Tuesday, April 29, 2014

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு ஆன்லைன் தேர்வு ஜூன் 29ம் தேதி நடக்கிறது

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு ஆன்லைன் தேர்வு ஜூன் 29ம் தேதி நடக்கிறது
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான ஆன்லைன் தகுதித்தேர்வு ஜூன் 29ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான கல்லூரி உதவி பேராசிரியர் தகுதித்தேர்வு ஜூன் 29ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், உளவியல், வரலாறு, அரசியல், அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
இதில் குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். உதவி பேராசிரியருக்கு வயது வரம்பு கிடையாது.
ஜே.ஆர்.எப் தகுதிக்கு மட்டும் வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 28 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உண்டு. இத்தேர்வுக்கு www.ugcnetonline.in என்ற இணையதள முகவரியில் மே 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment