Tuesday, February 2, 2016

அரசு விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசு விளையாட்டுத் துறையின் கீழ் செயல் பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் மூலமாக கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்காக சிறப்பு விளையாட்டு விடுதிகள் சென்னையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
2016-17-ம் ஆண்டுக்கான சிறப்பு விளையாட்டு விடுதியில் சேருவதற்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மாணவர்கள் தடகளம், கூடைப்பந்து, குத்துச் சண்டை, கையுந்து பந்து, டேக்வாண்டோ, நீச்சல், வாள் சண்டை, துப்பாக்கி சுடுதல், பளு தூக்குதல், ஜூடோ, இறகுப் பந்து, மேசைப் பந்து மற்றும் மாணவி களுக்கு தடகளம், குத்துச்சண்டை, கையுந்து பந்து, கால்பந்து, டேக்வாண்டோ, நீச்சல், வாள் சண்டை, துப்பாக்கிச் சுடுதல், பளு தூக்குதல், ஜூடோ, இறகுப் பந்து, மேசைப் பந்து ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படும்.
இந்த விடுதியில் சேர மாணவ, மாணவிகள் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் சம்பந்தப்பட்ட விளையாட்டில் மாநில அளவில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பப் படிவங் கள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 18-ம் தேதிக்குள் சிறப்பு நிலை விளையாட்டு விடுதி, அறை எண் 76, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, சென்னை-3 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கவும். தேர்வு வரும் 20, 21-ம் தேதிகளில் நடைபெறும்.

No comments:

Post a Comment