Tuesday, April 29, 2014

லிபரல் ஆர்ட்ஸ் பல்கலையில் இளநிலை படிப்புகள்

சென்னை: இந்தியாவின் முதல் லிபரல் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகமான அசோகா பல்கலைக்கழகம், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தனது இளநிலைப் படிப்பைத் தொடங்கவுள்ளது.
ஹரியானா மாநிலத்தின் தனியார் பல்லைக்கழகங்கள் சட்டத்தின் கீழ், லாப-நோக்கமற்று, ஒரு ரெசிடென்ஷியல் பல்கலையாக தொடங்கப்பட்டதுதான் அசோகா பல்கலை.
பொருளாதாரம், வரலாறு, கணிதம் ஆகிய பிரிவுகளிலிருந்தும், Interdiscipline பிரிவுகளான அரசியல் மற்றும் சமூகம், பொருளாதாரம் மற்றும் நிதி ஆகிய பிரிவுகளிலிருந்தும் ஒரு மாணவர், தனக்கான மேஜரை தேர்வு செய்து கொள்ளலாம்.
அடுத்த 7 அல்லது 8 ஆண்டுகளில் இந்த பல்கலை பெரியளவில் விரிவுபடுத்தப்படும். முதல் இளநிலைப் படிப்பு, 350 மாணவர்களுடன் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பல்கலை, பல வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் ஒத்துழைப்பைக் கொண்டுள்ளது. இங்கே, பல்வேறு பிரிவுகளில், மொத்தம் 36 கோர்ஸ் கிரெடிட்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment