Tuesday, April 29, 2014

பாரதியார் பல்கலை: தொலைதூர கல்வி மாணவர் சேர்க்கை

கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வியியல் பள்ளியில் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இளங்கலையில் பி.காம், பி.பி.ஏ, பி.ஏ, பி.எஸ்சி, பிசிஏ, பி.பி.எம் ஆகிய படிப்புகளில் பல்வேறு பாடப்பிரிவுகளும்,
முதுகலையில் எம்.எஸ்சி, எம்.ஏ, எம்.காம் ஆகியவற்றில் பல்வேறு பாடப்பிரிவுகளும், தொழிற்கல்வியான எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்பும் வழங்கப்படுகின்றது.
பாரதியால் பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு 25 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும். இதர சலுகைகள் பெறாத பெண்களுக்கு 10 சதவீத கல்வி கட்டண சலுகை வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ150. தபால் மூலம் விண்ணப்பம் பெற ரூ.200க்கான டிடிஐ கோரிக்கை கடிதம் மற்றும் சுய முகவரி எழுதி தபால் கவருடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு www.b-u.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

அழகப்பா பல்கலை: மாணவர் சேர்க்கை துவக்கம்

காரைக்குடி அழகப்பாக பல்கலைக்கழகத்தில் 2014-15ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வழங்கப்படும் படிப்புகள்:
எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எட், பி.எட் ஆகியவற்றில் பல்வேறு பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன.
நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் குழுவிவாதம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கூழைவுத்தேர்வு நடத்தப்படும் படிப்புகளுக்கு ரூ.500 விண்ணப்பக் கட்டணடும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250ம் வசூலிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்கள் அறிய www.alagappauniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
நுழைவுத்தேர்வு மே 9ம் தேதி நடத்தப்படுகிறது. கூடுதல் விவரங்கள் அறிய இணையதளத்தை அணுகலாம்.

கம்பெனி செக்ரட்டரி படிப்பு

இந்திய கம்பெனி செக்ரட்டரி பயிற்சி நிலையத்தில் 3 வருட ஒருங்கிணைந்த கம்பெனி செக்ரட்டரி படிப்பில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்கலாம்.
வழங்கப்படும் படிப்பு:Integrated Company Secretaryship Course (50 காலியிடங்கள்)
வயது: 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ICSI பண்டேஷன் கோர்ஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ICAI படிப்புக்கான CPT கோர்ஸ் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
ஆன்லைன் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் விபரம் பற்றி தெரிந்து கொள்ள www.icsi.edu/ccgrt என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பாரதிதாசன் பல்கலை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இளங்கலை, முதுகலை மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்க நேற்று (ஏப்.,28)கடைசி நாளாகவும், அபராத தொகையுடன் விண்ணப்பிக்க மே 2ம் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பவர் கூடுதல் தகவல்களை பெற பாரதிதாசன் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

அண்ணா பல்கலை: எம்.எஸ்சி., எம்.பில். சேர்க்கை அறிவிப்பு

கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் எம்.ஐ.டி. வளாகங்களில் வழங்கப்படும் எம்.எஸ்சி., எம்.பில். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இந்தப் படிப்புகளில் சேர விரும்புவோர் www.annauniv.edu இணைய தளம் மூலம் பதிவு செய்து, விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பின்னர் ஆன்-லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பக் கட்டணம் ரூ. 700-க்கான வரைவோலையை இணைத்து "இயக்குநர், மாணவர் சேர்க்கை மையம், அண்ணா பல்கலை, சென்னை - 25' என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவு மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 350 செலுத்தினால் போதுமானது.
முக்கியதேதிகள்:
இணையதளம் மூலம் பதிவு ஆரம்பம்: 28.4.2014 பதிவு செய்ய கடைசித்தேதி: 26.5.2014 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசித் தேதி:30.5.2014

விஐடி பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விஐடி பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இளங்கலையில் பி.காம், பி.எஸ்சி, பி.பி.ஏ, பி.சி.ஏ, ஒருங்கிணைந்த படிப்பான எம்.எஸ், எம்.எஸ்சி., ஆகிய படிப்புகளுக்கு தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நுழைவுத்தேர்வு கிடையாது. ஆன்லைன் வழியாக முதுகலை படிப்புக்கு ரூ.600ம், இளங்கலை படிப்புக்கு ரூ.350ம் கல்வி கட்டணமாக செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 2ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு www.vit.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

ஐ.ஐ.எம்.சி., படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் வழங்கும் பலவிதமான முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்புகளுக்கு மே 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். www.iimc.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,200 செலுத்த வேண்டும். SC/ST/OBC/PH பிரிவினருக்கு வெறும் ரூ.100 மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.1,100 கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது.
நுழைவுத்தேர்வு நடைபெறும் தேதி - மே 31.
ஓடியா ஜர்னலிசம் படிப்பிற்கு மட்டும் நுழைவுத்தேர்வு நடைபெறும் தேதி - ஜுன் 1
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி - ஜுன் கடைசி வாரம் அல்லது ஜுலை முதல் வாரம்.

ஏப்ரல் 26ல் எம்.ஏ.டி., தேர்வுக்கான அட்மிட் கார்டு

MAT எனப்படும் Management Aptitude தேர்வுக்கான அட்மிட் கார்டுகள், ஏப்ரல் 26ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 4ம் தேதி பேப்பர் அடிப்படையிலான தேர்வும், மே 10ம் தேதி கணினி அடிப்படையிலான தேர்வும் நடைபெறவுள்ளன. அட்மிட் கார்டுகளை, ஆன்லைனில் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும். யாருக்கும் தனியாக அனுப்பப்பட மாட்டாது.
அதிகாரப்பூர்வ AIMA MAT இணையதளத்திற்கு சென்று, அட்மிட் கார்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலாண்மை கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்க்க நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளில், குறிப்பிடத்தக்கது இந்த MAT தேர்வு.

நிப்ட் கல்வி நிறுவனத்தில் லேட்டரல் என்ட்ரி சேர்க்கை

டில்லி: பேஷன் தொழில்நுட்பத்திற்கான தேசிய கல்வி நிறுவனம், பேஷன் டிசைன் மற்றும் பேஷன் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் தான் வழங்கும் இளநிலைப் படிப்பில், லேட்டரல் என்ட்ரி முறையில் சேர்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.
இந்த வகையில் மொத்தம் 178 இடங்கள் உள்ளன. நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். விண்ணப்பித்தலுக்கான கடைசித் தேதி ஏப்ரல் 28.
வழங்கப்படும் படிப்புகள்
Bachelor of Design
1. B.Des. (Fashion Design) - 9 seats
2. B.Des. (Leather Design) - 11 seats
3. B.Des. (Accessory Design) - 54 seats
4. B.Des. (Textile Design) - 22 seats
5. B.Des. (Knitwear Design) - 13 seats
6. B.Des. (Fashion Communication) - 18 seats
Bachelor of Fashion Technology
1. B.F. Tech. - 51 seats
விண்ணப்பக் கட்டணம் ரூ.1100. SC/ST பிரிவினருக்கு ரூ.550. இந்தியா முழுவதும் பல்வேறான நகரங்களில் NIFT கல்வி நிறுவனத்தின் கிளைகள் உள்ளன. விரிவான விபரங்களுக்கு http://www.nift.ac.in/.

எம்.சி.ஏ., படிப்பிற்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

மெஸ்ராவிலுள்ள பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, தான் வழங்கும் முழுநேர MCA படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டித்துள்ளது.
மொத்தம் 60 இடங்களைக் கொண்ட இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க, ஏப்ரல் 25 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணமாக ரூ.2500 செலுத்த வேண்டும். SC/ST பிரிவினர் ரூ.1500 செலுத்தினால் போதுமானது.
ஆன்லைன் தேர்வு மே 31 மற்றும் ஜுன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விபரங்கள் ஜுன் 16ம் தேதி அறிவிக்கப்படும். வகுப்புகள் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கும்.
விரிவான விபரங்களுக்கு: http://www.bitmesra.ac.in/

லிபரல் ஆர்ட்ஸ் பல்கலையில் இளநிலை படிப்புகள்

சென்னை: இந்தியாவின் முதல் லிபரல் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகமான அசோகா பல்கலைக்கழகம், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தனது இளநிலைப் படிப்பைத் தொடங்கவுள்ளது.
ஹரியானா மாநிலத்தின் தனியார் பல்லைக்கழகங்கள் சட்டத்தின் கீழ், லாப-நோக்கமற்று, ஒரு ரெசிடென்ஷியல் பல்கலையாக தொடங்கப்பட்டதுதான் அசோகா பல்கலை.
பொருளாதாரம், வரலாறு, கணிதம் ஆகிய பிரிவுகளிலிருந்தும், Interdiscipline பிரிவுகளான அரசியல் மற்றும் சமூகம், பொருளாதாரம் மற்றும் நிதி ஆகிய பிரிவுகளிலிருந்தும் ஒரு மாணவர், தனக்கான மேஜரை தேர்வு செய்து கொள்ளலாம்.
அடுத்த 7 அல்லது 8 ஆண்டுகளில் இந்த பல்கலை பெரியளவில் விரிவுபடுத்தப்படும். முதல் இளநிலைப் படிப்பு, 350 மாணவர்களுடன் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பல்கலை, பல வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் ஒத்துழைப்பைக் கொண்டுள்ளது. இங்கே, பல்வேறு பிரிவுகளில், மொத்தம் 36 கோர்ஸ் கிரெடிட்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

டில்லி தொழில்நுட்ப பல்கலையில் பி.டெக்., படிப்பு

டில்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பி.டெக்., (மாலை நேர) படிப்பிற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. நுழைவுத் தேர்வின் மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெறும்.
சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பிரிவுகளில் பி.டெக்., படிப்புகள் வழங்கப்படுகின்றன.
விண்ணப்ப படிவத்தை www.dce.edu என்ற வலைதளம் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், தேர்வுக் கட்டணம் ரூ.1,000.
விண்ணப்பிக்கும் கடைசித் தேதி - மே 30.
நுழைவுத்தேர்வு தேதி - ஜுன் 29.
தேர்வு முடிவுகள் வெளியீடு - ஜுலை 7.
பி.டெக்.,(மாலைநேர படிப்பு) சேர்க்கை துவங்கும் நாள் - ஜுலை 21.

முதுநிலை மற்றும் டாக்டோரல் படிப்புகள்

போபால் நகரிலுள்ள பிளானிங் மற்றும் ஆர்கிடெக்சர் கல்வி நிறுவனம், ஆர்கிடெக்சர் மற்றும் பிளானிங் துறையில், டாக்டோரல் மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.
வழங்கப்படும் முதுநிலை படிப்புகள்
Master of Architecture (Conservation)
Master of Landscape Architecture
Master of Urban Planning
Master of Planning (Urban and Regional Planning)
Master of Planning (Environmental Planning)
http://www.spabhopal.ac.in/ என்ற இணையதளம் சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மற்றும் இதர விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பத்தைப் பெறுவதற்கான கடைசித் தேதி - மே 30.
முதுநிலை படிப்பிற்கான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு தேதி - ஜுன் 17 - 18.
டாக்டோரல் படிப்பிற்கான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு தேதி - ஜுன் 23.
சேர்க்கைக்கான கடைசி நாள் - ஜுன் 30.
வகுப்புகள் துவங்கும் நாள் - ஜுலை 30.

இ-அட்மிட் கார்டுகளை பதிவிறக்கம் செய்ய...

இந்தாண்டு நடக்கும் ஒருங்கிணைந்த ஜியோ சயின்டிஸ்ட் மற்றும் ஜியோலஜிஸ்ட் தேர்வுக்கான இ-அட்மிட் கார்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வெழுதுவோர், தங்களின் பதிவு ஐ.டி., ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு, தங்களுக்கான இ-அட்மிட் கார்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
வரும் மே மாதம் 26ம் தேதி வரை, இ-அட்மிட் கார்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.http://upscadmitcard.nic.in/GEODefault.aspx என்ற வலைதளம் சென்று அதை பதிவிறக்கம் செய்யலாம்.

குறுகிய கால இசைப் பயிற்சி வகுப்புகள்

ஏ.ஆர். ரகுமானின் கே.எம். இசைக் கல்லூரி கோடை கால பயிற்சி வகுப்புகளை வழங்குகிறது.
வழங்கப்படும் பயிற்சிகள்
மியூசிக் புரொடக்சன் / ஆடியோ இன்ஜினியரிங் / வெஸ்டர்ன் வாய்ஸ் / வெஸ்டர்ன் பியோனோ போன்ற படிப்புகள் வழங்கப்படுகிறது.
மேற்கண்ட பயிற்சி வகுப்புகள் சிறந்த இசைக்கலைஞர்களைக்கொண்டு கற்றுத் தரப்படுகிறது.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு 98405 80525 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பம் மே 14 முதல் வினியோகம்

சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் மே 14ல் துவங்கும் என தெரிகிறது.
தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள 2,555 எம்.பி.பி.எஸ். இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் (383) போக, 2,172 இடங்களுக்கு மாநில ஒதுக்கீட்டுக்கு கிடைக்கும். இதுதவிர, 13 சுயநிதி கல்லூரிகளில் இருந்து கடந்த ஆண்டு 993 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீடாக கிடைத்தது. அதுபோன்று, இந்த ஆண்டு அதே அளவில் இடங்கள் கிடைக்கும் என, தெரிகிறது.
இந்த இடங்களுக்கு "கட் - ஆப்" மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியாகிறது. இதைத்தொடர்ந்து எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான விண்ணப்பம் மே 14 முதல் வழங்க மருத்துவக்கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு ஒரே விண்ணப்பத்தில் பூர்த்தி செய்தால் போதும். விண்ணப்ப வினியோகம், கட்டணம் குறித்த முறையான அறிவிப்பு இன்று வெளியாகும் என, தெரிகிறது. தமிழகத்தில், சென்னையில் மட்டுமே அரசு பல் மருத்துவக்கல்லூரி உள்ளது.

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு ஆன்லைன் தேர்வு ஜூன் 29ம் தேதி நடக்கிறது

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு ஆன்லைன் தேர்வு ஜூன் 29ம் தேதி நடக்கிறது
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான ஆன்லைன் தகுதித்தேர்வு ஜூன் 29ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான கல்லூரி உதவி பேராசிரியர் தகுதித்தேர்வு ஜூன் 29ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், உளவியல், வரலாறு, அரசியல், அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
இதில் குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். உதவி பேராசிரியருக்கு வயது வரம்பு கிடையாது.
ஜே.ஆர்.எப் தகுதிக்கு மட்டும் வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 28 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உண்டு. இத்தேர்வுக்கு www.ugcnetonline.in என்ற இணையதள முகவரியில் மே 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

ஆன்லைன்மூலம் தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

ஆன்லைன்மூலம் தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
வரும் மே, ஜூன் மாதங்களில் நடைபெற உள்ள அரசு தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் துறையின் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஓவியம், இந்திய இசை, நடனம், அச்சுக்கலை, விவசாயம், கைத்தறி நெசவு மற்றும் தையல் பிரிவுகளுக்கான அரசு தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் மற்றும் அறிவுரைகளை (பக்கம் 1 முதல் 7 வரை) பதிவிறக்கம் செய்து ஏப்ரல் 28 முதல் மே 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குறைந்தபட்ச கல்வித்தகுதிக்கான சான்றிதழின் நகலுடன் இணைத்து விண்ணப்பிக்கும் தேர்வர்கள் வசிக்கும் கல்வி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு மையத்தில் நேரடியாக கொடுக்க வேண்டும்.
கல்வி மாவட்டத்தின் பெயர், ஒருங்கிணைப்பு மையம் என்ற அடிப்படையில் விவரம்:
புதுக்கோட்டை- செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளி, கரூர் - நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரியலூர்- அரசு மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர் - சிறி ராமகிருஷ்ணா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, திருச்சி - மரக்கடை சையது முர்துஷா அரசு மேல்நிலைப் பள்ளி, நாகப்பட்டினம்- நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவாரூர் - கஸ்தூரிபா காந்தி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்- அரசு மேல்நிலைப் பள்ளி, மேம்பாலம்.
ஒருங்கிணைப்பு மையங்களில் கணினி புகைப்படக் கருவிகள் மூலமாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால் அங்கேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொண்ட பின்ன், தேர்வுக் கட்டணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஏற்கெனவே தபால் மூலம் அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுவிட்டன.
தேர்வுக் கட்டணத்துடன் ஆன்லைன் பதிவுக் கட்டணமாக கூடுதலாக ரூ.50-யும் விண்ணப்பத்தை நேரில் சமர்ப்பிக்கும்போது பணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை மே 3-ம் தேதி மாலை 5 மணிவரை ஒருங்கிணைப்பு மையங்களில் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை.யில் எம்.எஸ்சி., எம்.ஃபில். சேர்க்கை அறிவிப்பு

அண்ணா பல்கலை.யில் எம்.எஸ்சி., எம்.ஃபில். சேர்க்கை அறிவிப்பு
கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் எம்.ஐ.டி. வளாகங்களில் வழங்கப்படும் எம்.எஸ்சி., எம்.ஃபில். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இந்தப் படிப்புகளில் சேர விரும்புவோர் www.annauniv.edu இணைய தளம் மூலம் பதிவு செய்து, விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பின்னர் ஆன்-லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பக் கட்டணம் ரூ. 700-க்கான வரைவோலையை இணைத்து "இயக்குநர், மாணவர் சேர்க்கை மையம், அண்ணா பல்கலை, சென்னை - 25' என்ற
முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவு மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 350 செலுத்தினால் போதுமானது.
முக்கியதேதிகள்:
இணைய தளம் மூலம் பதிவு ஆரம்பம்: 28.4.2014 பதிவு செய்ய கடைசித்தேதி: 26.5.2014 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசித் தேதி:30.5.2014

Friday, April 25, 2014

SBI PO Exam 2014 -->> Today is the Last Day to Apply for 1800 PO Jobs in SBI 

Vacancies: 1837 Posts

Salary : Rs 70,000 (Approx.) Per Month

Age : Min : 21 years and Max: 30 Years

Last Date to Apply : 25th April, 2014

For Full Details, Click this Link ▬► http://bit.ly/1shpAyx

Please Share this Vacancy With Everyone.

Thursday, April 24, 2014

அப்ளிகேஷன் போட்டாச்சா?

அப்ளிகேஷன் போட்டாச்சா?

என்.ஐ.எஸ்.சி.ஐ. நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி
நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கம்யூனிகேஷன் அண்ட்  இன்ஃபர்மேஷன் ரிசோர்ஸ் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணியில் சேர விண்ணப்பிக்கலாம். பிரிண்டிங் டெக்னாலஜி துறையில் டிப்ளமோ  அல்லது பயோலாஜிகல் சயின்ஸ் பிரிவில் பி.எஸ்சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  
விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.04.2014
விவரங்களுக்கு: www.niscair.res.in


அணுசக்தி துறையில் 60 ஜூனியர் உதவியாளர் பணி
த்திய அரசின்கீழ் இயங்கி வரும் அணுசக்தி துறையில் ஜூனியர் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு துறையில் பட்டம் அல்லது மெட்டீரியல் மேனேஜ்மெண்ட் பிரிவில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  தாழ்த்தப்பட்டோருக்கு 8 காலியிடங்களும், பழங்குடியினருக்கு 6 காலியிடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 16 காலியிடங்களும், பொதுப் பிரிவினருக்கு 30 காலியிடங்களும் உள்ளன.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.04.2014
விவரங்களுக்கு: www.www.dpsdae.gov.in


இஸ்ரோவில் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணி
ந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் நிறுவனத்தில் (இஸ்ரோ) ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணியில் சேர விண்ணப்பிக்கலாம். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவில் பி.இ./ பி.டெக். அல்லது வேதியியல், applied optics,  இயற்பியல் ஆகிய பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் எம்.எஸ்சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.04.2014
விவரங்களுக்கு: www.isro.gov.in


சென்னை சி.சி.ஆர்.எஸ். நிறுவனத்தில் ரிசர்ச் அதிகாரி பணி
சென்னையில் இயங்கி வரும் சென்ட்ரல் கவுன்சில் ஃபார் ரிசர்ச் இன் சித்தா நிறுவனத்தில் ரிசர்ச் அதிகாரி பணியில் சேர விண்ணப்பிக்கலாம். சித்தா பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். காலியிடங்கள்: 20
விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.05.2014
விவரங்களுக்கு: www.siddharesearchcouncil.org


ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் பணி
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அப்ரண்டீஸ் பணிக்கு ஃபிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், எலெக்ட்ரீஷியன், வெல்டர், கார்பென்டர், பிளம்பர், டீசல் மெக்கானிக், பெயிண்டர், எலெக்ட்ரானிக், மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.   
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.04.2014
விவரங்களுக்கு: www.hal-india.com