Tuesday, April 29, 2014

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பம் மே 14 முதல் வினியோகம்

சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் மே 14ல் துவங்கும் என தெரிகிறது.
தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள 2,555 எம்.பி.பி.எஸ். இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் (383) போக, 2,172 இடங்களுக்கு மாநில ஒதுக்கீட்டுக்கு கிடைக்கும். இதுதவிர, 13 சுயநிதி கல்லூரிகளில் இருந்து கடந்த ஆண்டு 993 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீடாக கிடைத்தது. அதுபோன்று, இந்த ஆண்டு அதே அளவில் இடங்கள் கிடைக்கும் என, தெரிகிறது.
இந்த இடங்களுக்கு "கட் - ஆப்" மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியாகிறது. இதைத்தொடர்ந்து எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான விண்ணப்பம் மே 14 முதல் வழங்க மருத்துவக்கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு ஒரே விண்ணப்பத்தில் பூர்த்தி செய்தால் போதும். விண்ணப்ப வினியோகம், கட்டணம் குறித்த முறையான அறிவிப்பு இன்று வெளியாகும் என, தெரிகிறது. தமிழகத்தில், சென்னையில் மட்டுமே அரசு பல் மருத்துவக்கல்லூரி உள்ளது.

No comments:

Post a Comment