Saturday, December 19, 2015

சத்துணவு அமைப்பாளர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


வேலூர் மாவட்ட சத்துணவு மையங்களில் அமைப்பாளர் பணிக்கு தகுதியானவர்கள் வியாழக்கிழமை (டிச.17) முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 370 சத்துணவு அமைப்பாளர் பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பொதுப் பிரிவினர், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் 21 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பழங்குடியினத்தவர்கள் எட்டாம் வகுப்பு படித்திருப்பதுடன், 18 முதல் 40 வயதுக்குள்ளும், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். நியமன பணியிடத்திலிருந்து விண்ணப்பிப்பவர்கள் 3 கி.மீ. தொலைவுக்குள் இருத்தல் அவசியம். விண்ணப்பத்துடன் வயது, கல்வித்தகுதி, ஜாதி, இருப்பிடத்துக்கான நகலை இணைக்க வேண்டும். ஏற்கெனவே விண்ணப்பித்திருந்தாலும் அனைத்துச் சான்றிதழ்களுடன் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு வரும் போது அசல் சான்றிதழ் எடுத்து வர வேண்டும்.
விண்ணப்பத்தை வியாழக்கிழமை (டிச.17) முதல் வருகிற 31-ஆம் தேதி மாலைக்குள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Friday, October 2, 2015

TNPSC - GROUP IV NOTIFICATION


நில அளவர், தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 4963 பணியிடங்களுக்கு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப்-4 தேர்வுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இளநிலை உதவியாளர் (பிணையம்) (39),
இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) (2133),
வரித் தண்டலர் (22),
தட்டச்சர் (1683),
சுருக்கெழுத்து தட்டச்சர் (331),
மற்றும் நில அளவர் (702),
வரைவாளர் (53)
என மொத்தத்தில் 4,963 காலிப்பணியிடங்கள் ஆகும்.
இந்த தேர்விற்கு குறைந்தப்பட்சக் கல்வித் தகுதி எஸ்.எஸ்.எல்.சி. ஆகும். குறைந்தபட்ச வயது 18ஆக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட வேண்டிய
கடைசித் தேதி நவம்பர் 12 ஆகும்.
கட்டணம் செலுத்தக் கடைசி நாள் நவம்பர் 14 ஆகும்.
தேர்வு டிசம்பர் 12ஆம் தேதி காலை நடைபெற உள்ளது.
மாவட்டத் தலைமையிடங்கள் மற்றும் தாலுகாக்கள் உள்ளிட்ட 244 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.netஎன்ற தேர்வாணைய இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
நிரந்தரப் பதிவில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து,
இப்பதவிகளுக்குரிய இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
நிரந்தரப் பதிவு செய்யாத
விண்ணப்பதாரர்கள் நேரடியாக முழு விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
நிரந்தர பதிவில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து மட்டுமே விலக்களிக்கப்படத் தகுதியானவர்கள் ஆவர்.
மற்றவர்கள் அந்தந்த வகுப்பிற்கு வழங்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணங்களை இந்தியன் வங்கி கிளைகள் மற்றும் அஞ்சலகங்களில் செலுத்த வேண்டும்.
பணம் செலுத்திய ரசீதை விண்ணப்பித்த இரண்டு நாட்களுக்குள் செலுத்திவிட வேண்டும்.
இணையத்தின் மூலமாகவும் செலுத்தலாம்.
இதுகுறித்த சந்தேகங்களை 044 - 25332855, 044 - 25332833
மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002 இல்
தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

Thursday, April 2, 2015

பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய, மாநில அரசுத் துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் அதிகமான பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அந்த பணியிடங்களை நிரப்ப மத்திய, மாநில அரசுகள் தேர்வாணையங்கள் மூலம் போட்டித் தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகின்றன.  என்று அழைக்கப்படும் (யு.பி.எஸ்.சி) மருத்துவப் பணி மற்றும் பொறியாளர் பணிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை அறிவித்துள்ளது. 
மருத்துவப் பணி:
மத்திய அரசுப் பணியில் சேர வேண்டுமானால் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகள் தேர்வெழுதி (Combined Medical Services Exmn) நேரடியாக ரயில்வே துறையில் உதவிக் கோட்ட மருத்துவ அதிகாரி, இந்திய ஆர்டினன்ஸ் ஃபேக்டரி சர்வீசஸ் சுகாதாரப் பணியில் உதவி மருத்துவ அதிகாரி, மத்திய அரசின் சுகாதாரப் பணிகளில் மருத்துவ அதிகாரி, தில்லி மாநகராட்சி மருத்துவ அதிகாரி போன்ற பணிகளில் சேரலாம்.
தமிழக அரசுப் பணியில் சேர வேண்டுமானால் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக அசிஸ்டென்ட் சிவில் சர்ஜன் பணியில் சேரலாம். பொது மருத்துவம், மருத்துவக் கல்வி, கிராமப்புற சுகாதாரப் பணி எனக் குறிப்பிட்ட துறைக்குப் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தகுதி: ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகளுக்கான தேர்வை எழுத குறைந்தபட்ச கல்வித்தகுதியாக எம்.பி.பி.எஸ். படிப்பு. இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கு 32. ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி அடிப்படையில் நடைபெறும் தேர்வில் மருத்துவப் பாடங்கள் சம்பந்தப்பட்ட 2 தாள்கள் இருக்கும். ஒவ்வொரு தாளுக்கும் தலா 250 மதிப்பெண் வீதம் மொத்தம் 500 மதிப்பெண்கள். முதல் தாளில் பொது அறிவு தொடர்பான 30 வினாக்களும், பொது மருத்துவம் தொடர்பான 70 வினாக்களும், குழந்தை மருத்துவத்தில் 20 வினாக்களும் இடம்பெறும். நேர்முகத் தேர்வுக்கு 100 மதிப்பெண். இரண்டாம் தாளில் அறுவை சிகிச்சைக்கு 40 வினாக்களும், மகப்பேறு மருத்துவத்தில் 40 வினாக்களும், வரும்முன் காப்பது மற்றும் சமூகநல மருத்துவம் தொடர்பாக 40 வினாக்களும் இடம்பெறும்.
ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகள் தேர்வுக்கு மருத்துவம் படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரை தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகளுக்கான போட்டித் தேர்வை யு.பி.எஸ்.சி. ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் ரயில்வே உதவி கோட்ட மருத்துவ அதிகாரி பணியில் 600 காலியிடங்களும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தளவாடத் தொழிற்சாலை மருத்துவ சேவை மையத்துக்கு 39 இடங்களும், ஜூனியர் ஸ்கேல் போஸ்ட் இன் சென்ட்ரல் ஹெல்த் சர்வீஸில் 391 இடங்களும், டெல்லியின் கிழக்கு, வடக்கு, தெற்கு மாநகராட்சிகளுக்கு கிரேடு 2 மருத்துவ அதிகாரி பணிக்கு 372 இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2015

பொறியாளர் பணி:
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் அண்ட் டெலிகம்யூனிகேஷன் ஆகிய பணியிடங்களுக்கு மொத்தம் 475 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்திய ரயில்வே, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் வரும் தளவாடத் தொழிற்சாலை மற்றும் தில்லி மாநகராட்சிக்கு பணிக்கு இவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.021.2015 ஆம் தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2015
மேலும் தேர்வுக் கட்டணம், தேர்வு செய்யப்படும் முறை, தேர்வுக்கான பாடத்திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Saturday, March 7, 2015

இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

டேராடூனிலுள்ள ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் 2016-ம் கல்வியாண்டுக்கான 8-ம் வகுப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2003 ஜன.2 மற்றும் 2004 ஜூலை 1-ம் தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் பிறந்தவராகவும், 2016 ஜன.1-ம் தேதி அன்று 7-ம் வகுப்பு படித்து கொண்டிருப்பவராக அல்லது முடித்தவராக உள்ள மாணவர்கள் இக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்.
தகுதித் தேர்வு விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பை பொதுப் பிரிவினர் பதிவஞ்சலில் பெற ரூ.430, துரித தபாலில் பெற ரூ 480, பட்டியல் மற்றும் அட்டவணை இனத்தவர் பதிவஞ்சலில் பெற ரூ.385, துரித தபாலில் பெற ரூ. 435, THE COMMANDANT DEHRUN என்ற பெயரில் டேராடூன் பாரத ஸ்டேட் வங்கியில் மாற்றத் தக்க வகையில் காசோ லை (டிராப்ட்) எடுத்து அதனை கமாண்டன்ட், ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூ ரி, டேராடூன் - 248 003 உத்திரகாண்ட் என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பம் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் தமிழ்நாடு அரசு பணியாளார் தேர்வாணையம், சென்னை-3 என்ற முகவரிக்கு மார்ச் 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு ஜூன். 1,2, ஆகியத் தேதிகளிலும், வாய்மொழித் தேர்வு அக்.6-ம் தேதி நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு THE COMMANDANT DEHRUN இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

Saturday, February 14, 2015

காந்திநகரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் 2015ம் கல்வியாண்டுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்:
எம்.டெக்., (சிவில், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மெட்டிரியல் சயின்ஸ்)
தகுதி:
இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பி.டெக்/பி.இ ஆகிய படிப்பில் ஏதாவதொன்றில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கேட் நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண், நேர்முகத்தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
உதவித்தொகை:
முழுநேர எம்.டெக்., படிப்புக்கு மாதம்தோறும் ரூ.8 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
இதுமட்டுமன்று, தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகளில் பங்கேற்கவும், ஆராய்ச்சிகளில் ஈடுபடவும் ரூ.60 ஆயிரம் வரை வழங்க உள்ளது இந்நிறுவனம்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முக்கிய தேதி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஏப்ரல் 3 கடைசி நாளாகும். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மே 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு ஐஐடி-காந்திபூர் இணையதளத்தை பார்க்கலாம்.

Sunday, January 11, 2015

ராணுவ மருத்துவ அறிவியல் கல்லூரியில் மருத்துவ படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2015-16ம் கல்வியாண்டில் பிடிஎஸ், எம்டிஎஸ் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வி தகுதியாக பிடிஎஸ் படிப்புக்கு பிளஸ் 2வில் (இயற்பியல், வேதியியல், உயிரியல்)பாடப்பிரிவை எடுத்து படித்திருக்க வேண்டும்.
முதுகலை படிப்புக்கு அங்கீகாரம் பெற்ற பல்கலையில் பிடிஎஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவங்களை கல்லூரி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்ரவரி 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு கல்வி நிறுவன இணையதளத்தை பார்க்கலாம்.