Wednesday, May 14, 2014

தூத்துக்குடி: "தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் பட்டப்படிப்புக்கு "ஆன் லைன்" மூலம் விண்ணப்பிக்கலாம்" என மீன்வளப் பல்கலை துணைவேந்தர் பாஸ்கரன் மணிமாறன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இதுவரை, கால்நடை பல்கலை மூலம் தான் மீன்வளப் படிப்புக்கு விண்ணப்பம் பெறப்பட்டது. மீன்வளப் பல்கலை அமைந்த பின், முதன் முறையாக மீன்வளப் படிப்பு (பி.எப்.எஸ்சி.) பட்டத்திற்கு விண்ணப்பம் பெறப்பட உள்ளது. மீன் வளக்கல்லூரி: தென்கிழக்கு ஆசியாவில் இரண்டாவதாக துவக்கப்பட்டது, தூத்துக்குடி மீன் வளக்கல்லூரி. கடந்த 1977 முதல் இயங்கிவருகிறது.
இந்தியாவில் உள்ள 21 கல்லூரிகளில் "முதல் தர" கல்லூரி. மீன்வளப் பட்டதாரிகள் அனைவரும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் 15 சதவீதம் பேர் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். "ஆன் லைன்" மட்டும்: மீன்வளப் பட்டப்படிப்புக்கு "ஆன் லைன்" மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். www.tnfu.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதில் 40 மாணவர் சேர்க்கப்படுவர்.
இன்று முதல் (மே 14) ஜூன் 10 வரை விண்ணப்பிக்கலாம்; விண்ணப்பக் கட்டணம் 600, ஆதிதிராவிடர்களுக்கு 300 ரூபாய். வரைவோலை (டி.டி.,) எடுத்து "ஆன் லைன்" விண்ணப்பத்தில் அதன் எண்ணை குறிப்பிட வேண்டும்.
தகுதிகள்
பிளஸ் 2 தேர்ச்சி. அதற்கு இணையான அங்கீகரிக்கப்பட்ட தேர்வில் உயிரியல் அல்லது விலங்கியல், தாவரவியலுடன் இயற்பியல், வேதியியல் படித்திருக்க வேண்டும். உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் பாடங்களில் பிற்பட்டோர் 60 சதவீதம், மிகவும் பிற்பட்டோர் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்; ஆதிதிராவிடர், தேர்ச்சி பெற்றால் போதும். வேதியியல், இயற்பியல் இரண்டிலும் சேர்த்து பிற்பட்டோர், இதரவகுப்பினர் 60 சதவீதம், மிகவும் பிற்பட்டோர் 55 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முகவரி: மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி- 628 008. போன்: 0461- 234 0554.

No comments:

Post a Comment