Sunday, July 27, 2014

தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஓடி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் உள்ள இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

தமிழ்நாட்டில் உள்ள 19  அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம்., பி.பி.டி., பி.ஏ.எஸ்.எல்.பி. (செவித்திறன், பேச்சு மற்றும் மொழிநோ குறியியல்), பி.எஸ்சி., ரேடியாலஜி மற்றும் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.ஓ.டி. ஆகிய படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில் சேர விரும்பும் உயிரியல் பாடத்தை எடுத்து பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ் டூ வகுப்பில் தொழிற்கல்வியை பாடமாக எடுத்துப் படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பக் கட்டணம் ரூ.350. ‘செயலாளர், தேர்வுக் குழு, கீழ்ப்பாக்கம், சென்னை- 10’ என்ற பெயரில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் டிமாண்ட் டிராப்ட் எடுக்க வேண்டும். அதனுடன் விண்ணப்பக் கேட்புக் கடிதத்தையும் டிமாண்ட் டிராப்ட்டையும் இணைத்து, 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கொடுத்து விண்ணப்பத்தை நேரில் பெற்றுக்கொள்ளலாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. கெஜட்டட் அலுவலர்களிடம் சான்றொப்பம் பெற்ற இரண்டு சாதிச் சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பக் கேட்புக் கடிதத்தை இணைத்துக் கொடுத்து, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல், மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

சென்னையில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி.), ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, மதுரையிலுள்ள அரசு இராஜாஜி மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, சேலத்திலுள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, திருச்சியிலுள்ள கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, வேலூர் மருத்துவக் கல்லூரி, தேனி மருத்துவக் கல்லூரி, தர்மபுரி மருத்துவக் கல்லூரி,  விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, திருவாரூர் மருத்துவக் கல்லூரி, சிவகங்கை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி ஆகிய 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கும். கீழ்ப்பாக்கத்திலுள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் தேர்வுக் குழு அலுவலகத்தில் விண்ணப்பங்கள் கிடைக்காது.

சம்பந்தப்பட்ட இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், இந்த அனைத்துப் பட்டப் படிப்புகளிலும் சேருவதற்கு ஒரே விண்ணப்பம் அனுப்பினால் போதுமானது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

செயலாளர், தேர்வுக் குழு,
162, ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
கீழ்ப்பாக்கம், சென்னை - 600010.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 19.07.2014
விவரங்களுக்கு: www.tnhealth.org, www.tn.gov.in

No comments:

Post a Comment