Monday, March 6, 2017

சட்ட நுழைவுத்தேர்வு: மார்ச் 31 கடைசி நாள்

: 'தேசிய சட்டப் பள்ளி மற்றும் பல்கலைகளில் சேர விரும்புவோர், பொது சட்ட நுழைவுத் தேர்வுக்கு, வரும், 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி துணைவேந்தர் கமலா சங்கரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி உட்பட, பெரும்பாலான தேசிய சட்டப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை, 'சி.எல்.ஏ.டி.,' என்ற பொது சட்ட நுழைவுத் தேர்வு மூலம் நடக்கிறது. அதன்படி, 2017ம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வை, பீகார் மாநிலம், பாட்னாவில் உள்ள சாணக்கியா தேசிய சட்டப் பல்கலை நடத்துகிறது.சட்டப் பள்ளி, பல்கலையில் சேர விரும்புவோர், சி.எல்.ஏ.டி., 2017 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். சேர்க்கை விதிகள், கட்டணம் உள்ளிட்ட விபரங்களை, www.clat.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க, வரும், 31ம் தேதி கடைசி நாள். நுழைவுத் தேர்வு, மே 14ல், இணையம் வழியாக, திருச்சி, கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நடக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது

No comments:

Post a Comment