Wednesday, May 11, 2016

தொடக்க கல்வி பட்டய தேர்வு; விண்ணப்பிக்க அழைப்பு

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஆன்லைனில் GOOGLEல் சென்று ADDRESS BARல் 218.248.44.57/diet என டைப் செய்து DOWNLOAD APPLICATION FORMஎன்பதை 
CLICK செய்து விண்ணப்பத்தையும்பக்கம் 1 முதல் 4வரையுள்ள அறிவுரைகளை பதிவிறக்க செய்ய வேண்டும்.
தேர்வரின் தகுதி மற்றும் தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களை கண்டிப்பாக இணைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேரடியாக சென்று சமர்ப்பிக்க வேண்டும். அங்கு பொருத்தப்பட்டுள்ள கணினி புகைப்படக் கருவிகள் மூலமாக புகைப்படம் எடுக்கவும்,தேர்வு கட்டணம் செலுத்தவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே தனித்தேர்வர்கள் அலைச்சலின்றி,சிரமமின்றி எளிதாக விண்ணப்பிக்க மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனத்தை அணுகலாம்.
ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50, முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மதிப்பெண் சான்றிதழுக்கு ரூ.100, பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ.15, ஒரு விண்ணப்பத்திற்கு ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 ம் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
மே முதல் மே 14 மாலை மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும். தபால் மூலமாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனஅரசுத் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment