Wednesday, May 7, 2014

தமிழக மாணவர்களுக்கும் ஆழ்கடல் மீன்பிடிப்பு வணிக கப்பல்களில் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, வெசல் நேவிகேட்டர், மரைன் பிட்டர் போன்ற பணிகளுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய கடல்சார், மீன்வள தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (சிப்நெட்) இதற்கான பயிற்சியை அளிக்கிறது.
தலைமை வேலைவாய்ப்பு பயிற்சி இயக்குனரகத்தின் அங்கீகாரம் பெற்ற இப்பயிற்சிகள் இரண்டாண்டு காலத்துக்கு அளிக்கப்படும். 10ம் வகுப்பில் கணிதம், அறிவியல் பாடங்களில் 50 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தகுதித்தேர்வு ஜூன் 21ம் தேதி நடைபெறுகிறது.
அதில் தகுதி பெறும் மாணவர்களுக்கு ரூ.1500 உதவித்தொகை மற்றும் தங்கும் விடுதி ஆகியவை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை மே 16ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை மே 16ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 044 - 25952691, 25952692, 25952693, www.cifnet.gov.in

No comments:

Post a Comment