Saturday, August 6, 2016

கல்வி உதவித்தொகை; விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி அறிவிப்பு!

சிறுபான்மையின மாணவமாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவரும், 31ம் தேதி கடைசி நாள் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுஉதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட க
ல்வி நிலையங்களில், முதல் வகுப்பு துவங்கி, 10ம் வகுப்பு வரை படிக்கும் கிறிஸ்தவர்இஸ்லாமியர்புத்தசீக்கியபார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச் சார்ந்த சிறுபான்மையின மாணவமாணவியருக்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதுதான் தகுதி
இத்திட்டத்தின் கீழ்ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. கல்வி உதவித் தொகை பெற,மாணவமாணவியரின் பெற்றோர்பாதுகாவலர்களின் ஆண்டு வருமானம்ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவமாணவியர் முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில், (முதல் வகுப்பு நீங்கலாக ) 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்றுதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டஆதி திராவிடர் நலத்துறை மற்றும் பிற துறைகள்நல வாரியங்கள் மூலம் கல்வி உதவித் தொகை பெற்றிருத்தல் கூடாதுஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
எப்படி விண்ணப்பிக்கணும் உதவித் தொகை விண்ணப்பங்களை www.scholarship.gov.in என்ற இணைய தள முகவரியில் ஆன் லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன் லைனில் விண்ணப்பிக்கும் போதுஇணைக்க வேண்டிய ஆவணங்களை ஸ்கேன் செய்து,அப்லோடு செய்ய வேண்டும். விண்ணப்பித்த பின்விண்ணப்பித்தை படியிறக்கம் செய்துகல்வி நிலையங்களில்வரும், 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி நிலையங்கள்மாணவமாணவியரிடம் இருந்து பெற்ற விண்ணப்பங்களைச் சரிபார்த்துஆன் லைன் மூலம், 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தகுதியுள்ள மாணவமாணவியரின் பெயர் பட்டியலை கையொப்பத்துடன்மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் வழங்க வேண்டும்.
நீலகிரி கலெக்டர் சங்கர் கூறுகையில்,சிறுபான்மையின மாணவமாணவியர் கல்வித் உதவித் தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயன் பெற வேண்டும்என்றார்.

No comments:

Post a Comment