே 31.
ரீஜினல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எஜுக்கேஷனில் நான்காண்டுகளுக்கான ஒருங்கிணைந்த பி.எஸ்சி.எட். படிப்பில் சேர நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 31.
-புதிய தலைமுறை

Tuesday, May 13, 2014

ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம் நாளை முதல் வினியோகம்

ஆசிரியர் பயிற்சி படிப்பு விண்ணப்பம், நாளை முதல், ஜூன் 2ம் தேதி வரை, மாநிலம் முழுவதும் வழங்கப்படுகிறது.

நடப்பு கல்வி ஆண்டில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றை நிரப்ப, நாளை முதல், விண்ணப்பம் வினியோகிக்கப்பட உள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். எஸ்.சி., - எஸ்.டி., - எஸ்.சி.ஏ., ஆகிய பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான சான்றிதழை காட்டி, 250 ரூபாய் கொடுத்து, விண்ணப்பம் பெறலாம். இதர பிரிவு மாணவர், 500 ரூபாய் கொடுத்து, விண்ணப்பம் பெறலாம். விண்ணப்பம் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், ஜூன், 2ம் தேதி கடைசி நாள்.

Friday, May 9, 2014

புதிய தலைமுறை வார இதழ்
பொருளாதாரத்தில் பின்தங்கிய, தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு புதிய தலைமுறை வழங்கும் இலவச உயர் கல்வித் திட்டம்
நீங்கள் பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் பொருளாதாரக் காரணங்களால் மேற்படிப்பைத் தொடர இயலாத மாணவரா?
தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தரம் வாய்ந்த கல்லூரிகளோடு இணைந்து உங்களுக்கு இந்த ஆண்டும் உதவ முன் வந்திருக்கிறது ‘புதிய தலைமுறை’.
எந்தெந்தப் படிப்புகள்?
B.E / B.Tech (ECE, CSE, EEE, IT, Mech, Civil) B.Pharm
Bachelor of Physiotherapy B.Sc. Micro Biology
B.Sc., Bio tech B.Sc. IT
B.Sc. Bio Chemistry B.Sc. Nursing
B.Sc.Computer Science B.A. Journalism
B.O.T. MBA
B.Ed (பட்டதாரிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்) MCA
போன்ற படிப்புகளில் ஏழை மாணவர்களுக்கு தரமான கல்லூரிகளில் இலவசமாக இடம் பெற்றுத் தர ‘புதிய தலைமுறை’ முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.
யார் விண்ணப்பிக்கலாம்?
பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற, பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்கள் (ஆண், பெண் இருபாலரும்) இந்த உதவியைப் பெற தகுதி உடையவர்கள்.
மிகக்குறைந்த அளவில் Lateral Entry மூலம் சேர விரும்பும் மாணவர்களுக்கும் இடம் அளிக்க முயற்சிக்கிறோம். எனவே, பொறியியல் டிப்ளமோ பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
உங்களது மதிப்பெண் பட்டியலின் நகல், வருமானம் பற்றிய சான்று மற்றும் தகவல்கள், உங்கள் பொருளாதார நிலை மற்றும் உங்களுக்குக் கல்வியின் மீதுள்ள ஆர்வம் இவற்றைக் குறிப்பிட்டு உங்கள் பள்ளித் தலைமையாசிரியரின் பரிந்துரைக் கடிதத்தோடு புதிய தலைமுறை இதழில் வெளியாகியுள்ள விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து அனுப்புங்கள்.
இத்திட்டத்தில் பங்குபெறும் கல்லூரிகளின் நிர்வாகங்கள் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும். இயன்ற வரை உங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள கல்லூரிகளில் இடம் பெற்றுத் தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரம் ‘புதிய தலைமுறை’ இதழில் வெளியாகும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 15 ஜூன் 2014
இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் கல்வி நிலையங்கள்
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் (S.R.M. University Kattankulathur)
ஈஸ்வரி பொறியியல் கல்லூரி, சென்னை (Easwari Engineering college, Chennai)
வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, சென்னை (Valliammai Engineering College, Chennai)
தானிஷ் அஹமது பொறியியல் கல்லூரி, சென்னை (Dhaanish Ahmed College of Engineering, Chennai)
வருவான் வடிவேலன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, தர்மபுரி (Varuvan Vadivelan Institute of Technology, Dharmapuri)
ஜெய்ராம்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரூர் (Jairams Arts and Science College, Karur)
செண்டு பொறியியல் கல்லூரி, மதுராந்தகம் (Chendu College of Engineering & Technology, Madurantakam)
ஜெயம் பொறியியல் மற்றும் தொழிநுட்பக் கல்லூரி, தர்மபுரி (Jayam College of Engineering & Technology, Dharmapuri)
தமிழ்நாடு பொறியியல் கல்லூரி, கோவை (Tamilnadu College of Engineering, Coimbatore)
பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, (University College of Engineering,
Panruti)
பெட் பொறியியல் கல்லூரி, வள்ளியூர் (Pet Engineering College, Vallioor)
இந்தத் திட்டத்தில் பங்கேற்க விரும்பும் கல்லூரிகள் ‘புதிய தலைமுறை’ ஆசிரியரைத் தொடர்புகொள்ளக் கேட்டுக்கொள்கிறோம்
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
24, ஜி.என். செட்டி ரோடு, சென்னை - 600 017. தொலைபேசி எண். 044-45428803

Thursday, May 8, 2014

சட்ட படிப்புகளுக்கு 12ம் தேதி முதல் விண்ணப்பம்
அம்பேத்கர் சட்ட பல்கலை மற்றும் சட்டக் கல்லுாரிகளில், 2014 15ம் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்காக,
ஐந்தாண்டு படிப்பிற்கு வரும், 12ம் தேதியும், மூன்றாண்டு பட்டப் படிப்பிற்கு, 26ம் தேதியும் விண்ணப்பங்கள் வழங்கப் படுகின்றன. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ், தமிழத்தில், ஏழு சட்ட கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இதில், சட்ட பல்கலையில், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு, மூன்றாண்டு பட்டப்படிப்பு மற்றும் பி.காம்., பி.எல்., படிப்புகளும் நடத்தப்படுகின்றன. இப்படிப்புகளுக்கான, 2014 15ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு, நேற்று வெளியானது. பல்கலை துணைவேந்தர், வணங்காமுடி கூறியதாவது: இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு, ஐந்தாண்டு படிப்புகளுக்கு, இம்மாதம், 12ம் தேதி, மூன்றாண்டு படிப்புக்கு, 26ம் தேதி முதல், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள், சென்னை, அம்பேத்கர் சட்டப்பல்கலை மற்றும் சட்டக் கல்லுாரிகளில் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, ஐந்தாண்டு படிப்புகளுக்கு, ஜூன் 6ம் தேதி; மூன்றாண்டு படிப்புகளுக்கு, ஜூன் 11ம் தேதி இறுதி நாள். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஐந்தாண்டு படிப்புகளுக்கு, ஜூன் 13ம் தேதியும், மூன்றாண்டு படிப்பிற்கு, ஜூன் 21ம் தேதியும், இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து, அடுத்த 10 நாட்களில், கலந்தாய்வு நடக்கும். இந்தாண்டு, ஐந்தாண்டு சட்டப்படிப்பில், 1,052 மற்றும் மூன்றாண்டு சட்டப் படிப்பில், 1,262 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள், 69 சதவீதம் இட ஒதுக்கீடு மூலமும், 31 சதவீதம், திறந்த நிலை போட்டியின் மூலமும் நிரப்பப்படுகின்றன.
இந்தாண்டு, ஐந்து புதிய முதுகலை பட்டய படிப்புகள் துவக்கப்படுகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.
>Bhararathiyar University M.Ed degree programme in Distance Education is a two year master degree course offered through open and distance learning(ODL) system

>Duration-
Minimum period to complete the programme- 2 years
Maximum period -4 years

>Eligibility-
B.Ed with 55%
Two years teaching/professional experience after completion of B.Ed programme in a govt/govt recognized school

Only teachers working in TN are eligible for admission to M.Ed programme

>Medium of Instruction - English

>Programme Fees-
Provisionally selected candidates should pay the following fee
I year- 27,000/-
II year - 28,000/-
Fee once paid will not be refund under any circumstances

>Course of study-
Theory papers
First year -3 papers
Second year- 3 papers

>Personal Contact Programme will be conducted at the centre during weekends (saturday & sunday) and long holidays

>Entrance Test-
The entrance test will be held during the month of June/July.Exact date will be informed later. Entrance test can be written in English or Tamil. 100 multiple choice question based on B.Ed programme will be asked in the M.Ed entrance test.

>RESERVATION

OC- 31%
BC- 30% WHICH INCLUDES 3.5% FOR MUSLIMS
MBC- 20%
SC- 18%
ST- 1%

>Cost of Application -Rs.750

>Last date to submit the application - 30.6.14

>For more details contact
School of Distance Education
Bharathiyar University
Coimbatore -641046
0422- 2427742, 2422222, 2428206
Web- www.b-u.ac.in
TAMILNADU AGRICULTURAL UNIVERSITY

Undergraduate Admissions 2014-15
Invites applications for admission to
>B.Sc
1.Agriculture
2.Horticulture
3.Forestry
4.Home science
5.Sericulture

>B.Tech
1.Agricultural Engineering
2.Biotechnology
3.Horticulture
4.Agribusiness Management
5.Agricultural Information Technology
6.Bioinformatics
7.Food process Engineering
8.Energy and Environmental Engineering for the academic year 2014-15

>Fees-Rs 600/-(Rs.300 for SC,SCA&ST candidates) can be paid online using link available in the online application

>Application procedure:
Candidates have to fill and submit the application only through online
Visit www.tnau.ac.in/admission.html
No printed applications will be issued

>Important dates:
Opening of online applications: 12.5.14
Last date for submission online: 07.06.14; 5pm

>For more details contact
Phone: 0422-6611345 & 6611346
Information

Coming May 13.5.14 Guidance counselling function has arranged for vellore dist students (10th &12th)

The function will held in Tirupattur and vellore

Tirupattur- Sacred Heart college at 9.30 am morning
Vellore- Voorheese College at 2pm

Vellore dist CEO has arranged this function and invites Salem Education and Employment Advisor Mr.Jayaprakash, Vellore Employment Officer Mr.Arunagiri, Tirupattur DEO Tmt.Priyadarshini, Vellore DEO Mr.Manokaran

Officers are all briefly explaining the students what to choose the courses in future
மே 18ம் தேதி எல்சாட் நுழைவுத்தேர்வு

சட்டக் கல்லூரிகளில் இடம் பெறுவதற்கான எல்சாட் (LSAT) நுழைவுத்தேர்வு, வரும் மே 18ம் தேதி, இந்தியாவின் 16 நகரங்களில் நடைபெறவுள்ளது.

இத்தேர்வின் மதிப்பெண்களை, தற்போது 50க்கும் மேற்பட்ட முக்கிய கல்லூரிகளும் சட்டக் கல்வி நிறுவனங்களுங் மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்திக் கொள்கின்றன.

எல்சாட் எனப்படும் லாபநோக்கற்ற உலகளாவிய சட்டப் பள்ளி சேர்க்கை கவுன்சிலால் இத்தேர்வு உருவாக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விபரங்கள் அறிவிக்கப்படடுள்ளது

''3 ஆண்டு சட்டப்படிப்பிற்கு இம்மாதம் (மே) 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தர வரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்படும்

3 ஆண்டு சட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு செப்டம்பர் 3வது வாரத்தில் நடைபெறும்.

5 ஆண்டு சட்டப்படிப்பிற்கு இம்மாதம் (மே) 12ஆம் தேதி முதல் ஜூன் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்'' .
மே 18ம் தேதி எல்சாட் நுழைவுத்தேர்வு
சட்டக் கல்லூரிகளில் இடம் பெறுவதற்கான எல்சாட் (LSAT) நுழைவுத்தேர்வு, வரும் மே 18ம் தேதி, இந்தியாவின் 16 நகரங்களில் நடைபெறவுள்ளது.
இத்தேர்வின் மதிப்பெண்களை, தற்போது 50க்கும் மேற்பட்ட முக்கிய கல்லூரிகளும் சட்டக் கல்வி நிறுவனங்களுங் மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்திக் கொள்கின்றன.
எல்சாட் எனப்படும் லாபநோக்கற்ற உலகளாவிய சட்டப் பள்ளி சேர்க்கை கவுன்சிலால் இத்தேர்வு உருவாக்கப்பட்டுள்ளது.
ALAGAPPA UNIVERSITY-B.ED PROGRAMME IN DISTANCE EDUCATION

Important Dates:

Application Forms are issued from :07 – 04 - 2014

Last date for the issue and receipt of filledin Application Forms:09 – 05 - 2014

Date of Entrance Examination:17 – 05 - 2014

Wednesday, May 7, 2014

தமிழக மாணவர்களுக்கும் ஆழ்கடல் மீன்பிடிப்பு வணிக கப்பல்களில் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, வெசல் நேவிகேட்டர், மரைன் பிட்டர் போன்ற பணிகளுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய கடல்சார், மீன்வள தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (சிப்நெட்) இதற்கான பயிற்சியை அளிக்கிறது.
தலைமை வேலைவாய்ப்பு பயிற்சி இயக்குனரகத்தின் அங்கீகாரம் பெற்ற இப்பயிற்சிகள் இரண்டாண்டு காலத்துக்கு அளிக்கப்படும். 10ம் வகுப்பில் கணிதம், அறிவியல் பாடங்களில் 50 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தகுதித்தேர்வு ஜூன் 21ம் தேதி நடைபெறுகிறது.
அதில் தகுதி பெறும் மாணவர்களுக்கு ரூ.1500 உதவித்தொகை மற்றும் தங்கும் விடுதி ஆகியவை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை மே 16ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை மே 16ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 044 - 25952691, 25952692, 25952693, www.cifnet.gov.in
சென்னை பல்கலை தொலைதூர கல்வி மைய எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பாடப் பிரிவுகளுக்கான தேர்வுகளுக்கு, 13ம் தேதிக்குள், அபராதத்துடன் விண்ணப்பிக்கலாம்

Tuesday, May 6, 2014

ஜே.இ.இ., 'அட்வான்ஸ்டு' தேர்வுக்கு 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்காக, சி.பி.எஸ்.இ., நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட, நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள், கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டன; இதை அடுத்து, 'அட்வான்ஸ்டு' தேர்வுக்கான விண்ணப்பம், வரும் 9க்குள் அனுப்ப வேண்டும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

இரண்டு வகை தேர்வு:

மத்திய அரசு பாடத் திட்டத்தை பின்பற்றும், சி.பி.எஸ்.இ., அமைப்பு, பிளஸ் 2 வகுப்புக்குப் பின், ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கத் தேவையான, இணை நுழைவுத் தேர்வை (ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாமினேஷன்) நடத்துகிறது. தேர்வு, இரண்டு வகையாக நடக்கும். பிரதான (மெயின்) மற்றும் மேம்பட்ட (அட்வான்ஸ்டு) நுழைவுத் தேர்வு என, இரண்டிலும் தேர்ச்சி பெற்றால் தான், ஐ.ஐ.டி., போன்ற வற்றில் படிக்க முடியும். ஆண்டுதோறும், பிரதான தேர்வு எழுதுவோரில், 1.5 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டு, மேம்பட்ட தேர்வுக்கு அனுப்பப்படுவது வழக்கம். அதிலும் தேர்ச்சி பெறுவோர், மேற்பட்ட கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவர். அந்த வகையில், இந்த ஆண்டு, 12.78 லட்சம் மாணவர்கள், தேர்வு எழுதினர். அவர்களில், தேர்ச்சி பெற்றவர்களின் விவரம், கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. ஆந்திராவைச் சேர்ந்த, பிரமோத் வக்கசர்லா என்ற மாணவர், 360க்கு, 355 மதிப்பெண்கள் பெற்று, முதலிடம் பெற்றார்.

இந்நிலையில், பிழையான கேள்விகள், சில கேட்கப்பட்டிருந்தது குறித்து, மாணவர்கள் சந்தேகம் எழுப்பினர். அதை சரி செய்யும் பொருட்டு, கூடுதல் மதிப்பெண்களை, குறிப்பிட்ட அந்த கேள்விகளுக்கு பதிலளித்திருந்த, அனைத்து மாணவர்களுக்கும் வழங்க, சி.பி.எஸ்.இ., முடிவு செய்தது. அதன்படி, ஆன்-லைன் மூலமாக தேர்வு எழுதியவர்களுக்கு, போனசாக, 12 மதிப்பெண்களும், தேர்வு மையங்களில், நேரடியாக வந்து எழுதியவர்களுக்கு, 4 மதிப்பெண்களும், வழங்கப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ., மெயின் நுழைவுத் தேர்வில், ஒவ்வொரு கேள்வியும், நான்கு மதிப்பெண்கள் வரை, தகுதி படைத்தவை. குறிப்பிட்ட கேள்விக்கு, சரியான விடை எழுதினால், முழுமையாக, நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடையாக இருந்தால், 1/4 மதிப்பெண் குறைக்கப்படும் என்பது, குறிப்பிடத்தக்கது.

மே 25ல் 'அட்வான்ஸ்டு' தேர்வு:

பிரதான தேர்வில் தேர்ச்சி அடைந்தோர், வரும் 9ம் தேதிக்குள், அடுத்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். வரும், 25ம் தேதி, அடுத்த தேர்வு நடக்க உள்ளது.

Sunday, May 4, 2014

அரசு கலைக் கல்லுாரியில் மே 30ல் உடனடித் தேர்வு

அரசு கலைக் கல்லுாரியில், மே 30ல் உடனடித் தேர்வுகள் நடக்கிறது; தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் மே 29ல் ஹால்டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.
அரசு கலைக் கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரமோத்குமார் கூறியதாவது:அரசு கலைக் கல்லூரி தேர்வில் மறு மதிப்பீடு செய்யும் இளங்கலை மாணவர்கள் விடைத்தாள் ஒன்றுக்கு 300 ரூபாய் மற்றும் விண்ணப்ப படிவத்துக்கு 50 ரூபாயும், முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள் விடைத்தாளுக்கு 500 ரூபாயும், விண்ணப்ப படிவத்துக்கு 50 ரூபாயும் செலுத்த வேண்டும். அதேபோல், எம்.சி.ஏ., பாடத்திலுள்ள விடைத்தாள் ஒன்றுக்கு 600 ரூபாயும், விண்ணப்ப படிவத்துக்கு 50 ரூபாயும் கல்லுாரி வளாகத்திலுள்ள யூகோ வங்கியில் செலுத்தி, தேர்வு நெறியாளர் அலுவலகத்தில் உரிய விண்ணப்பம் பெற்று, மே 20 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கடந்த 2011 -- 14ம் ஆண்டுவரை பயின்ற மூன்றாமாண்டு இளங்கலை மாணவ, மாணவியர், 2012 - -14ம் ஆண்டு வரை பயின்ற இரண்டாம் ஆண்டு முதுகலை மாணவ, மாணவியர் மற்றும் 2011 - -14ம் ஆண்டு வரை பயின்ற மூன்றாம் ஆண்டு எம்.சி.ஏ., மாணவர்கள், ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் தவறியிருந்தால், உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் இளங்கலை மாணவர்கள் 575 ரூபாயும், முதுகலை மாணவர்கள் 675 ரூபாயும் யூகோ வங்கியில் (கணக்கு எண்: 1612) செலுத்தி, தேர்வு நெறியாளர் அலுவலகத்தில் உரிய விண்ணப்பம் பெற்று, மே 20ம் தேதி மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.உடனடி தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் மே 29ம் தேதி, ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். மே 30ம் தேதி காலை 10.00 மணிக்கு உடனடி தேர்வு நடக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பம்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளில் சேருவதற்கு திங்கள்கிழமை (மே 5) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 23 மாலை 5.45 மணிக்குள் சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி முதல்வருக்குச் சென்றடையுமாறு அனுப்ப வேண்டும்.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாமாண்டு படிப்புகளில் சேரலாம். பத்தாம் வகுப்புக்குப் பிறகு 2 ஆண்டு ஐடிஐ படிப்பு முடித்த மாணவர்களும் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம். இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் பெற்றுக்கொள்ளலாம். நேரிலும், அஞ்சல் மூலமாகவும், இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். நேரில் விண்ணப்பம் பெற விரும்புவோர் ரூ.150 செலுத்தியும், அஞ்சல் மூலம் பெற விரும்புவோர் ரூ.150லிக்கான கேட்பு வரைவோலை எடுத்து, சுய விலாசமிட்ட அஞ்சல் உறையில், ரூ.15லிக்கான அஞ்சல் வில்லையை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் www.tndte.com என்ற இணையதளத்திலிருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். தமிழகம் முழுவதும் 32 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 4 அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளும், சிறப்புப் பயிலகங்களும் உள்ளன.

Saturday, May 3, 2014

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 41 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இதற்கான விண்ணப்பங்கள் மே 5-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விநியோகிக்கப்பட உள்ளன.
விண்ணப்பக் கட்டணம் ரூ. 150 ஆகும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினப் பிரிவு மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டண விலக்கைப் பெற ஜாதிச் சான்றிதழின் சான்றொப்பமிட்ட நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அந்தந்த அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு மே 23-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
சென்னையைப் பொருத்தவரை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி, அச்சு தொழில்நுட்ப நிறுவனம், தோல் தொழில்நுட்ப நிறுவனம், நெசவு தொழில்நுட்ப நிறுவனம், மாநில வணிகக் கல்வி நிறுவனம், டாக்டர் தர்மாம்பாள் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
சென்னை, லயோலா கல்லூரியில் 2014-15 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை மே 9ம் தேதி முதல் துவங்குகிறது.
இளங்கலை படிப்பிற்கான விண்ணப்ப படிவம் ரூ.150 ம், முதுகலை படிப்பிற்கு ரூ.200 கல்லூரி முகவரியில் வரைவோலை எடுத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப படிவம் கல்லூரி இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தபால் மூலம் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப இளங்கலைக்கு ரூ.200ம், முதுகலைக்கு ரூ.250ம் வரைவோலை எடுத்து இணைத்து அனுப்ப வேண்டும்.
மே 23ம் தேதி இளங்கலை விண்ணப்ப படிவம் சமர்ப்பிக்க கடைசி நாளாகவும், ஜூன் 18 முதுகலை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு லயோலா கல்லூரி இணையதள முகவரியை அணுகலாம்.
பி.எஸ் அப்தூர் ரஹமான் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2014ம் ஆண்டில் பி.எச்டி.,யில் பல்வேறு பாடப்பிரிவுகளில் சேருவதற்கு தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்ப படிவங்களை www.bsauniv.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பக்கட்டணம் ரூ.1000 வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும்.
ஆராயச்சி படிப்பை முழுநேரமாக எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.8000 பெல்லோஷிப் வழங்கப்படும்.
கூடுதல் தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
உதகை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 2ம்தேதி முதல் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உதகை அரசு கலைக்கல்லூரி முதல்வர் டாக்டர் மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உதகை அரசு கலைக்கல்லூரியில் 2014-15ம் கல்வியாண்டின் இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஒற்றை சாளர முறையில் நடைபெறவுள்ளது. சேர்க்கை விண்ணப்பங்கள் மே 2ம்தேதி முதல் கல்லூரி அலுவலகத்தில் காலை 10.30 மணி முதல் மாலை 3 மணி வரை வழங்கப்படும்.

ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.27 ஆகும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர் சாதி சான்றிதழின் அசல் மற்றும் அதன் நகலினை சமர்ப்பித்து ரூ.2 மட்டும் செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்
பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் இன்று காலை வெளியிட்டது.
அதில், நாளை முதல் மே மாதம் 20ம் தேதி வரை ஞாயிறு தவிர அனைத்து நாட்களும் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில், 60 மையங்களில் பி.இ., பி.டெக்., விண்ணப்பங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இணையதளம், தபால், மற்றும் நேரிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் கணினித் தமிழ் சான்றிதழ் படிப்புக்கான சேர்க்கை நடைபெற்று வருகின்றது.
இப்பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான தமிழ்ப்பேராயம் அமைப்பின் கணினித் தமிழ் கல்வித்துறை சார்பில் கணினித்தமிழ் அடிப்படை,பயன்பாடு குறித்த ஒரு மாத கால சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கணினியில் தமிழை பயன்படுத்துவது, இணையதமிழ் பயன்பாட்டைப் புரிந்து கொண்டு, தமிழ் மென்பொருள் உருவாக்குவதற்கான அடிப்படை அறிவாற்றலை பெறவும், வேலைவாய்ப்பைப் பெறவும் வாய்ப்புள்ளது. இதில் சேர குறைந்தபட்சக் கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள், இல்லத்தரசிகள் சேரலாம்.
வரும் மே 5ம் தேதி தொடங்கி மே 30 வரை நடத்தப்படவிருக்கும் கணினித் தமிழ் சான்றிதழ் படிப்புக்கான கட்டணம் ரூ1000. திங்கள் முதல் வெள்ளிமுதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
மேலும் விவரங்களை 99418 45217 மொபைல் போன் மூலமும் 044-27451645,27417375 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமும் தொடர்பு கொண்டு பெறலாம்.
பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் தமிழகம் முழுவதும் 60 மையங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விநியோகம் செய்யப்பட உள்ளன.
ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறை நாள்களிலும் விண்ணப்ப விநியோகம் இருக்காது.
தமிழகம் முழுவதும் 570 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.75 லட்சம் பி.இ., பி.டெக். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
2014-15 கல்வியாண்டுக்கான கலந்தாய்வு ஜூன் மூன்றாவது வாரத்தில் தொடங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் சனிக்கிழமை முதல் விநியோகிகப்படுகின்றன.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மையம், குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. வளாகம், புரசைவாக்கத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பிராட்வே பகுதியில் உள்ள பாரதி அரசு பெண்கள் கல்லூரி ஆகிய நான்கு மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 60 மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
விண்ணப்ப கட்டணம் எவ்வளவு? விண்ணப்பங்களை விற்பனை மையங்களில் நேரடியாகவும், தபால் மூலமாகவும் பெற்றுக் கொள்ள முடியும். ஆன்-லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
விற்பனை மையங்களில் விண்ணப்பம் பெற விரும்புபவர்கள் எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவினராக இருந்தால் ரூ. 250 செலுத்தியும், இதர பிரிவினர் ரூ. 500 செலுத்தியும் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
கட்டணத்தை ரொக்கமாகவோ அல்லது -செயலர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 25 - என்ற பெயருக்கு வரைவோலை எடுத்தோ செலுத்தலாம்.
தபால் மூலம் பெற விரும்புபவர்கள் எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவினராக இருந்தால் ரூ. 450 செலுத்தியும், இதர பிரிவினர் ரூ. 700 செலுத்தியும் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
தகுதி என்ன? பொறியியல் படிப்புகளில் சேர பிளஸ்-2 தேர்வில் பொதுப் பிரிவு மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும். பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (பி.சி. மற்றும் பி.சி.ஏ.) 45 சதவீத மதிப்பெண்ணுடனும், எம்.பி.சி., டி.என்.சி. பிரிவினர் மற்றும் எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்ணுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
இது தொடர்பாக மேலும் விவரங்களை அறிய அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்க்கலாம்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளுக்கான 2014-15 ஆண்டிற்கான அனுமதி சேர்க்கை கையேடு மற்றும் விண்ணப்ப விற்பனையை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பல்கலை. பதிவாளர் ந.பஞ்சநதம், பல்கலைக்கழக மாவட்ட வருவாய் அதிகாரி டி.கிறிஸ்துராஜ், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ரகுபதி மற்றும் அனைத்துப் புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். விண்ணப்ப விற்பனை ஜூன் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விண்ணப்பங்களை அண்ணாமலை நகரில் உள்ள பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொலைதூரக் கல்வி இயக்ககப் படிப்பு மையங்களிலும் ரூ.1500 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
அஞ்சல் மூலம் விண்ணப்பம்: அஞ்சல் மூலம் விண்ணப்பம் பெற விரும்புபவர்கள் ரூ.1,550-க்கான (ரூ.50 அஞ்சல் கட்டணம் சேர்த்து) சென்னையில் மாற்றத்தக்க வங்கி வரைவோலையை (Demand Draft) பதிவாளர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (Registrar, Annamalai University) என்ற பெயரில் எடுத்து "பதிவாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்-608002, சிதம்பரம்' என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் மற்றும் அனுமதி சேர்க்கை குறித்த விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiuniversity.ac.in பார்த்து தெரிந்து கொள்ளலாம். au_regr@ymail.com மேலும் பல்கலைக்கழக உதவி மைய தொலைபேசி எண்கள் 04144- 238348, 238349 ஆகியவற்றைத் தொடர்பு கொண்டும் தகவல்களைப் பெறலாம் என பல்கலை. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தகுதி அடிப்படையில் அனுமதி சேர்க்கை: மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் அனுமதி சேர்க்கை குறித்து பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்ததாவது: முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே அனுமதி சேர்க்கைக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழக அரசின் இடஒதுக்கீடு விதிப்படியும், மாணவர்கள் மேல்நிலைப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும்.
சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். கலந்தாய்வு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய இரு படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பம் போதுமானது என்றார் ஷிவ்தாஸ்மீனா.