Friday, July 29, 2016

இன்ஜினியர்களை அழைக்கிறது கடற்படை!

திருமணம் ஆகாத, இந்திய குடியுரிமை பெற்ற இருபாலரும், பல்கலைக்கழக நுழைவுத் திட்டத்தின் கீழ், இந்திய கடற்படையில் சேர்ந்து பயிற்சி பெற மற்றும் பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு!

வயது வரம்பு: ஜூலை 2017ம் தேதி நிலவரப்படி 21 முதல் 24க்குள் இருத்தல் வேண்டும்.
தகுதிகள்: கீழ்க்காணும் அனைத்து பணியிடங்களுக்கும் குறிப்பிடப்பட்ட பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எக்ஸிகியூடிவ் பிரிவு
ஜெனரல் சர்வீஸ் (ஆண்):
 மெக்கானிக்கல், மரைன், ஏரோநாடிக்கல், புரோடக்ஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கன்ட்ரோல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ்.
அப்சர்வர் (இருபாலர்) மற்றும் பைலட் (இருபாலர்) பணியிடங்கள்: பிளஸ் 2வில், இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பாடங்களை முதன்மை பாடமாக பயின்று, ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ., /பி.டெக்., பட்டம்.
ஐ.டி.,(ஆண்) பணியிடங்கள்: இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்.
டெக்னிக்கல் பிரிவு:
இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரிக்கல் (ஆண்) பணியிடங்கள்: மெக்கானிக்கல், மரைன், ஏரோநாடிக்கல், புரோடக்ஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கன்ட்ரோல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ்.
நாவல் ஆர்கிடெக்சர் (இருபாலர்) பணியிடங்கள்: மெக்கானிக்கல், சிவில், ஏரோநாட்டிக்கல் மற்றும் ஏரோஸ்பேஸ்.
சப் மரைன் டெக்னிக்கல்:
இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரிக்கல் (ஆண்) பணியிடங்கள்: குறிப்பிடப்பட்ட ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ., / பி.டெக்., பட்டம்.
தேர்வு முறை: போபால், விசாகப்பட்டிணம், கோவை, பெங்களூர் போன்ற இடங்களில் நேர்முகத் தேர்வு நடைபெறும். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சர்வீஸ் செலக்ஷன் போர்டின் இருநிலைத்தேர்வு நடத்தப்படும். பைலட் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, பைலட் ஆப்டிடியூட் பெட்டரி டெஸ்ட் (பி.ஏ.பி.டி.,) நடைபெறும்.
நிலை 1: ஒரு நாள் நடைபெறும் முதலாம் தேர்வு நிலையில், நுண்ணறிவுத் தேர்வு, படம் உணர்தல் மற்றும் விவாதத் தேர்வு நடைபெறும்.
நிலை 2: நான்கு நாட்கள் நடைபெறும் இரண்டாம் தேர்வு நிலையில், உளவியல் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு உள்ளிட்டவை இடம் பெறும்.
இறுதியாக, நேஷனல் ஓரியன்டேஷன் கோர்ஸ்(என்.ஒ.சி.,) பயிற்சிகள் வழங்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் பணியில் அமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 7
மேலும் விவரங்களுக்கு: www.joinindiannavy.gov.in

No comments:

Post a Comment