Sunday, July 27, 2014

தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஓடி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் உள்ள இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

தமிழ்நாட்டில் உள்ள 19  அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம்., பி.பி.டி., பி.ஏ.எஸ்.எல்.பி. (செவித்திறன், பேச்சு மற்றும் மொழிநோ குறியியல்), பி.எஸ்சி., ரேடியாலஜி மற்றும் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.ஓ.டி. ஆகிய படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில் சேர விரும்பும் உயிரியல் பாடத்தை எடுத்து பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ் டூ வகுப்பில் தொழிற்கல்வியை பாடமாக எடுத்துப் படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பக் கட்டணம் ரூ.350. ‘செயலாளர், தேர்வுக் குழு, கீழ்ப்பாக்கம், சென்னை- 10’ என்ற பெயரில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் டிமாண்ட் டிராப்ட் எடுக்க வேண்டும். அதனுடன் விண்ணப்பக் கேட்புக் கடிதத்தையும் டிமாண்ட் டிராப்ட்டையும் இணைத்து, 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கொடுத்து விண்ணப்பத்தை நேரில் பெற்றுக்கொள்ளலாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. கெஜட்டட் அலுவலர்களிடம் சான்றொப்பம் பெற்ற இரண்டு சாதிச் சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பக் கேட்புக் கடிதத்தை இணைத்துக் கொடுத்து, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல், மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

சென்னையில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி.), ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, மதுரையிலுள்ள அரசு இராஜாஜி மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, சேலத்திலுள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, திருச்சியிலுள்ள கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, வேலூர் மருத்துவக் கல்லூரி, தேனி மருத்துவக் கல்லூரி, தர்மபுரி மருத்துவக் கல்லூரி,  விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, திருவாரூர் மருத்துவக் கல்லூரி, சிவகங்கை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி ஆகிய 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கும். கீழ்ப்பாக்கத்திலுள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் தேர்வுக் குழு அலுவலகத்தில் விண்ணப்பங்கள் கிடைக்காது.

சம்பந்தப்பட்ட இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், இந்த அனைத்துப் பட்டப் படிப்புகளிலும் சேருவதற்கு ஒரே விண்ணப்பம் அனுப்பினால் போதுமானது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

செயலாளர், தேர்வுக் குழு,
162, ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
கீழ்ப்பாக்கம், சென்னை - 600010.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 19.07.2014
விவரங்களுக்கு: www.tnhealth.org, www.tn.gov.in
பயோ டெக் வேலை பெற உதவித்தொகையுடன் படிப்பு!பயோ டெக்னாலஜி படித்த மாணவர்கள் பயோ டெக் தொழில் நிறுவனங்களில் பணிபுரிவதற்கு ஏற்ற வகையில் மத்திய அரசின் தொழில்நுட்பத் துறை உதவியுடன் ஓராண்டு முதுநிலை டிப்ளமோ படிப்பு நடத்தப்படுகிறது. இந்தப் படிப்பில் சேர தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

பயோ டெக்னாலஜி வளர்ந்து வரும் முக்கியத்துறை. பயோ டெக்னாலஜி தொடர்பான படிப்புகளைப் படித்த மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு ஏற்ற வகையில் திறன்களைப் பெறுவதற்காக முதுநிலை டிப்ளமோ படிப்பு நடத்தப்படுகிறது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் உதவியுடன் பயோ டெக்னலாஜி ஃபினிஷிங் ஸ்கூல்ஸ் திட்டத்தின்கீழ் கர்நாடக அரசு இந்தப் படிப்பை நடத்துகிறது.

பயோ இன்பர்மேட்டிக்ஸ் அண்ட் ரேஷனல் டிரக் டிசைன், செல்லுலர் அண்ட் மாலிக்கியூலர் டயக்னாஸ்டிக்ஸ், ஃபெர்மெண்டேஷன் அண்ட் பயோபுராசசிங், நியூட்ராசூட்டிக்கல்ஸ் அண்ட் ஃபுட் புராசசிங், பிளாண்ட் டிஸ்யூ கல்ச்சர் அண்ட் மைக்ரோபுராபகேஷன், பிளாண்ட் ஜெனிட்டிக் டிரான்ஸ்பர்மேஷன், ஜீனோம், சீட் அண்ட் மார்க்கர் அனாலிசிஸ், பிரி-கிளினிக்கல், கிளினிக்கல் ரிசர்ச், பயோ ஸ்டாட்டிஸ்ட்டிக்ஸ் அண்ட் டேட்டா மேனேஜ்மெண்ட், புரோட்டீன் எக்ஸ்பிரஷன் அண்ட் ஸ்கேல் அப் ஆகிய பாடப்பிரிவுகளில் இந்தப் படிப்பு நடத்தப்படுகிறது. கர்நாடகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த 12 கல்வி நிறுவனங்களில் இந்த முதுநிலை டிப்ளமோ படிப்பைப் படிக்கலாம்.

இந்தப் படிப்பில் சேர மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.50 ஆயிரம். இப்படிப்பில் சேர தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும். இந்த ஓராண்டு டிப்ளமோ படிப்பில் சேரும் மாணவர்கள் பயோ டெக்னலாஜி நிறுவனத்தில் ஆறு மாதங்கள் இன்டர்ன்ஷிப் பெற வேண்டியதிருக்கும். தொழில் நிறுவனங்களில் பணிபுரிவதற்கேற்ற வகையில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதால், படிப்பை முடித்த மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்களில் பணிபுரிய வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதற்கான உதவிகளும் செய்யப்படும்.

இந்தப் படிப்பில் யார் சேரலாம்?

உயிர் அறிவியல், பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, பயோ இன்பர்மேட்டிக்ஸ் அல்லது இது தொடர்பான படிப்புகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டப் படிப்பு படித்த மாணவர்கள் இந்த முதுநிலை டிப்ளமோ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். பயோ டெக்னாலஜி, பயோ இன்பர்மேட்டிக்ஸ் ஆகிய பாடப் பிரிவுகளில் பிஇ, பிடெக் படித்தவர்களும் இப்படிப்பில் சேரலாம். பிபார்ம், பிஎஸ்சி (அக்ரி), பிவிஎஸ்சி, எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்சி (பிளாண்ட் டிஸ்யூகல்ச்சர் அண்ட் மைக்ரோபுராபகேஷன்) படிப்புகளைப் படித்தவர்களும் இப்படிப்பில் சேரலாம். இறுதி ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களும் இந்த டிப்ளமோ படிப்பில் சேர விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த முதுநிலை டிப்ளமோ படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு கர்நாடகா பயோ டெக்னாலஜி ஆப்டிட்யூட் டெஸ்ட்  (ரிஙிகிஜி) என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதிகள் நடைபெறுகிறது. ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த ஆன்லைன் தேர்வில் அப்ஜெக்ட்டிவ் முறையில் 100 கேள்விகள் கேட்கப்படும். உயிரியல் பாடத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் குறித்து கேள்விகள் கேட்கப்படும். செல் அண்ட் மாலிக்கியூலர் பயாலஜி, பொது பயாலஜி, ஜெனரல் ஆப்டிட்யூட், ஆங்கிலம் ஆகியவற்றிலிருந்தும் கேள்விகள் இருக்கும். இத்தேர்வில் தகுதி பெறும் மாணவர்கள் ஆகஸ்ட் 25, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதிலிருந்து தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதுகுறித்த அறிவிப்பு செப்டம்பர்  3-ஆம் தேதி வெளியிடப்படும். இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஜூலை 25-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு: www.btfskarnataka.org

Sunday, July 6, 2014

பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விற்பனை திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்குகிறது.
இது குறித்து மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில், பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பி.எஸ்சி ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஓடி உள்ளிட்ட மருத்துவம் சார் பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்குகிறது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் வரும் 18-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் கிடைக்கும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 19-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் ரூ.350 யை விண்ணப்பதாரர்கள், செயலாளர், தேர்வுக் குழு என்ற பெயரில் எடுக்கப்பட்ட காசோலையாக செலுத்த வேண்டும். எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
மேலும் விபரங்களை www.tnhealth.org என்ற இணையதளத்தில் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.